தஷ்வந்துக்கு எதிராகக் களமிறங்கும் சாட்சிகள்..! ஹாசினி வழக்கில் விரைவில் தீர்ப்பு



செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிறுமி ஹாசினி கொலைவழக்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் சாட்சிகள் விரைவாக விசாரிக்கப்படுவதால், தீர்ப்பு இந்த மாதமே வெளியாகலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் ஆறு வயது மகள் ஹாசினி திடீரெனக் காணாமல் போனார். இதுகுறித்து ஹாசினியின் தந்தை பாபு அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். ஹாசினி வசித்து வந்த அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் என்ற 24 வயது இளைஞர் மீது சந்தேகம் வந்ததால் அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமி ஹாசினியை தஷ்வந்த் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்ததுடன், சிறுமியின் உடலை வெளியே கொண்டுசென்று எரித்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்கில் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினர் நீதிமன்றத்தில் உரிய விளக்கமளிக்காததால், நீதிமன்றம் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதனால் சிறையிலிருந்து வெளியேவந்த தஷ்வந்த், தனது பெற்றோருடன் வசித்துவந்தார். இந்நிலையில், டிசம்பர் 2-ம் தேதியன்று, தஷ்வந்த் தன் தாய் சரளாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். 

Sponsored


Sponsored


பின்னர் அவரை காவல்துறையினர் மும்பையில் கைது செய்து, சென்னை கொண்டு வந்தனர். இந்த நிலையில், டிசம்பர் 13-ம் தேதி தஷ்வந்தை, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த பெண்கள், யாரும் எதிர்பாராத நிலையில் செருப்பு உள்ளிட்டவற்றால் தஷ்வந்தைத் தாக்கினர். அப்போது தஷ்வந்தின் வழக்கறிஞர் விஜயகுமார் வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், தானே வாதாடுவதாக தஷ்வந்த் நீதிபதியிடம் தெரிவிக்க, இலவச சட்ட ஆலோசனை மையத்தை நாடுமாறு நீதிபதி வேல்முருகன் அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து விடுமுறை தினங்களிலும் ஹாசினி கொலைவழக்கு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தினந்தோறும் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரும் போதெல்லாம் பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து வரப்படுகிறார். 

Sponsored


புழல் சிறையில் அவருக்கான மதிய உணவை கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். வழக்கு முடிந்ததும் வேனில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிடுகிறார் அவர். 'நான் ஹாசினியைக் கொலைசெய்யவில்லை' என மீடியாவிடம் தெரிவிப்பதால், அவரை மீடியாவிடம் நெருங்கவிடாமல் காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்கின்றனர். 

இது குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ராஜகுமார், “சதானந்தபுரம் நிக்கிதா குடியிருப்பில் உள்ளவர்கள், மருத்துவர்கள், பெட்ரோல் பங்கில் வேலைசெய்பவர்கள், அப்பாச்சி வாகனத்தை வாங்கிய ஷோரூமில் உள்ளவர்கள் என ஹாசினி கொலை வழக்கு தொடர்பாக மொத்தம் 34 சாட்சிகளை காவல்துறையினர் தயார் செய்துள்ளனர். அதில் இதுவரை 20 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. ஆண்மை பரிசோதனை குறித்து செங்கல்பட்டு யுரியாலஜி மருத்துவர் செந்தில் குமார்,  ஹாசினி உடலை உடற்கூறு ஆய்வு செய்த கீழ்ப்பாக்கம் மருத்துவர் கிருத்திகா தேவி, ஹாசினியின் பெற்றோர் பாபு, ஸ்ரீதேவி, அதே குடியிருப்பில் வசித்து வந்த புஷ்பா, கோகுல்தாஸ், சிசிடிவி கேமராவில் பதிவான கோயில் தர்மகர்த்தா உள்ளிட்டவர்களை சாட்சியங்களாக விசாரணை செய்திருக்கின்றனர். மேலும் மாங்காடு கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் முன்னிலையில் வாக்குமூலம் பெற்று பைக், ஹெல்மட், காலி கேன் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். அந்தச் சாட்சியங்களும் விசாரணை செய்யப்பட்டுள்ளது. டி.என்.ஏ. டெஸ்ட், உடற்கூறு ஆய்வு வேதியியல் முடிவுகள் போன்ற 14 சாட்சியங்கள் இன்னும் விசாரிக்கப்படவில்லை. மீண்டும் ஜனவரி 8ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது மற்ற சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த வழக்கு குறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ராஜகுமார், “சதானந்தபுரம் நிக்கிதா குடியிருப்பில் உள்ளவர்கள், மருத்துவர்கள், பெட்ரோல் பங்கில் வேலைசெய்பவர்கள், அப்பாச்சி வாகனத்தை வாங்கிய ஷோரூமில் உள்ளவர்கள் என ஹாசினி கொலைவழக்கு தொடர்பாக, மொத்தம் 34 சாட்சிகளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுவரை 20 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தஷ்வந்த் ஆண்மை பரிசோதனை  குறித்து செங்கல்பட்டு மருத்துவர் செந்தில் குமார், ஹாசினி உடலை உடற்கூறு ஆய்வுசெய்த கீழ்ப்பாக்கம் மருத்துவர் கிருத்திகா தேவி, ஹாசினியின் பெற்றோர் பாபு, ஸ்ரீதேவி, அதே குடியிருப்பில் வசித்து வந்த புஷ்பா, கோகுல்தாஸ், சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கோயில் தர்மகர்த்தா உள்ளிட்டவர்களை சாட்சியங்களாக விசாரணை செய்திருக்கின்றனர். மேலும், மாங்காடு கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் முன்னிலையில் வாக்குமூலம் பெற்று பைக், ஹெல்மட், காலி கேன் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் கைப்பற்றினார்கள். அந்தச் சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.  டி.என்.ஏ. டெஸ்ட், உடற்கூறு ஆய்வு வேதியியல் முடிவுகள் போன்ற 14 சாட்சியங்கள் இன்னும் விசாரிக்கப்படவில்லை. மீண்டும் இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 8-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் வரவுள்ளது. அப்போது இதர சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதுவரை நடைபெற்ற விசாரணையில் தஷ்வந்திற்கு எதிராக சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். தஷ்வந்த் ஆண்மை சக்தி உள்ளவர்தான் என மருத்துவர் செந்தில் குமார் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். அதுபோல் 'அந்த அப்பாச்சி பைக் எங்களிடம் வாங்கப்பட்டதுதான்' என ஷோரூம் உரிமையாளர் சாட்சியளித்துள்ளார். பெட்ரோல் பங்கில் வேலைசெய்த சந்தோஷ் குமார், ‘சம்பந்தப்பட்ட தினத்தன்று எங்களிடம் பெட்ரோல் கேட்டார். நாங்கள் கேனில் பெட்ரோல் தருவதில்லை என்று சொன்னோம். வீட்டில் கார் ரிப்பேர் ஆகிவிட்டது எனக் கேட்டதால் பெட்ரோல் கொடுத்தோம். அதற்கு ஆக்சிஸ் பேங்க் கார்டு மூலம் பணம் செலுத்தி பெட்ரோல் வாங்கினார்’ என சாட்சியம் அளித்திருக்கிறார். செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஹாசினி கொலைவழக்கு மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. தஷ்வந்த் தாய் கொலை செய்யப்பட்ட வழக்கு, அதன் பிறகே நடைபெறும். இந்த வழக்கின் தீர்ப்பு ஜனவரி மாதமே வர வாய்ப்புள்ளது. அதில் தஷ்வந்திற்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.



Trending Articles

Sponsored