``பி.ஜே.பி-க்கு பலம் இல்லை என்றால் போங்களேன்!” யாரைச் சொல்கிறார் தமிழிசை?



Sponsored



``தமிழகத்தில் தேசியக் கட்சிகள் காலூன்ற முடியாது” என துணை முதலமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பது தமிழக அரசியலில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. 

`பி.ஜே.பி-யுடன் கைகோத்துக்கொண்டு, தமிழகத்தை ஓ.பி.எஸ். அடகுவைத்துவிட்டார்' என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். அதுமட்டுமன்றி, அவர் முதல்வராக இருந்தபோது, அவரைப் பின்னால் இருந்து பி.ஜே.பி. இயக்குகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

Sponsored


இந்த நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒட்டுமொத்த தேசியக் கட்சிகளையும் தாக்கும்வகையில்  பேசியுள்ளார். அப்போது அவர், “தமிழகத்தில் தேசியக் கட்சிகள் எந்தக் காலத்திலும், எந்த நிலையிலும் காலூன்ற முடியாது. அதுதான் தமிழக மக்களின் தீர்ப்பு” என்றார். அவரின் இந்தக் கருத்து, தமிழக அரசியல்களத்தில் உற்றுநோக்கப்படுகிறது.

Sponsored


இதுகுறித்து, பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசியபோது, “தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற முடியாது என ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக கேள்விப்பட்டேன். அவர் பி.ஜே.பி-யை மனதில் வைத்து அப்படிப் பேசியிருக்க மாட்டார் என்பது என்னுடைய எண்ணம். 

பன்னீர்செல்வம் மட்டுமல்ல, பி.ஜே.பி-யை மறைமுகமாகத் தாக்கும் விதத்தில், `தமிழகத்தில் தேசியக் கட்சிகள் காலூன்ற முடியாது’ என வேறு சில கட்சியைச் சேர்ந்தவர்களும் சொல்லத் தொடங்கியுள்ளனர். பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் பலமே இல்லை என்றும் பி.ஜே.பி-யால் தமிழகத்தில் ஆட்சிக்கு வரமுடியாது என்றும் கூறிவருகின்றனர்.

பி.ஜே.பி-யைக் குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் சொன்னதாக நான் எடுத்துக்கொள்ளவில்லை. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை மனதில் வைத்து அவர் இவ்வாறு கூறியிருக்கலாம். பி.ஜே.பிக்கு பலம் இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்வதை விட்டுவிட்டு, விலகிப் போங்களேன். இதுபோன்று ஏன் பேசிக்கொண்டிருக்க வேண்டும்? வார்த்தைகளால் எங்களுடைய பலத்தை நிரூபிப்பதைவிட செயலில் நிரூபித்துக் காட்டுவோம். அப்போது யார் பலம் பொருந்தியவர்கள் என்பது தெரியவரும். ஒரு தேசியக்கட்சி திடீரென காலூன்றி வளர்ச்சி பெறுவது சாதாரண காரியமல்ல; அதேநேரத்தில் அது முடியாத காரியமும் இல்லை. அந்த நம்பிக்கையோடுதான் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் படிவத்தை நாங்கள் கட்சியின் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளோம். இந்தத் தேர்தலில், ‘வெளிப்படையான நிர்வாகத்தை நாங்கள் தருகிறோம். அதனால் பி.ஜே.பி-யைப் புறக்கணிக்காமல் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளோம். பி.ஜே.பி. போன்ற வலுவான கட்சியால் மட்டுமே மக்கள் நலத்திட்டங்களைத் திறம்பட செயல்படுத்த முடியும். அதற்கான மாற்றத்தை நாங்கள் தேடுகிறோமே தவிர, ஆட்கள் யாரையும் தேடவில்லை. அதுபோன்றதொரு சூழ்நிலை பி.ஜே.பி-யில் இல்லை" என்றார்.

இதுதொடர்பாக மேலும் சில கேள்விகளை தமிழிசை சவுந்தரராஜனிடம் முன்வைத்தோம்.

``கம்யூனிஸ்ட் கட்சியையோ, காங்கிரஸ் கட்சியையோ ஓ.பி.எஸ் குறிப்பிடுகிறார் என்றால், அவர் அந்தக் கட்சிகளின் பெயர்களைக் கூறியிருக்கலாமே? தேசியக் கட்சிகள் எனப் பொதுவாக ஏன் சொல்லவேண்டும்?”

``அவர் சொல்லிய வார்த்தைகளைத் தனித்தனியாக நான் ஆய்வு செய்ய விரும்பவில்லை. மேலும் ஓ.பி.எஸ்ஸின் அந்தப் பேச்சு குறித்து சுதந்திரமாகச் சிந்திக்க எனக்கு உரிமை இருக்கிறது. அவற்றை எந்தவகையில் நான் எடுத்துக்கொள்ள வேண்டுமோ, அந்தவகையில் எடுத்துக் கொள்வேன்."

``தேசியக் கட்சிகள் என்று சொன்னால் பி.ஜே.பி-யும் அதில் இடம்பெற்றிருக்கிறது என்பது பன்னீர்செல்வத்துக்குத் தெரியாதா? மேலும், அவர் உங்கள் கட்சியுடன் இணக்கத்துடன் உள்ளார். அப்படி இருக்கும்போது ஏன் அவர் இவ்வாறு ஒரு கருத்தை வெளியிட வேண்டும்?"

“அவர் இணக்கத்துடன்தான் உள்ளார்... ஆனால், பி.ஜே.பி--யைச் சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன். ஒன்றை மட்டும் உங்களுக்குத் தெளிவுபடுத்தவிரும்புகிறேன். ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசுடன்தான் இணக்கத்துடன் உள்ளார். எங்கள் கட்சியுடன் அல்ல. அவருக்கு கருத்துச் சொல்ல உரிமை உள்ளது. அந்த அடிப்படையில் அவர் பேசியிருக்கலாம். அதுபற்றி நாங்கள் ஆய்வுசெய்ய விரும்பவில்லை.”

சென்னையில் நடக்கும் CSK போட்டியை நேரில் காண க்ளிக் செய்க...



Trending Articles

Sponsored