“துணைவேந்தர் கீதாலட்சுமி மீதான ஊழல் குற்றச்சாட்டில் மௌனம் ஏன்?” - அறப்போர் இயக்கம் கேள்விSponsoredஉதவிப் பேராசிரியர் பதவிக்கு பல்கலைக் கழகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக தொடர்ந்து  குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது விவகாரத்தைத் தொடர்ந்து பல்கலைக் கழகங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாகக் கூறப்பட்டுவந்த குற்றச்சாட்டு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 'ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான துணைவேந்தர்கள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை...' என்றக் கேள்வியும் எழுந்துள்ளது. 

எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி மீது ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனாலும், அவர் மீது ஆளுநர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை...' என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்

Sponsored


கடந்த ஆண்டு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில், ஏராளமான ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டன. மேலும் கீதாலட்சுமியை, வருமான வரித்துறை அலுவலகத்துக்கே வரவழைத்து விசாரணையும் நடத்தினர். இதையடுத்து, எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 17 ஓ.ஏ பணியிடங்களை நிரப்ப, கீதாலட்சுமி பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியிருந்ததாகவும், ஆய்வியல் மாணவர்களிடமும் அவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு தேர்வு முடிவுகளை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்தக் குற்றச்சாட்டுகள் காரணமாக அவருடைய பதவி பறிக்கப்படலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், அவ்வாறான நடவடிக்கைகள் எதுவும் அவர்மீது எடுக்காத நிலையில், கீதாலட்சுமி விவகாரம் கிணற்றில் போட்ட கல்லாக மாறிப்போனது. இந்த நிலையில், தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து கீதாலட்சுமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் தோண்ட ஆரம்பித்துள்ளார்கள் சமூக ஆர்வலர்கள். இது குறித்துப் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன்,

Sponsored


"முக்கியப் புள்ளிகளின் ஆதரவு காரணமாகவே அவர் இப்படியான ஊழலைச் செய்துவிட்டு சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

குறிப்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் செல்வாக்கு, கீதாலட்சுமிக்கு இருப்பதால், அவர்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.கோவை  துணைவேந்தர் கணபதி லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கிக்கொண்டதால், வேறு வழியில்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இல்லையென்றால் லஞ்ச ஒழிப்புத்துறையும் கண்டும் காணாமல் இருந்திருக்கும். அவரும் தனது ஊழல் ராஜாங்கத்தை மிகச்சிறப்பாக நடத்தி வந்திருப்பார். இந்த ஒரு துணைவேந்தர் கைது நடவடிக்கை மட்டும் போதாது. தமிழகத்தில் உள்ள 21  பல்கலைக்கழகங்களிலும் முறைகேடுகள் நடப்பதாகப் பல வருடங்களாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளன. அதில் மிகப்பெரிய ஊழல்வாதி கீதாலட்சுமி.

வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பவரை இந்த அரசாங்கம் இன்னும் துணைவேந்தராக வைத்துள்ளது. தமிழகத்தில், ஊழல் மலிந்துள்ளதற்கு இதைவிடச் சான்று வேறு இருக்க முடியாது. எனவே அவர்மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாவட்டம் மாவட்டமாகச் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு நடத்துவதைவிட, அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வு நடத்திக் கறைபடிந்த அதிகாரிகளையும் துணைவேந்தர்களையும் அதிரடியாக நீக்க வேண்டும். அதேபோன்று பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்கள் தேர்வுக் கமிட்டியில், நேர்மையான ஆட்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ள துணைவேந்தர்கள் மீது விசாரணை நடத்தி தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்றார் ஜெயராம் வெங்கடேசன்Trending Articles

Sponsored