வெற்றிகள் குவிகின்றன... ஆனால் இந்த எண்கள் கவலை அளிக்கிறதே மோடி?!



இந்தியாவில் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது என்று பெருமையாக பேசுகிறார் பிரதமர் மோடி. திரிபுராவில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துவிட்டோம். என்கிறார். வெற்றி கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள் பாஜக-வினர்.. திரிபுராவில் 35 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது. இதில் வாக்குவித்தியாசங்கள் குறைவாக உள்ள தொகுதிகளும் அதிகம் உள்ளன. 

Sponsored


2013 தேர்தலில் திரிபுராவில் பாஜக ஒரு தொகுதியையும் வெல்லவில்லை. இந்த முறை 35 தொகுதிகள், கூட்டணி கட்சியின் 8 தொகுதிகளோடு கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடித்துள்ளது. 2013 தேர்தலில் 1000 வாக்குகளுக்கு குறைவான விகிதத்தில் வெல்லப்பட்ட தொகுதிகள் 6, அதேபோல் 5000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் 16. இந்த எண்கள் தான் இந்த முறை பாஜகவை பயமுறுத்துபவையாக உள்ளன. 1000 வாக்குகளுக்கு குறைவாக இந்த முறை திரிபுராவில் வென்ற தொகுதிகள் 10 அதில் 5 தொகுதிகளில் பாஜக வெற்றி.

Sponsored


அதேபோல் நோட்டாக்கள் 23000க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த எண்களை பாஜக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளோடு ஒப்பிட்டால் நோட்டாக்களை ஒருவேளை எதிரணியினர் பெற்றிருந்தால் 14 தொகுதிகளை இழந்திருக்கும் பாஜக. இந்த எண்கள் தான் பாஜகவுக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளன, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சென்ற முறையை விட இந்த முறை பாஜக கொஞ்சம் முன்னேறி உள்ளது. 5000 வாக்குகளுக்கு அதிகமாக 11 தொகுதிகளை வென்றுள்ளது.

Sponsored


2014ம் ஆண்டு ஆட்சியை பிடிக்க மோடி கையில் இருந்த ஆயுதம் குஜராத் மாடல். இப்போதும் ஒரு குஜராத மாடல் உருவாகியுள்ளது. குஜராத சட்ட மன்ற தேர்தலில் இதேபோல குறைந்த எண்ணிக்கை வித்தியாசத்தில் பாஜக நிறைய வெற்றிகளை குவித்தது. 2000 வாக்குகளுக்கு குறைவாக 8 தொகுதிகள், 1000 வக்குகளுக்கு குறைவாக 3 தொகுதிகள் என்று குறைந்த வாக்கு வித்தியாச ட்ரெண்ட்டை மக்கள் பாஜகவுக்கு காட்டியுள்ளனர். இது திரிபுரா தேர்தலிலும் தொடர்ந்துள்ளது. இதையெல்லாம் மோடி கவனிக்க வேண்டும்.

இந்த வெற்றி சாத்தியமானதுக்கு முக்கிய காரணம் மோடியின் வடகிழக்கு பயணங்கள், தேர்தல் பிரசாரங்கள். பாஜகவின் செயல்பாடுகள் மட்டும் வெற்றிகளுக்கு போதுமானதாக இல்லை. கூடுதலாக மோடி பிம்பம் தேவைப்படுகிறது. இது மோடிக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் வெற்றிக்கு பிந்தைய உரைகளில் இந்த அழுத்தத்தை உணர முடியும். மோடி பேசும் போது மசூதியில் தொழுகை நடக்கிறது கொஞ்ச நேரம் பேச்சை நிறுத்தி விட்டு பின்னர் பேச்சை தொடர்கிறார். வாஸ்து சாஸ்திரத்தில் கூட வடகிழக்கு தான் முக்கியம் என்கிறார். 

வெற்றிகளை குவிக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நல்ல விஷயம் தான். ஆனால் இந்த எண்கள் கவலை அளிக்கிறதே பிரதமர் அவர்களே. நாடு முழுவதும் இந்த அலை தான் இப்போது பிரதிபலிக்கிறது. ஓவ்வொரு முறையும் மோடி பேசி,பேசி தான் அங்கு பாஜக வெல்ல வேண்டும் என்ற சூழலும் மாற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. வெற்றிகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதையே மோடியும் விரும்புகிறார். ஆனால் வெற்றிகள் இங்கே ஆறுதலாக தான் இருக்கிறது. வெளியே 29 மாநிலங்களில் 21 எங்கள் வசம் என பெருமைப்படும் வேளைகளில் இவற்றில் உள்ள சிக்கல்கள் மோடியை கட்டாயம் யோசிக்க வைக்கும். இந்த எண்களை கொஞ்சம் கவனியுங்கள் பிரதமர் அவர்களே!
 



Trending Articles

Sponsored