``காவிரி மேற்பார்வைக் குழுவால் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாது!" விவசாயிகள் சங்கம்



காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கோரி, டெல்லியில் அ.தி.மு.க. எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் தமிழக விவசாயிகளும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக  தமிழகத்தில் போராட்டம்  நடத்தி வருகின்றனர். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு, எந்தவித முடிவும் எடுக்காமல், காவிரி மேற்பார்வைக் குழு என்ற பெயரில் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sponsored


கடந்த 2007-ல் 192 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் உத்தரவிட்டது. அத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதில் யார், யார் இடம்பெற வேண்டும் என்பன போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் காவிரி நடுவர் மன்றம் வழங்கியிருந்தது. ஆனால், நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.  

Sponsored


இந்த வழக்கின் விசாரணை முடிந்து, உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், கர்நாடக மாநில அரசு, காவிரியில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவு 192 டி.எம்.சி-யிலிருந்து 177.25 ஆக குறைத்து உத்தரவிட்டது. 15 டிஎம்சி தண்ணீரை பெங்களூரு நகரக் குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டிற்கு வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பு, தமிழக விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Sponsored


இந்த விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும், காவரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, `காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும்' என்றும் விவசாயிகளும், தமிழக அரசியல் தலைவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் காவிரி நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்தை வகுக்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் "திட்டம் (Scheme)" என்ற வார்த்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், காவிரி மேற்பார்வைக் குழு ஒன்றை அமைக்கும் முடிவில் இருப்பதாக பரவலாகத் தகவல் வெளியானது. அவ்வாறு 

காவிரி மேற்பார்வைக் குழுவா, காவிரி மேலாண்மை வாரியமா இந்த இரண்டில் எது அமைக்கப்பட்டால் சரியானதாக இருக்கும்? இந்த இரண்டு அமைப்புகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் பேசினோம். அதில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் 

பி.ஆர். பாண்டியன் கூறுகையில், ``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். காவிரி மேற்பார்வைக் குழு என்பது பயனில்லா குழுவாகவே இருக்கும். அந்தக் குழுவால் தமிழக விவசாயிகளுக்கு நலன் பயக்காது. சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாத நிலையில், அந்தக் குழு எவ்வாறு செயல்படும். எனவே, தமிழக விவசாயிகளின் எதிர்ப்பை மீறி காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்பட்டால், அதனை தமிழக அரசு ஏற்கக் கூடாது. அதையும் மீறி மத்திய அரசு அதுபோன்றதொரு குழுவை அமைக்குமானால் எங்களுக்கு பதில் சொல்வதைவிட, நீதிமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை பின்பற்றவில்லை எனில், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கவனமாகச் செயல்பட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும். அப்படியும் மத்திய அரசு பிடிவாதமாக இருக்குமானால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர எங்களுக்கு வேறுவழியில்லை" என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பு தலைவர் நல்லுசாமி, ``காவிரி மேலாண்மை வாரியம் என்பது ஆளுமைமிக்க 

அதிகாரம் பெற்ற அமைப்பாகும். தவறு நடந்தால் தட்டிக் கேட்கக்கூடிய அதிகாரத்தைப் பெற்றதாகச் செயல்படும். ஆனால், காவிரி மேற்பார்வைக் குழு என்பது நடக்கின்ற தவறுகளை மேற்பார்வையிட மட்டுமே செய்யும். அந்த அமைப்பால் தவறுகளைக் கண்காணிக்கமுடியுமே தவிர, தண்ணீர் வழங்குவதை உறுதி செய்ய முடியாது. அதனால், காவிரி மேற்பார்வைக் குழுவால் இரு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்னையைத் தீர்க்க முடியாது. 

காவிரிமேற்பார்வைக் குழு அமைத்தால் தமிழகத்துக்குச் சாதகமானது என்றாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் முரண்பாடுகள் உள்ளன. அதில் உள்ள அடிப்படை முரண்பாடுகளைக் களையாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும், அதுவும் தமிழக விவசாயிகளுக்குச் சவால் நிறைந்ததாகவே இருக்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அன்றாடம் நீர் பங்கீட்டு நடைமுறையைக் கொண்டு வந்தால் மட்டுமே தமிழக மக்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்" என்றார்.



Trending Articles

Sponsored