காவிரி: அடகு பத்திரம் எழுதிக் கொடுத்ததா தமிழக அரசு? #WeWantCMB



Sponsored



காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, மார்ச் 29 அன்று முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், அந்த உத்தரவை நிறைவேற்றுவது குறித்து எந்த அசைவுமின்றி இருக்கிறது மத்திய பிஜேபி அரசு. கர்நாடக மாநில ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தைக் காவு வாங்குகிறது பிஜேபி. ஆனால், ஈ.பி.எஸ் & ஓ.பி.ஸ் பிரதர்ஸ் கூட்டணிக்கு என்ன பிரச்னை? பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு அஜெண்டா ஏதும் இந்த பிரதர்ஸுக்கு இல்லை. அதனால், இவர்களும் தமிழக உரிமையைக் காவு கொடுத்துவிட்டனர். மத்தியில் ஆளும் பிஜேபி அரசுக்கு எதிராக, ஒரு வார்த்தையைக்கூட இதுவரை வீசவில்லை, இந்த பிரதர்ஸ். இதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, மத்திய அரசு என்ன முடிவெடுத்தாலும் சரி என்பதுபோல எழுதிக் கொடுத்திருக்கிறார்கள் என்று பரவ ஆரம்பித்துள்ள விஷயம் கிலி கிளப்புகிறது.

உச்ச நீதிமன்றத்தின் ஆறு வார கெடு தேதி நெருங்கும் நிலையில், காவிரி பாசன மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் மத்திய நீர்வளத்துறை செயலாளர். இதில் பங்கேற்றபோதுதான், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவே இல்லை என்று கர்நாடகாவும், நீர்வளத்துறை செயலாளரும் பித்தலாட்டத்தை ஆரம்பித்தனர். இதன் முடிவில் ஒவ்வொரு மாநிலமும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது தொடர்பாக தங்களின் நிலைப்பாட்டை எழுதித் தரவேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறார்களாம். இப்படி எழுதிக்கொடுத்ததில், தமிழகத்தையே அடகு வைக்கும் வகையில் எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று பேச்சு கிளம்பியுள்ளது. அதாவது, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றால், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் காவிரியின் குறுக்கே இருக்கும் அணைகளின் பொறுப்பை அந்த வாரியத்திடம் ஒப்படைக்கவேண்டும். இதற்கு தமிழக அரசு என்ன எழுதிக் கொடுத்திருக்கிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பையே மதிக்காமல் பிஜேபி அரசு ஆடுகின்ற அத்தனை அழுகுணி ஆட்டங்களுக்கும், தமிழக அரசு எழுதிக்கொடுத்திருப்பதுதான் ஆதாரம் என்று கூறப்படுகிறது.

Sponsored


இதை உறுதிப்படுத்துவதுபோல, தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பிஜேபி செய்தித் தொடர்பாளர் நாராயணன், மேட்டூர் அணையினுடைய பொறுப்பை வாரியத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு தயார் என்று மத்திய அரசிடம் எழுதிக் கொடுத்துள்ளார்களா? இது தொடர்பாக தமிழக அரசு என்ன எழுதிக்கொடுத்துள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? என்றெல்லாம் அ.தி.மு.க பிரதிநிதியாக அமர்ந்திருந்த கோ.சமரசத்திடம் கேட்டார். அவரோ, பேயறைந்ததுபோல ரியாக்ஷன் காட்டினார்.

Sponsored


ஆக, மத்திய அரசிடம் காவிரி தொடர்பாக தமிழக அரசு என்ன எழுதிக்கொடுத்திருக்கிறது என்கிற கேள்விக்கு விடை தேடவேண்டிய நேரமிது!



Trending Articles

Sponsored