Sponsored
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கண்காட்சி கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நிகழ்ந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் சாதனையை விளக்கும் 17க்கும் மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன. முதல்வரின் உரைகள் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது. அதன் அதிர்வலைகளே இன்னும் ஒய்ந்திருக்காத நிலையில், அண்மையில் ’அம்மா வழியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கும் பயோகிராபி புத்தகத்தைப் பற்றி முகநூலில் வைரலாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ‘யோகா சித்தர் டாக்டர். மானோஸ்’ அவர்களிடம் இது தொடர்பாகப் பேசினோம். இவர் ஜெயலலிதாவைப் பற்றி ’திருக்குறள் நாயகி’, ‘அண்ணா வழியில் அம்மா’, ‘பெரியார் பாதையில் அம்மா’, பொன்னியின் செல்வி டாக்டர் ஜெ.ஜெயலலிதா ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார் என்பதும், அதில் பொன்னியின் செல்வி புத்தகம் 2013ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த வரலாற்று நூலுக்கான விருதைப் பெற்றிருக்கிறது என்பதும் கூடுதல் தகவல்..
Sponsored
”ஏற்கெனவே கட்சியில் இருந்திருக்கிறேன்... தற்போது இல்லை. கட்சியில் இருந்த காலத்திலிருந்தே இந்த ஆர்வம் இருந்திருக்கு”.
Sponsored
இவ்வளவு புத்தகங்களுக்கும் கட்சியில் வரவேற்பு எப்படி?
”ஓ.பன்னீர்செல்வம் என்னைக் கூப்பிட்டு பாராட்டியிருக்காரு. கட்சி வரலாற்றை பதிவு செய்யப் பாடுபடனும். அதை நான் சிறப்பா செய்யறதா சொல்லுவாரு.இது தவிர தமிழ் அறிஞர்களுக்கான உதவி நிதியா எனக்கு மாதம் 2600 ரூபாய் கிடைக்கிறது. இது தவிர ‘பொன்னியின் செல்வி அம்மா’னு ஒரு பத்திரிகை ஒவ்வொரு மாதமும் அமைச்சர்கள் வீட்டுக்குப் போகும்”.
யாராலும் எளிதில் சந்திக்க முடியாதவராகச் சொல்லப்படும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி இவ்வளவு புத்தகம் எழுதியிருக்கிங்களே...அவரைச் சந்திக்க வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
”புத்தகத்தை எழுதிய பிறகுதான் நேரில் ஒரே ஒருமுறைதான் சந்திச்சிருக்கேன். மற்றபடி புத்தகத்தை எழுதுவதற்கு அவங்களை ஒருமுறை கூட சந்திச்சதில்லை.நத்தம் விசுவநாதன், என் நீண்ட நாள் நண்பர் வெல்லமண்டி நடராஜன் போன்றவர்கள் எனக்கு தகவல் சேகரிக்க உதவினார்கள். இவை தவிர அன்றாடம் செய்தித்தாளில் படிக்கும் தகவல்கள்தான் எனக்கு உதவியாக இருந்தது”.
தற்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி புத்தகம் எழுதியிருக்கிங்களே?
”யாரும் செய்யாத ஒரு விஷயமாகச் செய்ய வேண்டும். அதனால் எழுதினேன். மேலும் ஆளுங்கட்சி சார்ந்து பெரிய மனிதர்கள் வாழ்க்கை வரலாறுகளைப் பதிவு செய்வது வழக்கம், அந்த அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி பற்றி இந்த புத்தகம் எழுதப்பட்டது. கூடுதல் தகவலாக... ஓ.பன்னீர்செல்வம் பற்றியும் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், அவர் தேனி மாவட்டத்தில் இருந்தது மற்றும் அவரது கடந்தகால வாழ்க்கை வரலாற்றை அந்தப் புத்தகம் பேசும்”.
எடப்பாடி பழனிசாமி பற்றிய தகவல்களை எப்படிச் சேகரித்தீர்கள்.. புத்தகத்தை அவர் படித்தாரா? என்ன சொன்னார்?
”அவரைச் சார்ந்து இருக்கற உதவியாளர்கள் அமைச்சர்கள் மற்றும் பத்திரிகை செய்திகளை வைத்து நம்ம ஸ்டைலில் புத்தகத்தை எழுதினோம். புத்தகத்தை கடந்த டிசம்பர் 2017ல் அவருக்கு படிப்பதற்காக அனுப்பி வைத்தோம். அதன்பிறகு அவரிடமிருந்து அதுபற்றி தகவல் எதுவும் இல்லை”.
புத்தகத்தில் தற்கால அரசியலின் உண்மை குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்களே?
”அவர் சந்திச்ச பல போராட்டங்கள், குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் தினகரன் பிரச்னைகளில் இருந்து மீண்டு அவர் கை ஓங்கி நிற்கும் வரைக்கும் நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறேன்”.
ஆனாலும் ஒருவருடமே ஆட்சி செய்திருக்கும் ஒருவரைப் பற்றி பயோகிரபி எழுதுவது மிகையாக இல்லையா?
”மிகைதான் இருந்தாலும் ஒரு சில விஷயங்களை வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்ய மிகைப்படுத்தி எழுத வேண்டி இருக்கிறது. அவர் சந்தித்த போராட்டங்கள் சிறியது அல்ல. இனிமேலும் அவர் சந்திக்க இருக்கும் போராட்டங்களைச் சமாளிக்க இந்த புத்தகம் உதவியா இருக்கும்”.
Trending Articles
`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை!' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.
``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை?' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி!
`பாகிஸ்தானுக்கு நான் முக்கியமானவன்!'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய பின்னணி
`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்!'- கதறிய மாணவியின் அப்பா
Sponsored