"ஆர்.எஸ்.எஸ் பின்புலம்... சூரப்பா சரியான தேர்வா?" காரணங்கள் அடுக்கும் கல்வியாளர்கள்Sponsoredடந்த ஆண்டு அக்டோபர் ஆறாம் தேதி தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றுக்கொண்டார். பதவிக்கு வந்த சில நாட்களிலேயே  தமிழக அரசின் நிர்வாக முறைகளில் தலையிட்டார். அரசு அதிகாரிகளை அழைத்துப் பேசி ஆய்வுகளை மேற்கொண்டார். அவருடைய இந்தச் செயல்பாடு தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து எதிர்க்கட்சிகள் 'பி.ஜே.பி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தில் ஆளுநரை வைத்து ஆட்சி செய்யப் பார்க்கிறது' எனப் பகிரங்கமாகவே குற்றம் சாட்டின. இப்படியான சூழலில் அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமித்து மீண்டும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். 

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர்  குழுவுக்கு கால அவகாசம் நேற்றுடன் (5-4-2018) முடிந்துள்ளது. இந்த நிலையில் சூரப்பா என்பவரை திடீரென  அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமித்து உத்தரவிட்டுள்ளார் பன்வாரிலால் புரோகித். 1970 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் பி. எஸ்.சி படிப்பையும், இந்திய அறிவியல் கழகத்தில் பொறியியல் படிப்பையும் முடித்தவர் சூரப்பா. 1980 ஆம் ஆண்டு டாக்டர் பட்டத்தை  நிறைவு செய்த அவர் , 20 ஆண்டுகளுக்கு மேல் இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றியுள்ளார். பஞ்சாப்  ஐ.ஐ.டி-யில் இயக்குநராக முக்கியப் பொறுப்பில் இருந்துள்ளார் .

Sponsored


இப்படியான முக்கியப் பதவிகளை வகித்து வந்தாலும் அவர் மீதான சர்ச்சைக்குரிய விஷயங்கள் நிறையவே இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஐ.ஐ.டி-யில் இயக்குநராக சூரப்பா இருந்தபோது அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர்  ஒருவர் சூரப்பா குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். "தொழில் நுட்பத் துறையில் அவருடைய பங்கு பாராட்டுக்குரியது. ஆனால், நிர்வாக திறமையில் அதற்கு நேரெதிர். ஐ.ஐ.டி-யில் இயக்குராக இருந்தபோது மாணவர்கள் அவர் மீது சரமாரியாக புகார் தெரிவித்தார்கள். குறிப்பாக பஞ்சாப் ரோக்பூர் ஐ.ஐ.டியில் இயக்குநராக இருந்தபோது அவருடைய நிர்வாகத்திறமை கேள்விக்குறியாக இருந்தது. அது குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருந்தது. 

Sponsored


பல்கலைக் கழக வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யவில்லை. கட்ட வேண்டிய கட்டடங்களைக் கட்டவில்லை என்பதால், மாணவர்கள் விடுதி வசதியின்றி தவித்தனர். இதனால் அவர் மீது மாணவர்கள் அதிகமான புகார்களை அள்ளி வீசினார்கள். அது மட்டுமன்றி பஞ்சாபில் அவர் பணியில் இருக்கும்போது அடிக்கடி அவருடைய குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டி சொந்த ஊரான பெங்களூர் வந்து விடுவார். விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில்தான் அவருடைய வேலை இருந்தது. இப்படியான புகார்கள்,

குறைபாடுகள் காரணமாக அவரை அந்த ஐ.ஐ.டி-யில் பணியில் இருக்கும் போதே பாதியில் அனுப்பிவிட்டனர். அப்படிப்பட்டவரை தமிழகத்தின் முக்கியமான கல்வி நிலையத்துக்கு நியமித்திருக்கிறார்கள். இதில் மற்றொரு அரசியலும் இருப்பதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். தற்போது கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோகித் ஆர். எஸ்.எஸ் பின்புலம் உள்ள ஆட்களை முக்கியப் பதவிகளில்  நியமித்து  வருகிறார். அதன் அடிப்படையிலும் இவரை நியமித்திருக்கலாம்'' என்றார் அந்த பெயர் சொல்லவிரும்பாத கல்வியாளர். 

 இது குறித்துப் பேசிய அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், 

 "துணைவேந்தர் பதவிக்கு சில தகுதிகள் இருக்கின்றன. கல்லூரிகளை மட்டும் நடத்திவிட்டு போகிறவராக இல்லாமல் சமூகத்தில் பொறுப்பு மிக்கவராக இருக்க வேண்டும். சமூகத்தை தொடர்பு கொள்வதற்கு மொழி தெரியாத, இந்த மாநிலத்தின் பழக்கம் வழக்கம் தெரியாத நபரை  துணைவேந்தராக நியமித்துள்ளார் ஆளுநர். தமிழர் ஒருவரை  நியமிக்காமல் மற்ற மாநிலத்தில் இருந்து நியமித்திருப்பதன் மூலம் அவர் தமிழர்களை விரும்பவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

அதேபோன்று இதற்கு முன்பு நடந்த பேராசிரியர்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளது. அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு, வருகின்ற துணைவேந்தருக்கு உள்ளது. ஆனால், அதையெல்லாம் செய்யக்கூடிய வல்லமை இவருக்கு இல்லை. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கீழே 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அந்தக் கல்லூரிகளைத் திறம்பட நிர்வகிக்கக்கூடிய திறமை இல்லாதவரை நியமித்துள்ளார்கள். அதனால் தமிழகத்தின்  கல்வி நிலை என்ன ஆகும் என்ற  கேள்வி எழுகிறது"  என்றார்.Trending Articles

Sponsored