``ஆளுநருக்கான நடைமுறை பன்வாரிலால் புரோஹித்துக்குத் தெரியவில்லை..!" சாடும் கல்வியாளர்கள்



Sponsored



மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பிரச்னைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது உதவிப் பேராசிரியை நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரம். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் நிர்மலா தேவி. இவர் அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் தவறான முறையில் பேசியதன் ஆடியோ தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக் குறித்து அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன. அதில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், `ஆளுநர் அமைத்துள்ள குழு மீது நம்பிக்கை இல்லை' என்றும் `இது மிகுந்த சந்தேகத்தை எழுப்புவதாக'வும் கூறியிருந்தார். அதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன், ``அவசர அவசரமாக ஆளுநர், குழு அமைக்க வேண்டிய அவசியம் ஏன்?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.  

இப்படி பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், ஆளுநர் நேற்று முன்தினம் (17-4-2018) ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ``மதுரை பல்கலைக் கழகம் அமைத்துள்ள குழுவைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. இந்த ஒரு நபர் குழுவின் விசாரணையே போதும்" என்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதில் அளித்துப் பேசிய ஆளுநர், "பல்கலைக்கழக விஷயத்தில் மாநில அரசு தலையிட முடியாது. மாநில அமைச்சர்கள் ஆலோசனை தரலாமே தவிர, முடிவெடுக்கும் அதிகாரம் வேந்தருக்கே உள்ளது'' என்று கூறியுள்ளார். இது தொடர்பாக கல்வியாளர்கள் சிலரது கருத்தைக் கேட்டறிந்தோம்...  

Sponsored



அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், ``ஆளுநரின் பேட்டியை நானும் பார்த்தேன். `பல்கலைக்கழக 

விஷயங்களில் மாநில அரசு தலையிட முடியாது' என்று கூறியிருப்பது முற்றிலும் தவறான கருத்தாகும். குறிப்பாக மாநில அரசின் நிதி ஆதாரத்தைக்கொண்டே பல்கலைக் கழகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

Sponsored


பல்கலைக் கழகச் சட்டங்கள் தொடர்பாக திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதி தேவையாகிறது. அவர் இவ்வாறு பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது. குறிப்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்த 5 பேர் கொண்ட குழு செல்லாது என்றும் தன்னை ஆலோசிக்காமல் குழு அமைத்திருப்பதால் அதைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் பேசியுள்ளார். மேலும், தான் அமைத்துள்ள ஒரு நபர் கமிட்டியே போதும் என்கிற நிலையில் அவருடைய பேட்டி அமைந்திருந்தது. அவருடைய  பேட்டி மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.. ஆளுநருக்கான நடைமுறையும் அவருக்குத் தெரியவில்லை. பல்கலைக் கழக வேந்தருக்கான நடைமுறையும் அவருக்குத் தெரியவில்லை என்பதுதான் அது. ஒட்டுமொத்த அதிகாரமும் தமக்கே என்கிற நிலையில் ஆளுநர் பேசியுள்ளார். மேலும் 'துணைவேந்தருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது' என்று ஆளுநர் கூறிய கருத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் பேசியிருக்கிறார். இதனால், அமைச்சரும் ஆளுநருக்குத் துணை போகிறாரா.... அல்லது உயர்கல்வித்துறையின் 

நடைமுறைகள் இவருக்கும் தெரியவில்லையா... என்ற சந்தேகம் எழுகிறது'' என்றார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி பேசுகையில், ``பல்கலைக் கழகம் என்பது தன்னிச்சையான அமைப்பு. அங்கு நடக்கும் பிரச்னைகளின் மீது நடவடிக்கை எடுக்க துணைவேந்தருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அப்படி இருக்கும்போது ஆளுநர் சொல்லும் கருத்து தவறானது. இதில் ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பில்லை" என்றார்.



Trending Articles

Sponsored