'காவிரியைவிட மெரினா தடை உங்களுக்கு முக்கியமா ஓ.பி.எஸ் அவர்களே?!' சீமான்Sponsored தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினர் எனப் பலரும்  போராடிக் கொண்டிருக்கின்றனர். மேலும், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடைப்பயணம், மனிதச்சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களைத் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து நடத்திவருகின்றன. இந்த நிலையில் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு அரசியல் களத்தையே வேறு திசைக்கு மாற்றினார். அவருடைய இந்தக் கருத்துக்குக் கண்டனங்களும், போராட்டங்களும் எழுந்த நிலையில், நடிகரும், பி.ஜே.பி. உறுப்பினருமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி மிகவும் அவதூறான கருத்துகளைத் தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து இதுபோன்ற விவகாரங்கள் நாட்டில் பற்றி எரியவே... காவரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் முழுமையாகவே மழுங்கிப்போனது. 

இந்த நிலையில்தான் நாகையில் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ''காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஓயமாட்டோம்'' எனக் குரல் கொடுத்திருக்கிறார், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மேலும் அவர், ''அ.தி.மு.க-வும் இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறது. எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துத் தராமல் அ.தி.மு.க. ஓயாது'' என்று அப்போது தெரிவித்தார்.

Sponsored


அவருடைய இந்தப் பேச்சு அரசியல் களத்தை கவனிக்க வைத்துள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசினோம். ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஓயமாட்டோம் என்றால், அதனை அமைக்கப்போவது தமிழக அரசா... மத்திய அரசா? அப்படி மத்திய அரசு என்றால், அந்த அரசுக்கு எந்த அளவுக்கு அழுத்தம் தருகிறார்கள்? அதனை, மத்திய அரசு எந்த அளவுக்கு மதிக்கிறது என்பதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே?  

Sponsored


பிரதமர் மோடி இங்கு வந்தபோது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடிதம் கொடுத்தார்களே, அது என்ன ஆனது?  அப்படிக் கொடுக்கப்பட்ட கடிதத்தைப் பிரதமர் மதித்திருந்தால், அவர் இங்கு வந்தபோதே, 'உங்களுடைய உணர்வுப்பூர்வமான போராட்டத்தை மதிக்கிறேன். உங்களுடைய உரிமைகளைப் பெற்றுத் தருவேன்' என ஒருவார்த்தைப் பேசியிருக்க மாட்டாரா? 

 இத்தனை காலம் நடந்த போராட்டத்தில், எப்போது தமிழக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு நடந்துள்ளது? பி.ஜே.பி-யின்  தேசியச் செயலாளர் முரளிதர ராவ் கர்நாடகத்தில் பேசும்போது, 'காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்குப் பாதிப்பு இல்லாமல் மத்திய அரசு நடந்துகொள்ளும்' என்றார். அதேபோன்று பி.ஜே.பி-யில் முக்கிய ஆதிக்கச் சக்தியாக உள்ள சுப்பிரமணியன் சுவாமி, 'காவிரி நீரைத் தர முடியாது; வேண்டும் என்றால்,கடல் நீரைக் குடிநீராக்கிக் கொள்ளுங்கள்' என்கிறார். இப்படி மத்தியில் உள்ளவர்கள் அனைவரும் ஒருசார்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் யார் சொல்வதை நம்புவது? 

உண்மையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ஓர் அரசாங்கம் நினைக்கிறது என்றால், அதற்கு ஆதரவாகப் போராடுபவர்களுக்கு ஊக்கம்தானே தரவேண்டும்? ஏன் தடியடி நடத்துகிறது... ஏன் ஒடுக்க வேண்டும்? தமிழக அரசு செய்யவேண்டிய வேலையை எங்களைப் போன்ற போராளிகள் செய்யும்போது அவர்களுக்கு ஆதரவாக நில்லாமல் அடித்துத் துவைப்பதுதான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கையா? 'காவிரி மேலாண்மை வாரியத்தைவிட, மெரினாவுக்குத் தடை விதிப்பதுதான் முக்கியமா' என நீதிமன்றமே கேட்டுள்ளது. உங்களுடைய நடவடிக்கையின் சாயம் வெளுப்பதை இதைவிட வேறு எதை உதாரணமாகக் கூற முடியும்? போராட்டக்களத்தைவிட அவர்களுக்குப் பொழுதுபோக்குக் களம் முக்கியமாகத் தெரிகிறது.

 இலங்கையில் யுத்தம் நடந்தபோது, அந்நாட்டு வீரர்கள் இங்குவந்து விளையாடினால் பிரச்னை வரும் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அந்த வீரர்கள் சென்னையில் விளையாட தடைவிதித்தார். அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லும் அ.தி.மு.க-வினர், இந்த ஐ.பி.எல் போட்டிக்குத் தடைவிதித்து இருந்தால் நாங்கள் ஏன் போராடப்போகிறோம்? எனவே, 'காவரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஓயமாட்டோம்' என்று அவர்கள் பேசுவதே வேடிக்கை. இந்த அரசின்மீது உள்ள குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவே பன்னீர்செல்வம் அப்படிப் பேசுகிறார்" என்றார்.Trending Articles

Sponsored