"உங்களுடைய வேலை வழக்கு போடுவது என்றால், எனது வேலை போராடுவது!" சளைக்காத திவ்யா பாரதி #DivyaBharathiSponsored"நீங்கள் என்னைத் தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை; வரலாறு எனக்கு நீதி வழங்கும்" - ஃபிடல் காஸ்ட்ரோ என்னும் அந்த மாபெரும் புரட்சியாளனின் வீரமிக்க இந்த உரை இப்போதைய சூழலுக்குச் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். அந்தப் புரட்சியாளனின் முழக்கம்தான், தமிழகத்தில் உள்ள போராளிகளுக்கு அவசியத் தேவையாகி வருகிறது.

சென்னை மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முயன்றதற்காக, 'மே பதினேழு' ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் கைதுதான் முதல் கைது படலம். அதனைத்தொடர்ந்து கதிராமங்கலம் மக்களுக்காக போராடிய ஜெயராமன், குபேரன், வளர்மதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர். "மக்கள் நலனில் அக்கறையில்லாமல் செயல்படும் அரசுக்கு எதிராக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ, அவர்கள் மீதெல்லாம் இந்த அரசாங்கம், எமர்ஜென்சியை கட்டவிழ்த்துவிட்டு கைதுநடவடிக்கை எடுத்து வருகிறது" என பல்வேறு தரப்பினரும் கொதிப்புடன் தெரிவித்தனர். தற்போது, அரசின் கைது நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பவர் 'கக்கூஸ்' ஆவணப்படத்தை இயக்கிய சமூக செயற்பட்டாளர் திவ்யா பாரதி. இதன்மூலம்,போராளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இந்த அரசின் நோக்கம் என்னவென்பது உறுதியாகி இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Sponsored


திவ்யா பாரதி எடுத்த "கக்கூஸ்" ஆவணப்படத்தில், மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துச் சொல்லியிருந்தார். அந்தப் படம் வெளியானதில் இருந்துதான், திவ்யாவிற்கும் அரசாங்கத்திற்குமான மோதல் தொடங்கியது. 

Sponsored


சாதி அரசியல், சமுக அவலங்கள், சுரண்டல்கள், தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றுக்கு எதிராக மிக வலிமையாகக் குரல்கொடுத்து வருபவர் திவ்யா. "கக்கூஸ்" படத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் இடம்பிடித்த திவ்யா பாரதியை, மதுரையில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். 2009-ம் ஆண்டு மாணவர்கள் விடுதியின் தரத்தை உயர்த்தக்கோரி போராட்டம் நடத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திவ்யாவுக்கு நிபந்தனை  ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் பெற்றுள்ள திவ்யா பாரதியிடம் அவரின் கைதுகுறித்துப் பேசினோம்.


"கடந்த 2009-ல் தலித் மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அந்த விடுதியானது உரிய பராமரிப்பின்றியும், தரமற்றதாகவும் இருந்த காரணத்தால் அப்பாவி மாணவரின் இறப்பு ஏற்பட்டது. அதனைக் கண்டித்தும், ஆதிராவிடர் மாணவர் விடுதிகளின் தரத்தை உயர்த்தக்கோரியும் அப்போது போராட்டம் நடத்தினோம். மதுரை அரசு பொதுமருத்துவமனையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதுடன், சாலைமறியலும் செய்து எங்களின் எதிர்ப்பை பதிவு செய்தோம். அந்தப் போராட்டத்தில்  பங்கேற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் என் மீதும் குற்றம்சாட்டி, மூன்றாவது நபராக பெயரைச் சேர்த்திருந்தனர். அதுதொடர்பான வழக்கில் எனக்கு இதுவரை எந்த சம்மனும் வழங்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது, காவல்துறையினரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்களை காவல் ஆணையர் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்' என்றனர். எதற்கு என்று கேட்டபோது, வழக்குத் தொடர்பான தகவலை என்னிடம் தெரிவித்தனர். சம்மன் அனுப்புங்கள் நான் நீதிமன்றத்தில் ஆஜராகிறேன் என்றேன். ஆனால், 'இல்லை, உங்களை கமிஷனர் பார்க்க வேண்டும்' என்றனர். சரி, நான் நேரில் வந்து சந்திக்கிறேன், என்று கூறிய சில நிமிடங்களில் நான்கு போலீஸார், என் வீட்டிற்கு வந்து கைதுசெய்வதாகத் தெரிவித்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளனர்" என்று தெரிவித்தவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம்.

"அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுபவர்களை, இந்த அரசு அடுத்தடுத்துக் கைது செய்து வருகிறதே? அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?"

"அரசுக்கு எதிராகப் போராட்டம் தீவிரமடைகிறபோது, இதுமாதிரியான செயல்பாடுகளில்  அரசாங்கம் இறங்குவது வாடிக்கைதான். போராளிகளை முடக்குவதற்காக இவ்வாறு வழக்குப் போடுகின்றனர். வழக்குப்போட்டு என்னை அலையவிடுவதால், எனது சமூகப்பணிகள் முடங்கிவிடும் என்பது அரசாங்கத்தின் கணக்கு. என்னைப் பயமுறுத்திப் பார்க்கவே இப்படிச் செய்கிறார்கள். அதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை" 

"மக்களுக்காகவும், சமூக அவலங்களைக் கண்டித்தும் தொடர்ந்து போராடுபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?"

"மக்கள் நலனுக்கான போராட்டங்களைத் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கண்டு பயந்து ஓடக்கூடாது. காவல்துறையின் வேலை வழக்குப் போடுவது என்றால், நம்முடைய வேலை போராடுவது. அதனை எதற்காகவும் விட்டுவிடக் கூடாது. தொடர்ந்து போராட வேண்டும் என்பதுதான்"

"திருமுருகன் காந்தி, வளர்மதி ஆகியோரைக் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். தற்போது உங்களைக் கைது செய்திருப்பது, அதுபோன்றதொரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறதே?"

"பெரிய வழக்குகள் ஏதாவது கிடைக்குமா? என காத்திருக்கிறார்கள். நான் சட்டக்கல்வி முடித்திருந்தாலும், வழக்கறிஞர் ஆகிவிடக் கூடாது என்பதற்காக, இந்த வழக்கைப் போட்டுள்ளனர். இதன்மூலம் நான் வழக்கறிஞர் ஆவதைத் தடைசெய்துள்ளனர்"

"2009-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இப்போது கைது செய்திருப்பதன் பின்னணி என்ன?" 

"தற்போதுள்ள அரசியல் சூழல்தான் அதற்குக் காரணம். அரசுக்கு எதிராக தொடரும் என்னுடையப் போராட்டத்தை முடக்க, இப்படிச் செய்திருக்கலாம்" என்றார் மிகுந்த வலிமையுடன்.

மீண்டும் காஸ்ட்ரோவின் வீரமுழக்கமே நினைவுக்கு வருகிறது. "நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்குமுன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் நபர் எவ்வளவுகாலம் வேலை இல்லாமல் இருந்தார் எனக் கேட்டதுண்டா?" எனத் தொடரும்    அந்த வாதத்தின் இறுதியில் "வரலாறு என்னை விடுதலை செய்யும்" என்ற ஃபிடல் காஸ்டோராதான் இன்றைய போராளிகளுக்கு மா மருந்து...Trending Articles

Sponsored