லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் நியமனம்... உயிர்பெறுமா குட்கா விவகாரம் ?Sponsoredதீர்வு சொல்ல வேண்டியவர்களே இங்கு குற்றவாளிகளாக நிறுத்தப்படுவதுதான் தமிழகத்தின் சாபக்கேடு... குட்கா சப்ளை செய்யப்படுவதற்குச் சுதந்திரமாக வாயிற்கதவுகளைத் திறந்துவிட்டு அப்படியான சாபக்கேட்டில் நிற்கிறார்கள் நம்மை ஆளக்கூடிவர்கள். கடந்தாண்டு திருவள்ளூரில் மாதவ ராவ் என்பவரின் குடோனில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில்தான் இந்தத் தகவல் அம்பலமானது. 

அங்குக் கைப்பற்றப்பட்ட லெட்ஜரில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அதிகாரிகளான ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்குப் பணம் கொடுத்ததற்கான தகவல்கள் அதில் பதிவாகயிருந்ததாகச் சொல்லப்பட்டது. ஆகையால் இந்த விவகாரத்தை அப்போதைய தலைமைச் செயலாளரும், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆணையராகவும் இருந்த ராம மோகன ராவை வருமானவரித் துறை அதிகாரிகள் சந்தித்துத் தெரிவித்தனர். ஆனால், அந்தப் புகார் தொடர்பாக ராம மோகன ராவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து புதிதாகப் பொறுப்பேற்ற தலைமைச் செயலாளரும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையருமான கிரிஜா வைத்தியநாதனுக்கு இந்த விவகாரம் போனது. அதுமட்டுமன்றி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக எழுந்த புகார்களும் அவருடைய கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த இரண்டு விவகாரங்களையும் கிரிஜா வைத்தியநாதன் விசாரணைக்கு உட்படுத்துவார் என்பதால், இதில் தொடர்புடையவர்கள் தலையிட்டு அவருடைய ஆணையர் பதவியைப் பறித்ததாகத் தகவல் சொல்லப்பட்டது. 

Sponsored


அவரிடமிருந்து பறிக்கப்பட்ட ஆணையர் பொறுப்பு, உள்துறைச் செயலாளர்  நிரஞ்சன் மார்டியிடம் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குட்கா விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. அதில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், 'லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தனிநபரை நியமிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராக ஜெயக்கொடியை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

Sponsored


மின்நிதிக் கழகத்தின் தலைவர் பொறுப்பை வகித்துவந்தவர் ஜெயக்கொடி. அவர் வகித்துவந்த அந்தப் பொறுப்பை விக்ரம் கபூருக்குத் தற்போது தமிழக அரசு கூடுதலாக ஒதுக்கியுள்ளது. அ.தி.மு.க  ஆட்சிக்கு வந்ததில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என தனிநபர் நியமிக்கப்படவில்லை. இதற்கான  நடைமுறை என்ன என்பது குறித்து முன்னாள் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவசகாயத்திடம் பேசினோம். ''தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்குத் தனிநபரை நியமிக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால், ராம மோகன ராவ் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து இரண்டு பொறுப்புகளையும் தன் கையில் வைத்துக்கொண்டார். இது, சரியான நடைமுறை அல்ல. தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டிய நிலையில் இருப்பவர். அப்படிப்பட்டவர் இந்தப் பொறுப்பையும் கையில் எடுத்துக்கொள்வது எந்த வகையிலும் சரியில்லை. அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகளை விசாரிக்கும் பொறுப்பை, அவரிடமே கொடுப்பது எந்த வகையில் சரியானதாக இருக்கும்? இந்தப் பொறுப்புகளை உயர் அதிகாரிகள் எடுத்துக்கொள்வதற்கு காரணம், தாங்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே அவ்வாறு செய்கின்றனர். தற்போது, தனிநபரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றியிருப்பது வரவேற்கத்தகுந்தது. இதுதொடர்பாகத் தலைமைச் செயலாளருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தேன். தனிநபர் அந்தத் துறைக்கு வந்திருப்பதால் அந்தத் துறையின் செயல்பாடு தீவிரமாகும் என்று நம்புகிறேன்" என்றார். 

குட்கா சப்ளை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு அமைப்புக்குக் கண்ணீர் அஞ்சலி

நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டிருந்தது அறப்போர் இயக்கம். அந்த நிகழ்ச்சிக்கு போலீஸார் தடைவித்தனர். இந்த நிலையில், அந்தத் துறைக்குப் புதிய ஆணையரை நியமித்துள்ள நிலையில்... அதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசனிடம் பேசினோம். "குற்றத்தைச் செய்பவர்களே தண்டனை தரக்கூடியவர்களாக இருப்பதுதான் அனைத்துப் பிரச்னைக்கும் காரணம். ராம மோகன ராவ் ஊழல் செய்துள்ளார் என்று அவரிடம்  புகார் கொடுக்க வேண்டிய நிலை இங்கு உள்ளது. குட்கா விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்களின் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆணையராக இருந்த உள்துறைச் செயலாளரிடம் புகார் கொடுத்தால்... அவர் எப்படி அமைச்சர்மீதும் காவல் துறை உயர் அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுப்பார்? காவல் துறை உள்துறையின்கீழ் வருகிறது. மேலும், அவருக்கு மேல்மட்டத்தில் இருப்பவர் அமைச்சர். அப்படியிருக்கும்போது எப்படி விசாரணை நடக்கும்? 

இந்தச் சூழ்நிலையில், அந்தத் துறைக்குத் தனிநபரை நியமித்திருப்பது ஓரளவு நம்பிக்கையைத் தந்துள்ளது. அதனால் விவகாரம் உயிர்பெறும் என்று நம்புகிறேன்.அது மட்டுமன்றி ஜெயக்கொடிமீதும் எந்தப் புகாரும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் உயிர்த்தெழும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.  Trending Articles

Sponsored