சீனாவை எதிர்கொள்ளுமளவுக்கு வலிமை வாய்ந்ததா இந்தியப் படை?! #InfographySponsoredந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் மூளுமா என்ற பதற்றமும், கவலையும் உலக நாடுகளுக்கு எழத் தொடங்கியுள்ளது. 55 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய அதே பதற்ற நிலை, தற்போது மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. அப்படி ஒருவேளை இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படுமானால், இந்தியாவால் சீனாவை எதிர்த்துப் போராடமுடியுமா? அதற்கான படைபலமும், ஆயுத பலமும் இந்தியாவிடம் இருக்கிறதா? இதுபோன்ற பல கேள்விகள் எழுகின்றன.

போர் பதற்றம் எதனால்?

Sponsored


சீனா தங்கள் எல்லையோரம் இருக்கும் 'டோக்லாம்' என்ற இடத்துக்கு ரோடு போட்டது. ரோடு போட்டதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அந்த ரோட்டை பூட்டான் நாட்டு வழியாகப் போட்டதுதான் பிரச்னை. இந்தியாவுக்கும், பூடானுக்கும் இடையே 'பிரச்னை ஏற்படும் காலங்களில் இருநாடுகளும் பரஸ்பரம் ஆதரவு அளிக்க வேண்டும்' என்ற ஒப்பந்தம் ஏற்கெனவே இருந்தது. பூடானில் மன்னர் ஆட்சி நடப்பதால், அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அந்த நாட்டு ராணுவத்துக்குப் பயிற்சி கொடுப்பதும் இந்தியாதான். பூடானுக்குத் தேவைப்படும் எரிவாயுவும்கூட இந்தியாவில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. எனவே, போர்க் காலங்களில் ஒருநாடு இன்னொரு நாட்டுக்கு உதவ வேண்டும் என்பதால், சீனாவை எதிர்த்து இந்திய ராணுவம் எல்லைப் பகுதிக்குச் சென்று எதிர்ப்புத் தெரிவித்தது. அங்கு சாலைபோடும் பணியையும் நிறுத்தச் செய்தது. இதனால், இந்தியா மீது கடும் கோபம் கொண்டது சீனா. எல்லையில் இருந்த ராணுவ முகாம்களை அழித்தது. எல்லையைத் தாண்டி உள்ளே வர நினைத்தபோது, இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்திய ராணுவம் தங்களுடைய எல்லையைத் தாண்டி இருப்பதால், அவர்கள் திரும்பிப் போக வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது.

Sponsored


இந்தியா இப்போது சீனாவை எதிர்ப்பதால், பூடானிடம் புதியதாக ஒரு ஒப்பந்தம் போட வேண்டும் என சீனா கேட்டுள்ளது. பூடானுக்கு வடக்கே இருக்கும் 499 சதுர கி.மீ பகுதி தன்னுடையது என சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இப்போது, 269 சதுர கி.மீ டோக்லாம் பகுதியும் தங்களுடையது என்கிறது சீனா. ஒருவேளை பூடான் டோக்லாம் பகுதியைச் சீனாவுக்கு விட்டுக்கொடுத்தால், வடக்கே இருக்கும் 499 சதுர கி.மீ பகுதியைச் சொந்தம் கொண்டாடுவதை நிறுத்திவிடுவதாக சீனா சொல்கிறது. இதற்கு பூடான் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், அவர்களை எதிர்த்து, ரோடு போடும் பணியை மேற்கொண்டது சீனா. இதில், இந்தியா தலையிட்டதால், இந்தியாவுடன் வம்படியாகப் பிரச்னை செய்து வருகிறது. 

இந்தியா - சீனா பேச்சுவார்த்தை

இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் "இந்தியாவுக்கு பிரச்னை கொடுக்கும் இரண்டு நாடுகளின் எல்லையில் ஒரேநேரத்தில் போர் வந்தாலும், அதைச் சந்திக்க இந்தியா தயாராக உள்ளது" என்று பாகிஸ்தான் மற்றும் சீனாவை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு, சீன ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் வூ கியான், "1962-ம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. போரில் என்ன நடந்தது என்பதை அவர் வரலாற்றை தெரிந்து, கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பதிலடி கொடுத்தார். அதற்குப் பதிலளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி, "இந்தியாவின் அப்போதைய சூழல்வேறு, இப்போது இருக்கும் சூழல் வேறு" எனக் கூறினார். இதைத் தொடர்ந்து, பிபின் ராவத் சிக்கிம் எல்லைப்பகுதிக்குப் பயணம் மேற்கொண்டு நிலைமையை கண்காணித்தார். அப்போது, சீனா திபெத் எல்லையில் பயிற்சிகள் மேற்கொண்டது. அதற்கு "இந்தியாவைக் குறிவைக்க எந்தப் பயிற்சிகளும் மேற்கொள்ளவில்லை" என்று தானாக முன்வந்து சீனா விளக்கமளித்தது. 

அதேபோல், கடந்த வாரம் பீஜிங் நகரில் பிரிக்ஸ் நாடுகளின் (இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில்) பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் இரண்டு நாள்கள் நடந்தது. இதில், இந்தியா சார்பில் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றார். இந்த சந்திப்பில், சிக்கிம் எல்லையில் நிலவிவரும் போர் பதற்றத்தைப் பற்றி பேசுவார்கள் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சந்திப்பு முடிந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், எதைப்பற்றி பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக தகவல்களை வெளியிட்டது. அதில், "இந்திய பிரதிநிதியை தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது, டோக்லாம் சீன எல்லைக்குள் அமைந்த பகுதி. மேலும், சீனாவின் இறையாண்மைக்கு இந்தியா மதிப்பளிக்க வேண்டும். இங்கு அத்துமீறியிருப்பது இந்தியாதான். அதனால், படைகளை திரும்பப்பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்' என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கிடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

1962-ம் வருடம் என்ன நடந்தது?

1962-ம் ஆண்டு, எல்லைப் பிரச்னைக்காக இந்தியா - சீனா இடையே போர் நடந்தாலும், இதற்கு வேறு சில காரணங்களும் இருந்தன. 1959-ம் ஆண்டு திபெத்தில் நடந்த கிளர்ச்சியால், சீன ஆட்சியை தலாய் லாமா ஏற்க மறுத்தார். அதனால், தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்களம் கொடுத்தது. இப்படி எல்லைப் பிரச்னைகளும், சேர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் ஏற்படக் காரணமாக அமைந்தன. இந்தப் போரில் இந்தியாவை சீனா வீழ்த்தியது. அது, இந்தியாவுக்கு பல பாடங்களையும் கற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்தாவது, இந்தியா, எதிர்வரும் போர்களைச் சந்திக்க பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதா? இனி ஒரு போரைச் சந்திக்க இந்தியா தயாரா என்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

போரைச் சந்திக்க இந்தியா தயாரா?

சீனா 'குளோபஸ் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில், 'டோக்லாம் பகுதியில் எல்லை விவகாரத்தில் சீனா பொறுப்புடன் நடந்துகொண்டுள்ளது. ஆனால், இந்தியா பொறுப்பில்லாமல் நடந்து, போர் ஏற்படுவதற்கான சூழலை ஏற்படுத்துகிறது. இந்திய அரசு, தன் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், போர் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்திய துருப்புகளை அகற்றுவது எங்களுக்கு ஒரு விஷயமே இல்லை. அமைதியை விரும்புவதால்தான் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது சீனா' என்று தெரிவித்துள்ளது. இதனால், இன்னும் இரண்டு வாரங்களில், இந்திய - சீன எல்லையில் இருக்கும் படைகள் மீது சிறிய அளவிலான தாக்குதல் நடத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 1962-ம் ஆண்டு போர் நடந்தபோதே சீனா, தன்னுடைய போர்ப்படைகளை சகல வசதிகளுடன் வைத்திருந்தது. அதனால், அந்தப் போரில் இந்தியாவை வென்றது. இந்தியா அந்த நிலைமைக்கு வரவே இன்னும் 10 ஆண்டுகள் ஆகக்கூடும்.  இப்படி இருக்கும் சூழலில், மீண்டும் போர் வந்தால், இந்தியா அதை சந்தித்து வெற்றி பெறுவது மிகவும் கடினமான ஒன்றுதான். இந்தியா-சீனா இரு நாட்டுக்கும் இருக்கும் படைபலம் என்ன என்பதை ஒப்பிட்டுப் பார்க்கையில், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியா ராணுவ பலத்தில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

யாருக்கு பலம் அதிகம்?

இந்தியா, சீனாவைத் தாக்கி போரில் முந்த முடியுமென்ற விவாதங்கள் ஒருபுறம் நடைபெற்ற போதிலும், ராணுவப்படையினரும், ஆயுத பலத்திலும் பின்தங்கியிருப்பது என்னவோ இந்தியாதான். 

என்னதான் படைபலம் சீனாவுக்கு அதிகமாக இருந்தாலும், படைபலம் மட்டுமே வெற்றியைத் தீர்மானித்துவிடாது. வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்கள் தவிர்க்க முடியாத சூழலாகி விட்டதால், அதை வெற்றிகரமாகத் திட்டம் தீட்டிச் செயல்படுத்த வேண்டியது அந்தந்த நாட்டு அரசின் கடமையாகும்.Trending Articles

Sponsored