“பெண்கள் மீதான வன்முறையில்லா நாள்தான் நிஜ சுதந்திர தினம்!" - ஒரு போராளியின் 'சுதந்திர' பார்வைSponsoredஇந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. இந்த எழுபது ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 19 - ல் சொல்லப்பட்டபேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை ஆகியவை ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கிறதா என்பதுதான் கேள்வி. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏதோ ஒருவகையில் இந்த உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உரிமைகளுக்காக சேர்ந்து போராடுகிறவர்களைவிட, தனிமனிதனாகப் போராடுபவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். குறிப்பாக, பெண்கள் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராட தெருவுக்கு வந்துவிட்டால் முதலில் அந்தப் பெண்ணின் நடத்தைகளைச் சந்திக்கு இழுத்துவந்து நிறுத்துவார்கள். அப்படியான பெரும் வலிகளையும் ரணங்களையும் கடந்து இன்னும் உயிர்ப்போடுப் போராடிக் கொண்டிருக்கும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  

Sponsored


கேரள மாநிலம் இடுக்கி, மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களில் தமிழ் பெண்கள் வேலைசெய்து வருகிறார்கள். இந்தப் பெண்களுக்குக் குறைவான கூலி கொடுக்கப்படுவதாகக் குற்றச்சசாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2015-ல் கூலியை உயர்த்திக் கொடுக்கக்கோரி கோமதி என்ற ஒற்றை பெண்மணி போராட்டத்தைத் தொடங்கினார். 

Sponsored


அரசியல்வாதிகளையும்,முதலாளிவர்க்கத்தையும் எதிர்த்து இவர் நடத்திய போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். அதிகார வர்க்கத்தை எதிர்த்து பெண்கள் எழுப்பிய முழக்கங்களைக் கண்டு பலரும் அதிர்ந்தனர். இதன் பின்னர்தான் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசும், எஸ்டேட் நிர்வாகமும் முன்வந்தது. நாள் ஒன்றுக்கு 232 ரூபாய் வழங்கிவந்த கூலியை 301 ரூபாயாக உயர்த்தி வழங்கினர்.

இந்தப் போராட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர்கள் 'பெண்கள்  ஒற்றுமை அமைப்பு' என்ற பெயரில் தங்களுக்கான ஒரு அமைப்பையும் தொடங்கினர். உரிமைகளைக் கேட்கவும், தங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யவும் அமைப்பு ரீதியாக செயல்பட முடியும் என்று  நம்பினர். ஆனால், பெண்களுடைய இந்த நடவடிக்கை, கேரளத்தில்  உள்ள அரசியல்வாதிகளுக்கும், முதலாளித்துவ வர்க்கத்துக்கும் மிகுந்த எரிச்சலை கொடுத்துள்ளது. அதன் காரணமாக இந்த அமைப்பைக் கலைக்கும்படி பலமுறை அழுத்தமும் கொடுத்து வந்துள்ளனர். 

ஆனாலும், இந்தப் பெண்கள் உறுதியுடன் தங்களுடைய அமைப்பின் வேலைகளை முன்னெடுத்துச் சென்றனர். அரசுக்கு எதிராகப் போராடி இந்த அமைப்பை உருவாக்கிய கோமதி மீது 18 வழங்குகளை அந்த மாநில அரசு பதிவுசெய்துள்ளது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆன நிலையில் தனிமனிதப் போராட்டம் தேவையா? என்ற கேள்வியை கோமதியின் முன்வைத்தோம்.

 "ஆங்கிலேயர்களிடம் இருந்த நாட்டை நாம் ஆளவேண்டும் என்று எண்ணியவர்கள் வேண்டுமானால், சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று பெருமை கொள்ளலாம். ஆனால் உண்மையில் அடித்தட்டு மக்களின் சுதந்திரப் போராட்டமே இப்போதுதான் தொடங்கியுள்ளது. அதுவும்  கூலிக்காக கையேந்தி நிற்கும் தொழிலாளிகளிடம் கேட்டுப்பாருங்கள் அவர்களுக்கான சுதந்திரத்தை அவர்கள் பெற்றுள்ளார்களா என்று?

அதேபோன்று பொருளாதாரச் சுதந்திரத்துக்காக வெளியில் வரும் பெண்களுக்கு  இன்னும் விடியவே இல்லை. உரிமைகளுக்காகக்  குரல் கொடுக்கும் பெண்கள் மீதான தாக்குதலும் நின்றபாடில்லை. உழைத்ததற்கான கூலியைக் கேட்கும் பெண்கள்மீது அடக்குமுறைச் சட்டங்களைக் கட்டவிழ்த்து விடுகிறது அரசாங்கம். இந்தத் தாக்குதல்கள் என்று  நிறுத்தப்படுகிறதோ; என்னைப் போன்ற  பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதியான முறையில் என்று சுதந்திரமாக வாழ முடிகிறதோ அன்றுதான் சுதந்திரம் கிடைத்தாக அர்த்தம். இப்போது  சுதந்திரம் கிடைத்துவிட்டதாக முழங்குவது எல்லாம் சுத்தப்பொய்" என்றார்.Trending Articles

Sponsored