கூகுள் ப்ளே ஸ்டோரில் போலி ஆப்ஸ்... இந்த 3 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் உஷார்!Sponsoredதொழில்நுட்பம் ஒரு வேலையைச் செய்து முடிக்க எளிதான வழிகளைத் திறந்து விட்டிருக்கிறது துரதிஷ்டவசமாக இது திருடர்களுக்கும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது. குறிப்பாக வங்கி விஷயத்தில். வங்கிக்குச் சென்று காத்திருந்து பணம் அனுப்பியதை ஒரே நிமிடத்தில் எந்த இடத்திலிருந்தும் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும் என்று மாற்றிக் காட்டியிருக்கின்ற மொபைல் பேங்கிங் ஆப்கள். இதில் வங்கிகளின் அதிகாரபூர்வ ஆப்களைப் பயன்படுத்துவதில் எந்த வித பிரச்னையும் ஏற்படுவதில்லை. ஆனால், சில போலி ஆப்களால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்க நேரிடலாம். சமீபத்தில் இந்தியாவின் முன்னணி வங்கிகளின் போலி ஆப்கள் ப்ளே ஸ்டோரில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

மூன்று வங்கிகளின் போலி ஆப்கள்

Sponsored


ஆன்டி வைரஸ் மென்பொருள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான  ESET இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவின் பிரபலமான வங்கிகளான  ICICI வங்கி,  RBL வங்கி, மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவற்றின் போலி ஆப்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறது. குறிப்பிட்ட மூன்று வங்கிகளின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களைக் குறிவைத்து போலி ஆப்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிரெடிட் கார்டின் லிமிட்டை அதிகப்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் இவை பயனாளர்களின் தகவல்களை எளிதில் திருடுவதற்கு வாய்ப்பாக அமைகின்றன. இந்த ஆப்கள் கடந்த மாதத்திலும், இந்த மாதத்திலும் ப்ளே ஸ்டோரில் அப்லோடு செய்யப்பட்டிருக்கின்றன.  ESET நிறுவனம் செய்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அவை நீக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதற்குள்ளாக இந்தப் போலி ஆப்களை நூற்றுக்கணக்கானோர் இன்ஸ்டால் செய்திருக்கிறார்கள். எனவே அவர்களின் தகவல்கள் திருடப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Sponsored


எப்படிச் செயல்படுகின்றன இந்த ஆப்கள்

இது போன்ற ஆப்கள் செயல்படும் விதம் மிக எளிமையானது. தோற்றத்தில் அதிகாரபூர்வ ஆப்களைப் போலவே  இவை வடிவமைக்கப்பட்டவை. இதை இன்ஸ்டால் செய்யும் போதும், பயன்படுத்தும் போதும் எந்த வித சந்தேகமும் எழாதவாறு உருவாக்கப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்துபவர்கள் இது தெரியாமல் பயன்படுத்தத் துவங்குவார்கள். இதனுள்ளே வழக்கம் போல தகவல்களை நிரப்புவதற்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அவை அனைத்தும் போலியானவை, அது தெரியாமல் அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்பிச் சமர்ப்பித்தால் அவை தவறானவர்களின் கைகளுக்குச் சென்று விடும்.

தற்பொழுது ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டு விட்ட இவை எப்படிச் செயல்படுகின்றன எனவும், தகவல்கள் எப்படித் திருடப்படுகின்றன என்பதைப் பற்றி  ESET நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றாலும் கூட அதைச் சமர்ப்பிக்கும் போது அதை ஏற்றுக்கொண்டு அதற்கான உறுதி செய்தியும் காட்டப்படுகிறது. இதே அதிகாரபூர்வ ஆப் என்றால் அவசியமான தகவல்களை தரவில்லை என்றால் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. ஆனால் இது போலி என்பதால்  தகவலைத் தரவில்லை என்றாலும் கூட அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இதில் பதிவிடப்படும் தகவல்கள் அனைத்தும் இதை உருவாக்கியவரின் சர்வருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 

அதன் இணையதள முகவரிக்குச் செல்லும்போது திருடப்பட்ட தகவல்களைப் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட இணையதள முகவரி இருந்தால் இந்தத் தகவல்களை யார் வேண்டுமானாலும் அணுக முடியும். எனவேதான் இது மிகவும் அபாயகரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த மூன்றும் வேறு வேறு ஆப் ஆக ப்ளே ஸ்டோரில் அப்லோடு செய்யப்பட்டிருந்தாலும் இதை ஒருவரே உருவாக்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. கூகுள் நிறுவனம் எவ்வளவு பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினாலும் இத்தகைய போலியான ஆப்கள் அவ்வப்போது ப்ளே ஸ்டோரில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகின்றன. எனவே  ஆப்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது என்பது நமது கையில்தான் இருக்கிறது. 

மொபைல் பேங்கிங் ஆப்களைப் பயன்படுத்தும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • ஒரு ஆப் அதிகாரபூர்வமானதுதானா என்பதை உறுதி செய்வது மிக அவசியமானது. ப்ளே ஸ்டோரில் அப்படிக் கண்டுபிடிப்பதற்கு சிரமமாக இருந்தால் எளிதான வழி ஒன்று இருக்கிறது.
  • வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆப்பிற்கான லிங்குகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்வதன் மூலம் ப்ளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்யலாம்.
  • இன்ஸ்டால் செய்வதற்கு முன்னர் டவுன்லோடு எண்ணிக்கை, ரேட்டிங், ரிவ்யூஸ் ஆகியவற்றை ஒரு முறை பரிசோதித்துக் கொள்ளலாம். 
  • வழக்கமாகக் கேட்கப்படும் விவரங்களைத் தவிர்த்து தேவையற்ற தகவல்களைக் கேட்பது போலத் தெரிந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • ஆப்பைப் பயன்படுத்துவதில் சந்தேகம் இருந்தால் அதை நன்கு பயன்படுத்தத் தெரிந்தவர்களிடமோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டோ தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
  • இயங்குதளத்தை அடிக்கடி அப்டேட் செய்வது அவசியம். அதற்கு வாய்ப்பில்லையென்றால் ஆன்டி வைரஸ் ஆப்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.Trending Articles

Sponsored