Sponsored
தஞ்சையை மிரட்டும் டவுசர் கொள்ளையர்கள்...மூன்று பெண்களை தாக்கி நகைகளை பறித்து சென்றதால் பரபரப்பு...
தஞ்சாவூர் எஸ்.பி.செந்தில்குமார் வணிகர்கர்களுடன் சிசிடி பொருத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனையில் ஈடுபட்டு வழிப்பறி,திருட்டு சம்பவங்களை தடுக்க அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த கூட்டம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே டவுசர் கொள்ளையர்கள் மூன்று பெண்களை தாக்கி பத்து பவுன் நகையை பறித்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் கரந்தை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் எஸ்.பி.செந்திகுமார் வணிகர்களுடன் நேற்று இரவு சிசிடிவி பொருத்துவது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.அப்போது வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும்,குற்றவாளிகளை உடனே பிடிப்பதற்கும் அனைத்து கடைகள் மற்றும் வனிக நிறுவனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என அறிவுரை வழங்கியதோடு அது குறித்த துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். இந்த கூட்டம் நடந்து முடிந்த கொஞ்ச நேரத்திலேயே வீட்டில் முன் பகுதியில் உட்கார்ந்து பேசி கொண்டிருந்த மூன்று பெண்களை தாக்கி பத்து பவுன் நகையை டவுசர் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
Sponsored
தஞ்சாவூர் பூக்கொல்லை ரோடு வெங்டேஷ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரநாத் இவரது மனைவி தாமரைசெல்வி ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் நேற்று இரவு 9 மணிக்கு மேல் தன் வீட்டின் முன்பு தனது மருமகள் நிம்மி மற்றும் பக்கத்து வீட்டு பெண் அம்சவள்ளி ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது டவுசர் அணிந்து கொண்டு வந்த இரண்டு மர்ம நபர்கள் தாமரைசெல்வியை உருட்டுகட்டையால் தாக்கி அவரிடமிருந்து 6 பவுன் நகையையும், அவரது மருமகள் நிம்மியிடமிருந்து 4 பவுன் நகையையும் பறித்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து டவுசர் கொள்ளையர்களை பிடிக்க முயன்ற அம்வள்ளியையும் தாக்கி விட்டு 10 பவுன் நகையுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தாக்கப்பட்ட மூவரும் காயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.வீட்டிற்கு முன்பே நடந்த இந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் விலகவில்லை. இது குறித்து தஞ்சை தமிழ்பல்கலைகழக போலீசார் வழக்கு பதிவு செய்து டவுசர் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் துாரத்தில் காவல்துறை எஸ்.பி. அலுவலகம் உள்ளது.
Sponsored
இது குறித்து பேசிய ஒருவர், எஸ்.பி அலுவலகம் இருக்கும் இடத்திற்கு அருகிலேயே டவுசர் அணிந்து கொண்டு வந்த கொள்ளையர்கள் வீட்டிற்கு முன் அமர்ந்திருந்த பெண்களை தாக்கி நகைகளை பறித்து சென்றிருக்கின்றனர்.ஏற்கனவே இரண்டு சக்கர வாகனத்தில் வந்து பெண்களிடம் நகையை பறித்து சென்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பெண்கள் ஒரு வித பீதியில் இருக்கின்றனர். இப்போது டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசமும் மீண்டும் ஆரம்பித்துள்ளது.ஆரம்பத்திலேயே அவர்கள் யார் என கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Trending Articles
`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை!' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.
`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை?' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி!
``இங்க லஞ்சம் சர்வசாதாரணம்!''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்
``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
Sponsored