மத்திய அமைச்சரை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம்!Sponsoredஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தில் ஏழை இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி, ஆட்சிக்கு வந்ததும் மக்களை, ஏமாற்றிய மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதவி விலக வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை கண்டித்து நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த சமயத்தில், ஏழை இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கேட்டு அண்ணா ஸ்டேடியம், நாகராஜா கோயில் திடல் ஆகிய பகுதிகளில் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Sponsored


மத்தியில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைந்த உடன் ஏழை இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கும் கோப்பில், முதல் கையெழுத்து போடுவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும், ஏழை இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கவில்லை. எனவே மக்களை ஏமாற்றி வெற்றிபெற்ற, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்" என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Sponsored
Trending Articles

Sponsored