எனக்கும் மத்த பெண் பிள்ளைகளைப்போல வாழ ஆசையா இருக்கு!Sponsoredபொறுப்புத் துறப்பு: கீழ்க்காணும் கட்டுரை கீட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

‘ஒரு தந்தையின் அரவணைப்பில் வாழ்வது எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது. என் அப்பா, நான் அம்மாவோட வயித்துல இருக்கும்போதே பொறுப்புகளை ஏத்துக்க பயந்து என் அம்மாவை விட்டுட்டுப் போயிட்டார். அவரை நான் பார்த்ததே கிடையாது. ஆனால், அது எனக்கு என்றுமே ஒரு பிரச்னையாக இருந்தது இல்லை. நான் பிறந்த பிறகு, என் அம்மாதான், அம்மாவாகவும், அப்பாவாகவும் இருந்து என்னை வளர்த்தாங்க. அதனால, எங்க சின்ன குடும்பத்துல நான் எதையுமே மிஸ் பண்ணல. அவ்வப்போது நான் என் தாயை “சூப்பர் ஹீரோ” என்று அழைப்பதுண்டு. அப்போதெல்லாம் அவள், தனக்கு அந்த “சூப்பர் பவர்” என்னிடமிருந்துதான் கிடைப்பதாகக் கூறுவாள்.

ஸ்ரேயாவுக்கு உதவ க்ளிக் செய்க....

Sponsored


Sponsored


ஸ்ரேயாவுக்கு உதவ க்ளிக் செய்க....

இன்று நான் சிறுநீரகக் கோளாறின் இறுதி நிலையில் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்து, என்னோட “சூப்பர் ஹீரோ” சில நேரங்களில் கதறி அழறதப் பார்க்கும்போதெல்லாம் என் மனசு உடைஞ்சிடும். பக்கத்து வீடுகளில் வேலை செஞ்சு சம்பாதிக்கும் சொற்ப வருமானமான 2500 ரூபாயை வச்சுகிட்டு, என்னோட “கிட்னி டிரான்ஸ்பிளான்ட்”சிகிச்சைக்குத் தேவையான 20 லட்சம் ரூபாயைத் தயார் செய்ய முடியாம தவிச்சு நிக்கிறாங்க என் அம்மா. அவங்களுக்கு சரியான நேரத்துல பணம் கெடைக்கலேன்னா, என் அம்மா அவங்க உலகமான என்னை, இழந்துடுவாங்க. 

நான் ஆறு வயசா இருக்கும்போது ஒடம்பு சரியில்லாம ஆனேன். அதிலிருந்துதான் இந்தப் பிரச்னை ஆரம்பமாச்சு. அப்போதான் எனக்கு முதல் முதலா ஹார்ட் சர்ஜரி செஞ்சாங்க, அதுக்கப்புறம் நாங்க ஹாஸ்பிடலுக்கு அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தது. சர்ஜரிக்கு அப்புறம் நெறைய டெஸ்ட் எடுத்துப் பார்த்தாங்க, ஆனா அது எதுவுமே எனக்கு என்ன பிரச்னைன்னு சொல்லல. எனக்கு என்ன பிரச்னைன்னு தெரிஞ்சுக்க அம்மா ஆர்வமா இருந்தாங்க. ‘உனக்கு எதுவும் ஆகாது, எல்லாம் சரியாப் போயிடும்”னு எங்கிட்ட சொல்லிகிட்டே இருப்பாங்க. நடுராத்திரிலகூட அவங்க கண்ணீர் என் மேல விழறத உணர முடிஞ்சது. எனக்கு உடம்புல இருந்த வலியைவிட அது அதிகமா வலிக்க வச்சுது. அவங்க கவலைப்படாம இருக்கணும்ங்கிறதுக்காகவாவது எனக்கு எல்லாம் சரியாகிடணும். 

ஒருநாள் நான் சிறுநீர் கழிக்க முயன்றபோது, என் உடம்பு முழுக்க வலி வந்திச்சு. பக்கத்தில் இருந்தவங்ககிட்ட கத்தி உதவி கேட்டப்போ, இந்த வலியும் கடந்து போகும்னுதான் நெனச்சேன். ஆனா, அப்புறம்தான் தெரிஞ்சுது எனக்கு கிட்னி பிராப்ளம் இருக்குன்றது. அதுக்கப்புறம் ஒவ்வொரு வாரமும் நான் டயாலிசிஸ் செய்துட்டு வர்றேன். ஒருநாள் விட்டு ஒருநாள் உயிரே போகிற மாதிரி வலிக்கிற ஊசி போட்டுக்கிறேன். முன்னெல்லாம் என் வலியைப் பார்த்து அம்மா வேதனைப்படறாங்களேன்னு என் வலியை மறைச்சிடுவேன். ஆனால், சில செஷனுக்கு அப்புறம், என் உடம்பு வலியைத் தாங்கிக்கிற சக்திய சுத்தமா இழந்திடுச்சு. என் கைகள் வீங்கிடுச்சு. ஒவ்வொரு டயாலிசிஸ் செஷன் நடக்கும்போதும் வலியால நான் துடிச்சு அழறது வழக்கமாயிடுச்சு.

ஸ்ரேயாவுக்கு உதவ க்ளிக் செய்க....

ஸ்ரேயாவுக்கு உதவ க்ளிக் செய்க....

நான் இப்படி கோழையா மாறிட்டதுதான் எனக்கு வெறுப்பா இருந்தது. நான் 14 வயசா இருந்தப்போ, அம்மா என்னை தூக்கிகிட்டு கொண்டுபோய் ஸ்கூல்ல விடுவாங்க. ஏன்னா, என்னால நடக்கவோ, படி ஏறவோ முடியல. ஆனாலும், என்னால முடிஞ்ச வரைக்கும் என் வேலைகளை செஞ்சுக்க முயற்சி செய்தேன். ஆனா, அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. எட்டாவது படிக்கும்போது நான் ஸ்கூலவிட்டு நின்னுட்டேன். என் ஸ்கூல நான் ரொம்ப மிஸ் பண்றேன், குறிப்பா ஸ்கூல்ல என்னோட பேவரைட் பீரியடான டிராயிங் & பெயிண்டிங் கிளாஸ மிஸ் பண்றேன். நான் ஒல்லியா இருக்கிறத பார்த்து, என் ப்ரெண்ட்ஸும், பக்கத்து வீட்டுக்காரங்களும் கிண்டல் பண்ணுவாங்க. அவங்க எல்லாம் இப்படி ஆரோக்கியமான உடம்பு கெடைக்க எவ்வளவு கொடுத்து வச்சிருக்காங்கன்னு நெனைப்பேன். அது மாதிரி உடல் கெடைக்க நான் எது வேணும்னாலும் செய்வேன். அவங்க மாதிரி நாம நெனைச்சப்ப விளையாடுறதோ, படிக்கிறதோ, தூங்கறதோ என்னால முடியாது. 

எனக்கு இப்போ 16 வயசு. நான் இப்போ கிட்னி பெயிலியரோட கடைசி கட்டத்துல இருக்கேன். என் மருத்துவத்துக்குத் தேவையான பணம் சரியான நேரத்துக்குக் கெடைக்கலைன்னா நான் ரொம்ப நாள் வாழமாட்டேன். இறப்பைப் பத்தி நெனச்சுப் பார்த்தாலே பயமாயிருக்கு. அந்த எண்ணம் வராம இருக்க முயற்சி பண்ணுவேன். இப்போதைக்கு, அம்மா என் கூட இருக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். பெரும்பாலான நாள்கள் எனக்கு வேதனையான நாள்கள்தான்னாலும், பானிபுரி சாப்புடறது, நான் வரைஞ்ச பெயின்டிங்கை யாராவது விரும்பி வாங்கும்போது, வேகமாக காத்தைக் கிழிச்சுகிட்டு சைக்கிள் ஓட்டும்போது கெடைக்கிற சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் எனக்கு இப்போ ஆறுதல் கொடுக்குது. இது என்னோட கிட்னி சரியா வேலை செய்யலங்கிறத மறக்க உதவுறதோட, என் ட்ரீட்மேன்ட்டுக்காக ஹாஸ்பிடல் அப்பப்ப கொடுக்கிற பில்லைக் கட்டவும் பயன்படுது.


இந்த உலகத்துலேயே அழகான சிரிப்பு என்னுடையதுன்னு என் அம்மா சொல்வாங்க. நானும் எங்க அம்மா முகத்துல சிரிப்ப

பார்க்கறதுக்காகவே சிரிக்க முயற்சி செய்வேன். ஆனா, அம்மாவோட சிரிப்புக்குப் பின்னாடி என்னை இழந்திடுவோமோங்கிற பயம் இருக்கிறது தெரியுது. அத என்கிட்ட இருந்து மறைக்கறாங்க. என்னைப் பார்த்துக்கிற நேரம் போக, கெடைக்கிற கொஞ்ச நேரத்துல ஒரு வீட்டுல வேலை செய்யறாங்க. அதுல கெடைக்குற நாலு இலக்க சம்பளத்தை வச்சுத்தான் என் டெஸ்ட், மருந்துக்கெல்லாம் செலவு பண்ண வேண்டியிருக்கு. அவங்களுக்கு இந்த பில்லை எல்லாம் எப்படி கட்டப்போறோம்ங்கிற நெனப்புதான். என் ப்ளோர்ல இருக்கிற எல்லா பேஷண்ட்ஸ் கூடவும் ப்ரெண்ட் ஆகிட்டாங்க அம்மா. வசதி இல்லாத பேஷண்டுகளோட மருத்துவ செலவுக்கு உதவும் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் பத்தி கேட்டுத் தெரிஞ்சுகிட்டாங்க. 


இந்த பத்து வருஷமா, என் நோய் பத்திய மருத்துவப் பெயர்கள், மருத்துவமனை பில்கள் ஆகியவற்றைப் பத்தி அவங்களாவே கத்துகிட்டு தெரிஞ்சுகிட்டாங்க. அவங்க கண்கள் எப்பவுமே சோர்வா இருக்கும். அவங்க நிம்மதியோட இருந்தே ரொம்ப நாள் ஆச்சு. அவங்க படற கஷ்டத்தைப் பார்க்கும்போது, என்னால முடிஞ்ச அளவுக்கு உதவி செய்யணும்னு நெனைப்பேன். அதனால, எனக்கு பால் பிடிக்காதுன்னாலும், அவங்க குடிக்கச் சொல்றதால தினமும் காலைல தவறாம பால் குடிக்கிறேன். ஒவ்வொரு டயாலிசிஸ் செஷனுக்கு முன்னாடியும் நான் தைரியமா இருக்கணும்னுதான் நெனப்பேன். ஆனா, ஓரளவுக்குத்தான் என்னால அப்படி இருக்க முடியுது. எங்க அம்மாவ தனியா விட்டுட்டுப் போக நான் விரும்பல. என் வயசுப் பொண்ணுங்களைப் போல எனக்கும் வளர்ந்து, வேலைக்குப் போயி அம்மாவுக்கும் சேர்த்து சம்பாதிச்சு அவங்களப் பெருமைப்படுத்தணும்னு ஆசை. எங்க குடும்பத்துக்கு உங்களால முடிஞ்சா உதவிய செஞ்சு காப்பாத்துங்க. 


என் அம்மா என்னோட ட்ரீட்மெண்டுக்கு செலவு பண்ண, உங்களால முடிஞ்ச உதவிய இந்த கீட்டோ (நிதி திரட்டும் நிறுவனம்) மூலமா உதவுங்க.

இப்படிக்கு,
ஸ்ரேயா
உங்களைப் போல வாழ ஆசைப்படும் ஒரு பெண்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கீட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.Trending Articles

Sponsored