அல்சைமர் விழிப்புஉணர்வுக்காக பிரமாண்ட மாரத்தான்... சென்னையில்!Sponsoredல்சைமர்... உலகம் முழுவதும் சுமார் 4 கோடியே 70 லட்சம் பேரைப் பீடித்திருக்கும் கொடூர நோய். கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் செல்களைச் சிதைத்து, ஞாபக சக்தியைக் குறைத்து, தன்னைப் பற்றிய நினைவுகளையே மறக்க வைத்துவிடும் இந்த நோய், அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது. 

இந்தநோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள இயலாது. பழகிய முகங்களையே மறந்துவிடுவார்கள். முடிவுகள் எடுக்கச் சிரமப்படுவார்கள். பிறரின் உதவியின்றி அவர்களால் செயல்படவே முடியாது. 

Sponsored


குறிப்பிட்ட சில ஜீன்களில் ஏற்படும் மரபணு மாற்றமே இந்நோய்க்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. ‘அடிக்கடி தலையில் காயம் ஏற்படுதல், கடும் மன அழுத்தம் காரணமாகவும் அல்சைமர் வரலாம்’ என்கின்றனர் மருத்துவர்கள்.

Sponsored


இந்நோயைக் குணப்படுத்த இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. நோயின் தீவிரத்தைச் சற்றுக் குறைக்க மட்டுமே முடியும். அல்சைமர் நோய் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 21-ம் தேதியை ‘உலக அல்சைமர் விழிப்புஉணர்வு தினமாக’ கடைப்பிடித்து வருகிறார்கள். 

உலக அல்சைமர் விழிப்பு உணர்வு தினத்தையொட்டி, ‘தி பர்ப்பிள் ரன்’ (The Purpple Run) என்ற பெயரில் மாரத்தான் ஓட்டம் ஒன்றை, டாக்டர் விகடன் ஆதரவுடன் சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் விஜயா மால் (The Forum Vijaya Mall) நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. 

இது குறித்து விஜயாமால் பொதுமேலாளர் உமேஷ் ஐயர் தெரிவித்ததாவது:-

அல்சைமர் நோய் விழிப்புஉணர்வுக்காக,  செப்டம்பர் 24-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பெசன்ட் நகரில் தொடங்கும் இந்த மாரத்தான் ஓட்டத்தில், விளையாட்டு வீரர்களுடன் மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்க உள்ளார்கள். ஃபோரம் விஜயா மால்கள் செயல்படும் பெங்களூரூ, மங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் நடக்கவிருக்கும் இந்த மாரத்தான் ஓட்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளார்கள். 

3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., மற்றும் 21 கி.மீ., ஆகிய பிரிவுகளில் மாரத்தான் நடக்கிறது. இதற்கான முன்பதிவு தொகை 500 ரூபாய்  இந்த நுழைவுக்கட்டணம் செலுத்தி பங்கேற்கும் அனைவருக்கும் டி-சர்ட், மெடல், சான்றிதழ், உணவு ஆகியவை வழங்கப்படுகிறது. 

12 வயதுகுட்பட்டவர்கள்,  55 வயதுக்கு மேற்பட்டோர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதேபோல, 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே 21 கி.மீ., பிரிவில் கலந்து கொள்ள முடியும். மற்ற பிரிவுகளில் அனைவரும் பங்கேற்கலாம். சிறுவர்கள் கண்டிப்பாக, பெரியவர்களுடன் சேர்ந்தே பங்கேற்க முடியும். அனைத்துப் பிரிவு மாரத்தானுக்கும் பதிவு செய்வதற்கு கடைசி நாள், செப்டம்பர் 21-ம் தேதியாகும். 

போட்டியில் பங்கேற்பவர்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகை, பெங்களூரிலுள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மென்ட்டல் ஹெல்த் அன்ட் நியூரோ சயின்ஸ் (NIMHANS) நிறுவனத்துக்கு வழங்கப்படும். இந்தத் தொகையை அல்சைமர் நோய்க்கான சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்கு அந்நிறுவனம் பயன்படுத்தவுள்ளது. 

நீங்களும் இந்த மாரத்தானில் பங்கேற்க https://goo.gl/dSfRtY என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம். 4904 9000 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். 9600008004 என்ற எண்ணுக்கு உங்களைப் பற்றிய விபரங்களை வாட்ஸ்அப் செய்தும் பதிவு செய்யலாம். 

இவ்வாறு உமேஷ் ஐயர் தெரிவித்தார்.

ஒரு நல்ல காரியத்துக்காக ஓடத் தயாரா நீங்கள்?Trending Articles

Sponsored