துணி, நாப்கின், மென்ஸ்ரட்ல் கப்ஸ், டேம்பான்ஸ்... இவற்றின் ப்ளஸ், மைனஸ் என்னென்ன!?Sponsoredமாதவிடாய் வரும் நாள் நெருங்க நெருங்க, அந்த நாள்கள் பற்றிய பயமும் பதற்றமும் அதிகரித்துவிடுகிறது. வலி ஒரு பக்கம், அந்த நேரத்தின் அசௌகரியம் என மனதைப் பதற்றத்தில் ஆழ்த்தும். மாதவிடாயின்போது, துணியைப் பயன்படுத்துதல் என்பது இப்போதெல்லாம் ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனாலும், நாப்கின்களைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய சுகாதாரம் குறித்த பரவலான விழிப்புஉணர்வு இன்னமும் பலரிடம் இல்லை. இப்போதெல்லாம், நாப்கின்களுக்குப் பதிலாக, மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்கான புதிய வரவுகள் வந்திருக்கின்றன. அவற்றை எப்படி முறையாகப் பயன்படுத்துவது? அதிலிருக்கும் நன்மைகள், பிரச்னைகள் என்னென்ன? இதுகுறித்து விளக்குகிறார், மகப்பேறு மருத்துவர் தீபா கணேஷ்.

டேம்பான்ஸ் (Tampons):

Sponsored


நீளமாக இருக்கும் டேம்பான்ஸை பெண்ணுறுப்பின் உள்ளே செலுத்திப் பொருத்த வேண்டும். அதன் அடியில் வெளியே எடுக்க, ஒரு நூலும் பொருத்தப்பட்டிருக்கும். உள்ளே செலுத்தும்போது, சௌகரியமான உணர்வு வரும். அப்படி வந்தால், செட்டில் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

Sponsored


இது, விளையாட்டு வீராங்கனைகளுக்கும் நீச்சலில் ஈடுபடுபவர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஒன்று. பெரிய அளவில் அசௌகரியம் இருக்காது. இதை, மூன்று மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால், உடலிலிருந்து வெளியாகும் ரத்தத்தில், பெண்களின் உடலில் பொதுவாக இருக்கும் 'ஸ்டெஃப்பிலிக்காக்கஸ் (Staphylococcus aureus) என்ற பாக்டீரியா கலக்கும். இதனால், நச்சுத்தன்மை ஏற்பட்டு, 'டாக்சிக் ஷாக் சின்ரோம்' என்கிற நோய் வரலாம். இது, சற்று ஆபத்தான நோய் என்பதால், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நறுமணமூட்டப்பட்ட டேம்பான்ஸ்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அது, பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

மென்ஸ்ரட்ல் கப்ஸ் (Menstrual cups):

சிலிக்கானில் செய்யக்கூடியது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்பதால், பொருளாதார ரீதியாகப் பயன்படக்கூடியது. 10 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

பிறப்புறுப்பின் உள்ளே செலுத்திவைக்க வேண்டும். எடுக்கும்போது, அழுத்தி அதிலிருக்கும் ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். பிறகு, சரியான முறையில் கழுவி மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

வெளியில் செல்லும்போது சில பெண்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம். சிலருக்கு எந்த அளவு சரியாக இருக்கும் என்பது தெரியாது. அதையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும். சரியாகப் பொருத்துவது குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல, வெளியே செல்லுபோது அதனை வெளியே எடுத்து, கழுவுவது கடினமானதாக இருக்கலாம். அதிலிருக்கும் ரத்தத்தை வெளியே அழுத்தி எடுப்பதை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

காப்பர்ட் டி (கருத்தடை சாதனம்) வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பெண்ணுறுப்பில் செலுத்த வேண்டும் என்பதால், பெரும்பாலும் வீடுகளில் அதனைப் பயன்படுத்துவதை விரும்ப மாட்டார்கள்.

இதைப் பயன்படுத்தியதால், டாக்சிக் சின்ட்ரோம் வந்ததாக ஒரு வழக்கும் இருக்கிறது.

நாப்கின்கள்:

பொதுவாக சந்தையில் விற்கப்படும், பரவலாகப் பயன்படும் நாப்கின்களை, ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை அவசியம் மாற்ற வேண்டும்.

சிலருக்கு மாதவிடாயில் பெரிதாக ரத்தம் வெளியேறவில்லை என்பதால், காலையில் ஒன்று, இரவில் ஒன்று மட்டுமே வைத்துக்கொள்வார்கள். அது, மிகவும் தவறு. அது அசுத்தமான ரத்தம். எனவே, ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றியாக வேண்டும். மாற்றாமல் இருக்கும்போது, அந்த ஈரத்தன்மையில் காரணமாக பூஞ்சைத்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரிப்பும் ரேஷஸும் வரலாம்.

நாப்கின்களை வெள்ளையாக்க, பிளிச்சிங் குளோரின் பவுடர் பயன்படுத்தப்படுவதால், அதனை வெகு நேரம் ஈரத்தன்மையுடன் வைத்திருப்பது, நச்சு வெளியேறும் வாய்ப்பை ஏற்படுத்தும். நீண்ட காலங்களுக்கு இதையே செய்யும்போது... கருப்பை மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்ணுறுப்பிலும் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிந்தட்டிக், பிளாஸ்டிக் நாப்கின்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

துணி நாப்கின்:

நாப்கின்களை துணியில் செய்து விற்கிறார்கள். இது, மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்பதால், ஒழுங்காகச் சுத்தப்படுத்த வேண்டும். வேறு நாப்கின் வைக்கும்போது, பயன்படுத்திய நாப்கினை பையில் எடுத்துவருவதை யாரும் விரும்ப மாட்டார்கள்.

பொதுவாகப் பேண வேண்டிய சுகாதார விஷயங்கள்:

எது உங்கள் உடலுக்குச் சரியாகப் பொருந்தும் என்பதைச் சரியாக அறிந்து முடிவுசெய்ய வேண்டும். இரண்டு பேடுகளை வைப்பது தவறு. அது, காற்றுச் சுழற்சியைத் தடுக்கும். தொற்றும் வரலாம்.

இந்த நான்கு வகைகளையும் மாற்றி மாற்றி பயன்படுத்தக் கூடாது. நாப்கின் என்றால், நாப்கினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டேம்பான்ஸ் வைத்துக்கொண்ட சிலர், நாப்கினையும் வைத்துக்கொள்வார்கள். அதனைத் தவிர்க்க வேண்டும்.

அரிப்போ அல்லது எரிச்சலோ இருக்கும்போது, ஆண்டிசெப்டிக் க்ரீம் அல்லது பவுடர்களைப் பயன்படுத்தலாம்.

வெஜைனல் நறுமண ஸ்ப்ரேகளைப் பயன்படுத்தக் கூடாது.

மிதமான சூட்டில் இருக்கும் நீரில், பெண்ணுறுப்பைக் கழுவ வேண்டும். உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.Trending Articles

Sponsored