வளரும் நாடுகளில் 15-ல் ஒரு குழந்தைக்குப் போதுமான உணவில்லை... என்ன செய்யப்போகிறோம்? #WorldFoodDaySponsoredனித வாழ்க்கைக்கு ஆதாரம் நீர், உணவு, காற்று. எத்தனையோ நாடுகளில் டன் கணக்கில் உணவுகள் வீணாகிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில்தான், ஒரு வேளை உணவுக்குக்கூட உத்தரவாதம் இல்லாமல் ஹைத்தியிலும் ஜாம்பியாவிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழக்கிறார்கள். அதிகம் போக வேண்டாம். இந்தியாவிலேயே நம் எல்லோருக்கும் உணவளிக்கும் விவசாயிகளே உணவில்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை. இப்படிப்பட்டச் சூழலில்தான் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது... ‘உலக உணவு தினம்’. உலகின் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற குறிக்கோளை வலியுறுத்துவதே இந்த நாளின் நோக்கம்.

உலக உணவு தினம் (World Food Day) ஆண்டுதோறும் அக்டோபர் 16-ம் நாளன்று உலக நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. 1945-ம் ஆண்டில், இதே நாளில் ஐக்கிய நாடுகள் சபையால், கனடாவில் உள்ள கியூபெக் நகரில், உலக உணவு மற்றும் விவசாயக் கழகம் (FAO) நிறுவப்பட்டது. 1979-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Sponsored


உலகளவில் நாடுவிட்டு நாடு இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 2015-ம் ஆண்டின் கணக்குப்படி, 24 கோடியே 40 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 2000-ம் ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். உலக அளவில் வளர்ச்சியடையாத நாடுகளில் சுமார் 98 சவிகிதம் குழந்தைகள் போதுமான அளவுக்கு ஊட்டச்சத்துள்ள உணவில்லாமல் இருக்கிறார்கள் என்கிறது அந்தப் புள்ளிவிவரம். வளரும் நாடுகளில் 15 குழந்தைகளுக்கு ஒரு குழந்தைக்குப் போதுமான உணவில்லை..

Sponsoredஇவர்களுக்கான உணவுத் தேவையை எப்படிப் பூர்த்தி செய்யப் போகிறோம் என்பது நம் கண் முன் நிற்கும் மிகப் பெரிய கேள்வி. உணவு உற்பத்திக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சவாலை எதிர்கொள்வதற்காகவே உலக உணவு தினத்தில் (World Food Day) `இடம்பெயர்பவர்களின் எதிர்காலத்தை மாற்ற வேண்டும்' (Change the future of migration) என்பதை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவித்திருக்கிறது ஐ.நா. மேலும், `உள்நாட்டிலேயே அதற்கான முயற்சிகளைத் தொடங்க வேண்டும்; உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த உணவு உற்பத்திக்குப் பெரும் தடையாக இருப்பது பருவநிலை மாற்றம். அதாவது, புவி வெப்பமயமாதல், காடுகளை அழித்தல் போன்றவற்றால் பருவநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் தட்பவெட்ப நிலை, காற்று, ஈரப்பதம் என எல்லாச் சூழலியல் காரணிகளும் மாறிவிட்டன.

உலகில் பெரும்பாலான விவசாயிகள், பருவமழையைச் சார்ந்துதான் விவசாயம் செய்கின்றனர். மேலும், பருவ காலமே விவசாயத்துக்கும் பயிர் உற்பத்திக்கும் முக்கியமானதாக உள்ளது. ஆனால், இங்கே பருவ மழை பொய்த்துப் போகிறது; காவிரிக்கு நீதிமன்ற படி ஏறுகிறோம். வடக்கிலோ, பெருவெள்ளம்.


இந்தப் புவி நிலை மாற்றத்துக்கு இன்றியமையாத காரணம், புவி வெப்பமயமாதல். இன்றைய நிலையில், உலகில் மக்கள்தொகை அதிகரிப்பால், வாகனப் பயன்பாட்டால், கார்பன்டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுக்கள் அதிகரித்துவருகின்றன. மற்றொரு பக்கம், நகரமயமாக்கல் காரணமாக காடுகள், இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுவருவதால், காடுகளின் அளவும் குறைந்துவருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, உலகின் வெப்பநிலை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இது தவிர, பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்தல் போன்ற பல்வேறு பாதிப்புகளை இன்றைய பருவநிலை மாற்றம் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்... நாடு என்ன செய்ய வேண்டும்... என்பதையெல்லாம் சிந்திக்கவேண்டிய முக்கியமான தருணம் இது. அதே நேரத்தில், நவீன வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டியதும், அதற்கான மாற்று வழிகளைப் பற்றி சிந்திக்கவேண்டியதும் அவசியமாகிறது.

இரு சக்கர வாகனப் பயன்பாட்டைக் குறைப்பது; மாற்றாக, மிதிவண்டியைப் பயன்படுத்துவது. பிளாஸ்டிக்குகளைத் தவிர்ப்பது. இப்படிப் பல முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீர் நிலைகளைப் பாதுகாத்தல், ஆறுகளைப் பாதுகாப்பது, மரக்கன்றுகள் நடுவது எனத் திரும்பத் திரும்ப சூழலியலாளர்கள் வலியுறுத்தும் செயல்களில் ஈடுபடலாம். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பைப் பிறருக்குத் தெரிவிப்பது, குழந்தைகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்துவது போன்ற எளிய காரியங்களைச் செய்யலாம். உணவின் உற்பத்தியை அந்தந்த நாடுகளில் அதிகரிப்பதன் மூலம் உணவுக்காகவும், வாழ்க்கைக்காகவும் நடைபெறகூடிய மக்களின் இடப்பெயர்வை தடுக்கலாம். அதற்கு முக்கியமாக, விவசாயிகளின் வாழ்வாதாரம் கெடாமல் பாதுகாக்கவேண்டியது மிக மிக அவசியம். இந்த உலக உணவு தினத்தில் நாம் செய்யவேண்டியது இதைத்தான்!Trending Articles

Sponsored