இரவில் கண் விழிப்பவர்களா நீங்கள்: மெலடோனின் குறையும் ஆபத்து!Sponsoredஇரவு நேரத்தில் தொடர்ந்து தூக்கம் வரவில்லையா, உங்கள் பணியே இரவு நேரத்தில்தானா, இரவு முழுக்க விழித்து செல்போன், சினிமா, கணினியைக் கவனிப்பவர்களா, நண்பர்களோடு சேர்ந்து தினமும் இரவைக் கொண்டாடுபவரா இவை எல்லாமே ஆபத்தானது என்பதை உடனே புரிந்துகொள்ளுங்கள். இரவில் மட்டுமே சுரக்கும் 'மெலடோனின்' என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்கிறது மருத்துவ உலகம். மூளையில் இருக்கும் பினியல் சுரப்பி சுரக்கும் இந்த மெலடோனின், சுரக்காமல் போனால் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் கெட்டுப்போகும். அது மட்டுமா, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து எல்லா நோய்களையும் வரவேற்கும் விதமாக உடல் கெட்டுவிடுகிறது என்கிறார்கள். 

மேலும், இரவில் கண் விழிப்பதால் ஓய்வுகொள்ள வேண்டிய கல்லீரலும் பாதிப்பு அடைகிறது. கண் தொடங்கி சிறுநீரகம் வரை இரவு தூக்கம் தொலைப்பதால் கடுமையான பாதிப்பை அடைகிறது. பகலில் உறங்குவதால் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாமல் அல்சர், செரிமானப் பிரச்னை என முதலில் நோய்கள் ஆரம்பிக்கிறது. மேலும், நரம்புத்தளர்ச்சி, தோல் சுருக்கம், மன அழுத்தம் தொடங்கி எதிர்மறையான எண்ணங்கள், ஆண்மைக்குறைவு, கல்லீரல் பிரச்னை என நோய்க்கு மேல் நோய் பெருகி வாழ்வையே சீர் குலைக்கிறது. இரவு நேரப் பணி, கேளிக்கை எல்லாம் 'கண்ணை விற்று சித்திரம் வாங்கும்' அபாய வேலைதான். எனவே, இப்போதே உங்கள் இரவு நேரத்து தூக்கத்தைத் தொடருங்கள்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored