கொஞ்சம் தண்ணி குடிங்க ப்ளீஸ்..! போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் ஆபத்து! #HealthAlertSponsoredனித உடல் 70 முதல் 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால் இந்த நீர்ச்சத்து, உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது. அதுதான் டீஹைட்ரேஷன் (dehydration) எனப்படும் உடல் வறட்சி. தற்போதைய நம் வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் உடல் வறட்சியால் பாதிக்கப்படுகிறார்கள். 

உடல் வறட்சிக்கான (டீஹைட்ரேஷன்) காரணங்கள் என்னென்ன, அதற்கான தீர்வுகள் என்ன? அதை எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து விவரிக்கிறார் பொது நல மருத்துவர் சிவராமகண்ணன். 

Sponsored


எது உடல்வறட்சி?

Sponsored


நாம் உட்கொள்ளும் நீர்ச்சத்தைவிட, அதிகளவு வெளியேறுவதே உடல்வறட்சி. அதுபோன்ற நேரங்களில், உடல் மேலும் இயங்க நீர்ச்சத்து தேவைப்படும். இந்தப் பிரச்னையை உடனடியாக சரிசெய்யாத பட்சத்தில், நீர்ச்சத்துக்கான தேவை அதிகரித்து பிரச்னை பெரிதாகும்.

தாகம் எடுப்பது, நாக்கு வறண்டுபோவது, உடல் சோர்வு, தசைப்பிடிப்பு, அதிகளவு சிறுநீர் கழிப்பது, தலை சுற்றுவது, தலைவலி ஏற்படுவது, வியர்ப்பது, குழப்பான மனநிலை போன்றவை உடல்வறட்சி ஏற்பட்டுள்ளதற்கான மிகமுக்கியமான அறிகுறிகளாகும்.

முதல் நிலை உடல் வறட்சி ஏற்படும்போது, பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது. கவனிக்காத பட்சத்தில், அடுத்தடுத்த நிலை பாதிப்புகளை அடையத் தொடங்குவர். இது, அதிகளவு சிறுநீர் வெளியேறுவது மற்றும் மயங்கி கீழே விழுவது, தொடர்ச்சியாக/அதிகளவு

வாந்தி எடுப்பது, தொடர் வயிற்றுப்போக்கு, மிகவும் சோர்வடைவது, தலைவலி, மூச்சுவிட திணறுதல், குழப்பமான மனநிலை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உடலை எச்சரிக்கும்.  தாமதிக்காமல் மருத்துவரை அணுகவேண்டும்.

எதனால் ஏற்படுகிறது நீர்ச்சத்து குறைவு?

உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதுதான் நீர்ச்சத்து குறைவதற்கான முக்கியமான காரணங்களாகும். 

உடலில் ஏற்படும் சில நோய்களும் நீர்ச்சத்துக் குறைவதற்கான காரணியாக இருக்கும். வயிற்றுப்போக்கு, வாந்தி, தீக்காயங்கள், உடல் சூடு, காய்ச்சல், அதிக வியர்வை, சர்க்கரை நோய் பாதிப்பு, போதிய அளவு நீர் அருந்தாமை போன்றவைதான் இதற்கான காரணங்களாக இருக்கும். பெரும்பாலும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், வயதானவர்கள், வெயிலில் வேலை செய்பவர்களைத்தான் இதுபோன்ற பிரச்னைகள் எளிதில் தாக்கும் என்பதால் அவர்களுக்கு கூடுதல் அக்கறை தேவை.

கவனிக்காமல் விட்டால், நீர்ச்சத்துக் குறைபாடு முதிர்ச்சி நிலையை (severe dehydration) அடையும். இது சிறுநீரகச் செயலிழப்பு, உணர்விழந்த முழு மயக்க நிலை (coma), அதிர்ச்சி நிலை, அதீத காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

எப்படித் தவிர்ப்பது?

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் எடுக்காத நிலையிலும் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கக் கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் தேநீர் அருந்துவதைப்போல தண்ணீர் குடிப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்குப் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு நீர்ச்சத்து குறைந்தவர்கள், முதல் நிலையிலேயே உணவுமுறையில் மாற்றத்தைப் பின்பற்றினால், பிரச்னையை சரிசெய்யலாம். உடலின் நீர்ச்சத்து அளவு குறைவதாக உணர்பவர்கள், சர்க்கரை மற்றும் உப்பு கலந்த நீரை அருந்த வேண்டும். எலக்ட்ரால் (Electrol powder) அல்லது ஜூஸ் வகைகளையும் அருந்தலாம்.

உடல் வறட்சி என்பது இயல்பாக ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றுதான் என்றாலும் கூட, கவனிக்கப்படாத பட்சத்தில், அது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முன்னெச்சரிக்கையோடு செயல்படுதல் நல்லது!Trending Articles

Sponsored