`துரித உணவுக்கு பை பை, மெது உணவுக்கு வெல்கம்!’ - த்தெரா மேத்ரே தினப் பகிர்வு! #TerreMadreSponsoredவசர உலகில், அவசரம் அவசரமாக அள்ளிச் சாப்பிடுவதுதான் உணவு என்றாகிவிட்டது. 'ஃபாஸ்ட் ஃபுட்' (Fast food) எனப்படும் துரித உணவுகள் தவிர்க்க முடியாதவைகளாகவே இருக்கின்றன. `சாப்பிடச் சுவையாக இருந்தாலும், இந்தத் துரித உணவுகள் பல்வேறு நோய்களை இழுத்துவிடும் சாத்தியம்தான் அதிகம்’ என்பது ஆய்வாளர்களின் கருத்து. 'இந்த உணவுகளைச் சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, துரித உணவுகளைத் தவிருங்கள்' என்பதுதான் மருத்துவர்களின் எச்சரிக்கையாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட தீய விளைவுகளைத் தரும் துரித உணவுகளுக்கு எதிராக உலகம் முழுக்க துரிதமாக பரவ ஆரம்பித்திருக்கிறது 'ஸ்லோ ஃபுட்' (Slow food) எனப்படும் மெது உணவு.

'என்னங்க இது மெதுவடை மாதிரி சொல்றீங்க...' என்கிறீர்களா? இது, 'ஸ்லோ ஃபுட்' என்பதை நாமே மொழிபெயர்த்தபோது கிடைத்த வார்த்தை. நன்றாக இருக்கிறதுதானே!

Sponsored


வாடிக்கையாளர்: 'என்னங்க வடை கேட்டா, இவ்வளவு லேட்டா கொண்டு வர்றீங்களே?

Sponsored


சர்வர்: நீங்கதானே மெது வடை கேட்டீங்க... அதான் மெதுவா கொண்டு வர்றேன்...

- இது ஒரு காலத்தில் வெளியான ஜோக். இந்த ஜோக்கை, இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

இந்த மெது உணவு, இத்தாலியில் ஓர் இயக்கமாகவே உருவெடுத்து, தற்போது உலகம் முழுக்க 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைபரப்பிக்கொண்டிருக்கிறது. இப்போது இந்தியாவும் இதில் ஓர் அங்கமாக இணைந்திருக்கிறது. ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தின் தீமைகளை உணர்ந்த இத்தாலி தேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும், கல்வியாளரும், மண்ணியல் நிபுணருமான கார்லோ பித்ரானி (Carlo Petrini), 1980-களில் சில ஆர்வலர்களுடன் இணைந்து உருவாக்கியதுதான் மெது உணவு. உள்ளூர் மரபுகள், பாரம்பர்ய உணவுகள், பாரம்பர்யத் தொழில்கள், பாரம்பர்யத் தாவரங்கள், பாரம்பர்ய விளைபொருள்கள்... என மொத்தமாகப் பாரம்பர்யத்தைக் காப்பாற்றுவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்.

2009-ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி 'த்தெரா மேத்ரே (Terra Medre) தினம்’ என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதன் பொருள், `தாய் மண்’ என்பதுதான். தாய் மண்ணின் பாரம்பர்யத்தைக் காக்கும்விதத்தில், மெது உணவு அமைப்பு உருவான தினத்தைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இரண்டாண்டுகளுக்கு ஒரு தடவை, இத்தாலியின் டூரின் மாநகரில், உலக அளவிலிருக்கும் இந்த அமைப்பினர் ஒன்று கூடி, ஐந்து நாள்களுக்கு மெது உணவுத் திருவிழாவை (சலோனா டெல் குஸ்டோ - Salone del gusto) நடத்திவருகின்றனர். இந்த ஐந்து நாள்களுக்கும் உலகின் மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் பழங்குடியினர் தொடங்கி, பலவித இனமக்களும் திரண்டுவந்து உணவு, விதைகள், காய்கறிகள் ஆரம்பித்து பாரம்பர்ய இறைச்சி வரை அனைத்தையும் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கிறார்கள். உலகின் பல பகுதிகளின் உணவுகளும், உணவுத் தயாரிப்பாளர்களும் பங்குகொள்வார்கள். அங்கு கருத்தரங்குகளும், உணவுப் பட்டறைகளும், சமையல் பாடங்களும் நடத்தப்படும். இந்தத் திருவிழா, அடுத்த ஆண்டு செப்டம்பர் 22 முதல் 26 வரை டூரின் நகரில் நடக்கவிருக்கிறது.

மரபு உணவுகளை மறந்து, மருந்துகளின் பின்னால் அணிவகுத்துக்கொண்டிருக்கும் நிலையில், பிணியகற்றும் மரபு உணவுகளை நோக்கி மக்களை மடைமாற்றும் இதுபோன்ற விழாக்கள் கொண்டாடப்படுவது வாழ்த்துதலுக்கும் வரவேற்புக்கும் உரியதே!Trending Articles

Sponsored