`கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கினால் உதடு அண்ணப்பிளவு வராது!’ - மருத்துவ விளக்கம்



Sponsored



இன்று முழு சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது.  மாலை 5:18 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது மெதுவாக விழத் தொடங்கும். அதன் பிறகு மாலை 6:21 மணி முதல் 7:37 மணி வரை நிலவு முழுவதையும் பூமியின் நிழல் மறைத்துவிடும். இதுவே முழு சந்திர கிரகணமாகும். 

சந்திரகிரகணத்தின்போது, கர்ப்பிணிகள் எந்த வேலையும் செய்யக் கூடாது, அவர்கள் சந்திரனைப் பார்க்கக் கூடாது என்றெல்லாம் கூறப்படுகிறது. குறிப்பாக, `கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கக் கூடாது’ என்றும் மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. இந்த பாதிப்பை `கிரகணமூலி’ என்றும் சொல்கிறார்கள்.  

Sponsored



`கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் காய்கறி நறுக்கினால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உதட்டில் அண்ணப்பிளவு ஏற்படுமா?’ என்று முக அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜியிடம் கேட்டோம். அவர் ``இந்த கிரகணத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று சொல்லிவிட்டார்களே...’’ என்றார். 

ஆனாலும் மருத்துவம், அறிவியல்ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து நம்மிடம் பேசினார்.

Sponsored



`` `கர்ப்பிணிகள் தேவையில்லாமல் எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுக்கக் கூடாது, எக்ஸ்ரே எடுக்கும் பகுதிக்குள் கர்ப்பிணிகள் போகக் கூடாது’ என்று மருத்துவர்கள் எச்சரிப்பதுண்டு. காரணம், இந்தக் கருவிகளின் செயல்பாட்டின்போது கதிர்வீச்சு வெளிப்படும். தாயின் வயிற்றில் இருக்கும் கரு மென்மையானது என்பதால், அந்தக் கதிர்வீச்சு கருவிலிருக்கும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால்தான் அங்கே போகக் கூடாது என்பார்கள். அதுபோலத்தான் சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ... எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் அவர்களைப் பாதித்துவிடக் கூடாது என்றே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள். 

பொதுவாக கதிர்வீச்சுகள் சாதாரண மனிதர்களையே பாதிக்கும்போது, கருவில் உள்ள மெல்லிய திசுக்களில் மிக எளிதாகப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதே உண்மை. குறிப்பாக கதிர்வீச்சுகளால் எம்.எஸ்.எக்ஸ்-1 (MSX-1), சோனிக் ஹெட்ஜ்ஹாக் ஜீன் (Sonic Hedgehog gene) போன்ற ஜீன்கள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனாலேயே உதட்டில் அண்ணப்பிளவு ஏற்படும் என்று குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது. பொதுவான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம். அதிலும் `சந்திரகிரகணத்தின்போது காய்கறி நறுக்கும் கர்ப்பிணிக்குப் பிறக்கும் குழந்தைக்கு உதடு அண்ணப்பிளவு ஏற்படும்’என்று மருத்துவரீதியாகவோ, அறிவியல்ரீதியாகவோ எங்கும் சொல்லப்படவில்லை, நிரூபிக்கப்படவும் இல்லை.  


மேலும் சூரியனும் சந்திரனும் நெருங்கி வரும்போதுதான் பிரச்னை அதிகம் என்பார்கள். இப்போது சந்திரனை பூமி மறைக்கிறது அவ்வளவுதான். அதனால் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை'' என்றார்.



Trending Articles

Sponsored