நீங்கள் ஸ்டார் ஃப்ரூட்ஸ் பிரியரா? உங்கள் சிறுநீரகம் பத்திரம்!Sponsored`ஸ்டார் ஃப்ரூட்ஸ்’... இதன் பூர்வீகம் இலங்கை, மாலத்தீவுகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்பழ மரத்தை பல நூற்றாண்டுகளாக இந்தியாவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், நேபாள், வங்கதேசம் போன்ற நாடுகளில் பயிரிடுகின்றனர் . கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் அதையொட்டியுள்ள தீவு நாடுகளிலும் பயிர் செய்கிறார்கள். இந்த மரம் வெப்ப மண்டலப் பிரதேசத்தில்தான் அதிகமாக வளரும். மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களில் இருக்கும் இந்தப் பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டினால், பார்ப்பதற்கு நட்சத்திரங்கள் போன்று இருக்கும். அதனால் இதை நட்சத்திரப் பழம் என்கிறோம். மஞ்சள், பச்சை நிறத்தில், பார்ப்பதற்கே, கலர்ஃபுல்லாக இருக்கும் இப்பழத்தைப் பார்த்தால், வாங்கி ருசிக்க யாருக்குத்தான் மனம் ஏங்காது?

நீங்கள் ஸ்டார் ஃப்ரூட்ஸ் விரும்பிச் சாப்பிடுபவரா... கவனம் என்கின்றன ஆய்வுகள்! இந்தப் பழத்தில் சிறுநீரக நரம்புகளைப் பாதிக்கும் நச்சுத்தன்மை இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சாதாரணமாக ரோட்டோரங்களில் விற்கப்படும் இவற்றை ஆவலாக அனைவரும் வாங்கிச் சாப்பிடுவார்கள். இந்தப் பழத்தை அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு, இதிலிருக்கும் நியூரோடாக்சின் (Neurotoxin) என்ற நச்சு, உடலில் பல்வேறு விதமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதிலுள்ள நச்சு, செரிமான உறுப்புகளைப் பாதிப்பதால், செரிமானக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் இப்பழத்தில் வைட்டமின் சி-யும், நார்ச்சத்தும் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Sponsored


Sponsored


உண்மையில் நட்சத்திரப் பழம் சாப்பிட்டால் நன்மையா, அல்லது பாதிப்புகளை உண்டாக்குமா என்பது குறித்து உணவியல் ஆலோசகர் வினிதாவிடம் கேட்டோம். `ஸ்டார் ஃப்ரூட்டில்’ நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடெண்ட்டுகள் (Antioxidant) உள்ளன. அதேநேரத்தில், `நியூரோடாக்ஸின்’ (Neurotoxin) என்ற நச்சுத்தன்மை இருப்பதும் உண்மை. இதை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான சிறுநீரகத்தைக் கொண்ட ஒருவர்  இந்தப் பழத்தை  வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அதில் உள்ள `நியூரோடாக்ஸின்' விஷத்தன்மையால் பாதிப்புகள் ஏற்படும். இந்தப் பழத்தில் அதிக அளவில் ஆக்ஸலேட் (Oxalate) என்ற தாது உப்பு இருக்கிறது. சாதாரணமாக நம் உடலுக்குத் தேவையான ஆக்ஸலேட்டின் அளவைவிட இதில் 3 மடங்கு அதிகமாக உள்ளது. 

`அளவுக்கு மிஞ்சினால் ஆக்சலேட்டும் விஷமே' . 

சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடவே கூடாது. இந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, விக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தை விலங்குகளுக்கும் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்திருக்கின்றனர். இதில் நியூரோடாக்ஸின் இருப்பதும் அதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரகக் கோளாறு இருப்பவர்கள் இதைச் சாப்பிட்டால் மரணம்கூட ஏற்படலாம்’ என்றார்.Trending Articles

Sponsored