அழுக்கு, பித்த வெடிப்பு, சொரசொரப்பு... இவற்றிலிருந்து பாதங்களைக் காக்கும் 10 டிப்ஸ்!



முகம் அளவுக்குப் பாதங்களையும் பளிச்சென்று பராமரிக்க ஓர் அசாத்திய திறமையும் பொறுமையும் தேவை. சில பெண்கள் அதில் கில்லிகள். நேரமின்மையால் பலரும் அந்த விஷயத்தைக் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் பாதம் சம்பந்தப்பட்ட பராமரிப்புகளைத் தெரிந்துகொண்டால் போதும். தொற்றுகள் இல்லாத சுத்தமான, அழகான பாதங்களை நீங்களும் செல்ஃபி எடுக்கலாம். இதோ அதற்கான டிப்ஸ் தருகிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

Sponsored


 வாரம் ஒருமுறை வாயகன்ற ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தில் பாதங்கள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு டீஸ்பூன் ஷாம்பூ, 2 சொட்டு லேவண்டர் ஆயில் ஆகியவற்றைச் சேர்க்கவும். இந்தத் தண்ணீரில் பாதங்களை அரை மணி நேரம் வைத்திருக்கவும். பிறகு, பீர்க்கன் நாரால் பாதங்களை மென்மையாகத் தேய்க்கவும். அழுக்கு நீங்கி, பாதங்கள் சுத்தமாகிவிடும். லேவண்டர் ஆயில் கிடைக்காதவர்கள், லேவண்டர் ஆயில் கலந்த ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள்.

Sponsored


ஒரு டப் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்சைடு (மெடிக்கல் ஷாப்பில் கிடைக்கும்) கலந்து, அதில் பாதங்களை அரை மணி நேரம் வைத்திருக்கவும். கால் நக இடுக்குகளில் இருக்கும் அழுக்கு வெளியேறிவிடும்.

Sponsored


பாதங்களும் சுத்தமாக வேண்டும், கால் வலியும் போகவேண்டுமா? ஒரு டப் தண்ணீரில், ஒரு டீஸ்பூன் ஷாம்பூ, ஒரு கைப்பிடி ராக் சால்ட் சேர்த்து, பாதங்களை மூழ்கும்படி வையுங்கள். இதற்கு மிதமான சுடுநீரைப்  பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

 பலருக்கும் நகங்களின் இயல்பான இளஞ்சிவப்பு நிறம் மாறி... பிரவுன், மஞ்சள், கறுப்பாக இருக்கும். இவர்கள், ஒரு டப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறு விட்டு, அதில் பாதங்களை அரை மணி நேரம் விடுங்கள். இதைத் தொடர்ந்து செய்துவர, நகங்களின் இயல்பான இளஞ்சிவப்பு நிறம் வந்துவிடும்.

 நக ஓரங்களைச் சுத்தம் செய்வதற்கு, மெனிக்யூர் கிட் அவசியம் என்றில்லை. ஆரஞ்சு வுட் ஸ்டிக் போதும். இதுவும் கிடைக்காதவர்கள், மேட்ச் பாக்ஸ் குச்சியின் மருந்தில்லாத பக்கத்தைப் பயன்படுத்தலாம். 

 நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள், மெட்டல் உபகரணங்களைப் பயன்படுத்தி, நகங்களையும் பித்தவெடிப்புகளையும் சுத்தப்படுத்தக்கூடாது. இவர்களுக்குப் பாதங்களில் உணர்வு குறைவாக இருக்கும் என்பதால், மெட்டல் உபகரணங்களால் கீறல் ஏற்பட்டு ரத்தம் வந்தாலும் தெரியாது. காயப்பட்டால் ஆறவும் ஆறாது.

 கால் நகங்களை ஓவல் ஷேப்பில் வெட்டாமல், நேராக வெட்டுங்கள். அப்போதுதான் நகங்களில் அழுக்கு சேராது. 

பித்தவெடிப்பு இருப்பவர்கள், கால்களை ஷாம்பூத் தண்ணீரில் ஊறவிட்டு, பியூமிஸ் ஸ்டோனால் தேய்த்துக் கழுவுங்கள். சாலி சிலிக் ஆசிட் (salicylic acid ) கலந்த க்ரீம்களை அதன் மேல் தடவி வந்தால், வெடிப்புகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும்.

குளித்த பிறகு பாதங்களைத் துடைக்கும் பழக்கம் யாருக்கும் இருப்பதில்லை. அது தவறு. பாதங்களை நன்கு துடைத்து, பாதங்களுக்கான பவுடரை அப்ளை செய்யுங்கள். பாதங்களில் ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன்ஸ் வரவே வராது. தொடர்ந்து கட் ஷூ அணியும் பெண்கள், பாதங்களைத் துடைத்து பவுடர் போட்டுப் பராமரித்தால், கெட்ட வாடை வராது.

 பாதங்களின் மேற்புறத்தில் சொரசொரப்பாக இருந்தால், உங்கள் கைகளுக்கு அப்ளை செய்கிற க்ரீமையே, கால்களுக்கும் அப்ளை செய்யுங்கள். மெல்ல மெல்ல சொரசொரப்பு மறைந்துவிடும்.

மேலே சொன்னவற்றை பின்பற்றுங்கள்; அழகான பாதங்களுடன் அசத்தல் நடை போடுங்கள்!



Trending Articles

Sponsored