காஜல், சன்ஸ்க்ரீன், லிப்ஸ்டிக்... வெயில் காலத்தில் எது சரி... எது தப்பு?Sponsoredகோடைக்காலம் தொடங்கினாலே, முகப்பொலிவு பற்றிய கவலை மனசுக்குள் நாற்காலி போட்டு உட்கார்ந்துவிடும். அந்தக் கவலையை விரட்டுவது எப்படி. வெயிலிலிருந்து உங்கள் சருமத்தைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் எளிமையான விஷயங்களைக் கற்றுத்தருகிறார் அழகுக்கலை நிபுணர் ப்ரீத்தி மேனன்.

தலைமுடி பராமரிப்பு!

Sponsored


இரவில் சிறிதளவு வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் பாலக்கீரையை அரைத்து, அதனுடன் ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, தலை முழுவதும் அப்ளை செய்துவிட்டு குளிக்கவும். இதன்மூலம் தலை குளிர்ச்சியாக இருக்கும். உடல் உஷ்ணமும் குறையும். புரோட்டீன் அதிக அளவு பெறுவதற்கு, சிறிதளவு சோயா பவுடரை இந்தக் கலவையுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். இது எளிமையான வழியும்கூட..!

Sponsored


முகப் பராமரிப்பு!

இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் பேக் போன்று அப்ளை செய்துவந்தால், முகப்பொலிவு ஏற்படும்.

தக்காளியை அரைத்து அதை ஐஸ்கியூப்பில் ஊற்றி, பிரிட்ஜில் வைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து, அந்தக் கட்டியை எடுத்து, முகத்தில் மசாஜ் செய்யவும். முகத்தில் உள்ள டேன் மறையும். தக்காளி சாறு இயற்கையாகவே டேன்களை நீக்கும் குணம் கொண்டது. எனவே, அதனை நார்மலாகத் தோளிலும் அப்ளை செய்யலாம். இது பயன்படுத்திய சில நாள்களிலேயே நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

உடல் மற்றும் சரும பராமரிப்பு:

பயித்தம்பருப்பைச் சிறிதளவு ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர், சிறிதளவு காய்ச்சாத பால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையைச் சோப்பாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதைப் பயன்படுத்த சரும நோய்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.

சன்ஸ்க்ரீன் வாங்கும்போதும் பயன்படுத்தும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

எப்போதும் புதிய சன்ஸ்க்ரீன் லோஷன்களை உபயோகிப்பதே நல்லது. ஏற்கெனவே வாங்கி, சென்ற ஆண்டு பயன்படுத்தி மிச்சமான சன்ஸ்க்ரீன் போடுவதைத் தவிர்க்கவும். முக்கியமாக, மருத்துவர் ஆலோசனைப்படி, நம் சருமத்துக்கு ஏற்ற சன்ஸ்க்ரீனை தேர்ந்தெடுப்பது நல்லது.

தரமான பிராண்டட் சன்ஸ்க்ரீன்களையே பயன்படுத்தவும். தற்போது, ஆர்கானிக் புராடக்டுகளிலும் சன்ஸ்க்ரீன்கள் கிடைக்கின்றன. உங்களுக்கு ஏற்ற சன்ஸ்க்ரீன்களை எத்தனை வருடங்கள் பயன்படுத்தலாம் எனப் பரிசோதித்து வாங்குங்கள்.

சன்ஸ்க்ரீனில் குறிப்பிட்டிருக்கும் `எஸ்.பி.எஃப்’ (SPF - Sun Protection Factor) 15, 30, 50 என்ற ரகங்களில் இருக்கும். இதுதான் சன்ஸ்கிரீன் எந்தளவு வெயிலிலிருந்து சருமத்தைக் காக்கும் என்கிற எண்ணிக்கை. கோடையில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க `எஸ்.பி.எஃப்’ 30 தேவைப்படும். சன்ஸ்க்ரீனை தடவிக்கொண்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு வெளியில் செல்லலாம்.

காஜல் கவனம்:

வெயிலில் போகும்போது ஐ ஷேடோ போடுவதைக் குறைத்துக்கொள்ளவும். வியர்வையோடு சேரும்போது, அதன் ஈரப்பதம் கண்களைச் சுற்றிலும் பரவி, அழகைக் கெடுக்கும்; சருமத்தையும் பாதிக்கும். ஐ கர்லெர் மூலம் கண் இமைகளைத் திருத்தி, கண்களை அழகாகக் காட்டலாம். வாட்டர்ஃப்ரூப்பும் பயன்படுத்தலாம்.

லிப்ஸ்டிக் பாதுகாப்பு:

வெயில் காலத்தில் லிப் கிளாஸ் போடக் கூடாது. ஏனெனில், இது உதடுகளை வறண்டுபோகச் செய்து, கருமை நிறத்துக்கு மாற்றிவிடும். தரமான அதிக எஸ்.பி.எஃப் ( SPF) லிப் பாம் பயன்படுத்தலாம்.Trending Articles

Sponsored