ஓரினச்சேர்க்கை மனநல பாதிப்பா, குற்றச் செயலா? - என்ன சொல்லப் போகிறது உச்ச நீதிமன்றம்?Sponsoredச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, ஓரினச்சேர்க்கை குறித்த விசாரணையை இன்று (11.07.2018) தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில்தான், இந்திய மனநல மருத்துவச் சங்கத்தின் (Indian Psychiatric Society) இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் குறிப்பில், `ஓரினச்சேர்க்கை என்பது மனநலக் கோளாறு அல்ல. ஆண்-பெண், இருபாலர் செக்ஸ்போலத்தான் இதுவும். இது ஒரு மனநல பாதிப்புதான் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதில் ஈடுபடுபவர்களுக்கு சிகிச்சை அளித்தால், அவர்களின் சுயமரியாதைக்கு இழுக்கும் நற்பெயருக்குக் களங்கமும் ஏற்படும். ஆகையால், இவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றோ, குற்றவாளிகள் என்றோ முத்திரை குத்த வேண்டாம். 1973-ம் ஆண்டு அமெரிக்காவின் மனநல மருத்துவர்கள் சங்கம், ஓரினச்சேர்க்கையை மனநல பாதிப்புகள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டது. அதேபோல, 1992-ம் ஆண்டு உலகச் சுகாதார நிறுவனமும், அதன் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறது. 

`2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் ஓரினச்சேர்க்கை குற்றச்செயல் அல்ல. ஐ.பி.சி 377-வது பிரிவில் மாற்றம் வேண்டும்' என்று கூறியிருந்தது. 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இதை ஏற்றுக்கொண்டு, மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. அதன்படிதான் இப்போது விசாரணை தொடங்கி, நடைபெற்றுவருகிறது. 

Sponsored


ஓரினச்சேர்க்கை என்பது மனநல பாதிப்பா, குற்றச்செயலா..? உண்மையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்களை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் - விளக்குகிறார் செக்ஸாலஜிஸ்ட் டி.நாராயண ரெட்டி. 

Sponsored


``ஓரினச்சேர்க்கையாளர்கள் மனநோயாளிகள், குற்றவாளிகள், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று பொய்யான தகவல்கள் இங்கே உலவுகின்றன. ஆனால், ஓரினச்சேர்க்கை என்பது மனநலக்கோளாறு அல்ல. இது, இயற்கைக்கு எதிரானதும் அல்ல. அவர்கள், குற்றவாளிகளும் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை, ஐ.பி.சி சட்டம் 377-வது பிரிவு, `இது குற்றம், இதற்குத் தண்டனை கொடுக்கலாம்’ என்று கூறுகிறது. இந்தச் சட்டம் தொடர்பான விசாரணைதான் இப்போது நடைபெற்றுவருகிறது. 

ஓரினச்சேர்க்கை இயல்பானதே. இதை `மாற்று உடலுறவு’ (Alternative Sexual Orientation) என்று மருத்துவத்தில் சொல்கிறார்கள். ஆணோ, பெண்ணோ யார் ஒருவரைப் பார்த்து செக்ஸ் உணர்வு தூண்டப்பட்டாலும், அது இயல்பானதே. அவர்கள் மனநோயாளிகள் இல்லை. `ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கும்’ என்று ஒரு வதந்தி இருக்கிறது. ஹெச்.ஐ.வி வைரஸைப் பொறுத்தவரை செக்ஸ் வைத்துக்கொள்பவர்களில் யாராவது ஒருவருக்கு இருந்தால்தான் மற்றவருக்குப் பரவும். இதற்கும் ஓரினச்சேர்க்கைக்கும் தொடர்பு இல்லை. இது, மருத்துவ ஆய்வுகளின் பல்வேறு முடிவுகளில், `ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர்களைவிட, இரு பாலினத்தவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது' என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 

`ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் குற்றவாளிகள்' என்ற கருத்து பரப்பப்படுகிறது. இயல்பான, இயற்கையான இந்த செக்ஸ் உணர்வுக்கும் குற்றச் செயல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வளரும் இடம், சமூக அமைப்பு, வளரும் சூழல்தான் ஒருவரை குற்றச் செயல்களில் ஈடுபடவைக்கிறது. ஒருவரின் செக்ஸ் வாழ்க்கைக்கும் குற்றச் செயல்களுக்கும் தொடர்பே இல்லை. 

இயற்கையை நன்றாக உற்று நோக்கினால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம். விலங்குகளிலும் ஓரினச்சேர்க்கை இருக்கிறது. அது இயற்கையானது, இயல்பானது. இது, ஒவ்வொரு தனிமனிதனின் தேர்வு. அதில் தலையிடுவது, தனிமனித உரிமைகளில் தலையிடுவதற்குச் சமம். இந்திய மனநல மருத்துவர்கள் சங்கம் கூறியிருப்பது சரியானதே. உச்ச நீதிமன்றம், இந்தப் பிரச்னையில் சரியான முடிவை எடுக்க வேண்டும். இயற்கையைச் சட்டத்தால் கட்டிப்போட முடியாது’’ என்கிறார் டி.நாராயண ரெட்டி.Trending Articles

Sponsored