தாமரைப்பூ, விளக்கெண்ணெய், பனங்கற்கண்டு... அழகான கண்களுக்கு சிம்பிள் டிப்ஸ்!



ழகான பெரிய கண்களோ அல்லது, உணர்வுகளை வெளிக்காட்டாமல் குறும்பு செய்யும் சிறிய கண்களோ... கருவளையம், சுருக்கம், கண்களின் கீழ் பை ஆகியவை இல்லாமல் இருந்தால்தான் முகம் மலர்ச்சியாக லைட் போட்டதுபோல இருக்கும். அப்படிப்பட்ட பிரகாசமான கண்களை நீங்களும் பெற, வீட்டிலேயே செய்துகொள்ளும் வகையிலான சிம்பிள் டிப்ஸ் மற்றும் கண் அழகு கெடாமல் இருக்க நீங்கள் செய்யக்கூடாத விஷயங்களையும் பட்டியலிடுகிறார், அழகுக்கலை நிபுணர் கீதா அஷோக்.

Sponsored


செய்யக்கூடாதவை...

Sponsored


* ஆரோக்கியமான கண்களுக்கு மட்டுமின்றி, அழகுக் கண்களுக்கும் 8 மணி நேரத் தூக்கம் முக்கியம். டிவி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எனத் தூக்கத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள். கண் அழகும் கூட சேர்ந்து கெட்டு விடும்.

Sponsored


* பஸ் மற்றும் ரயிலில் பயணம் செய்யும்போதும், இரவுகளில் விளக்கை அணைத்துவிட்டும் ஸ்மார்ட்போனில் மூழ்காதீர்கள். கண்கள் மிகவும் சோர்ந்துவிடும். சிலருக்கு சிவந்தும் போய் விடும்.

* உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கிறேன் எனச் சத்து இல்லாத ஜங்க் உணவுகளைச் சாப்பிடாதீர்கள். ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு, கண்கள் ஒளி இழக்கும்.

* உடல் எடையைக் குறைக்க விரும்பினால், படிப்படியாகக் குறையுங்கள். தடாலடியாக உடம்பைக் குறைத்தால், கண்களின் அடியில் பை போல ஏற்பட்டு, உங்களை பத்து வயது கூடுதலாகக் காட்டும். 

செய்யவேண்டியவை...

* 5 தாமரைப்பூக்களை, 30 மில்லி விளக்கெண்ணெய் மற்றும் 10 சொட்டு நல்லெண்ணெய் சேர்த்து அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். இதிலிருந்து தினமும் கால் டீஸ்பூன் விழுதை எடுத்து, கண்களைச் சுற்றி தடவுங்கள். அரை மணி நேரம் ஊற வைத்து கழித்து கழுவிவிட்டால், கருவளையம் படிப்படியாகக் குறையும்.

* கிரீன் டீ டிகாஷன் 20 மில்லி, 20 சொட்டு தேன், 20 சொட்டு கேரட் ஜூஸ் சேர்த்து, அதில் பேண்டேஜ் துணியை நனைத்து, கண்களின் மேல் தினமும் அரை மணி நேரம் போடுங்கள். சோர்ந்து, வீங்கின கண்கள்கூட நார்மலாகும்.

* ஒரு உருளைக்கிழங்கைத் துருவி, பிழிந்து சாறு எடுங்கள். அரைக்கக் கூடாது. இந்தச் சாற்றில் சிறிதளவு பனங்கற்கண்டு, 10 மில்லி விளக்கெண்ணெய் சேர்த்து, பனங்கற்கண்டு கரைந்ததும், அந்தக் கலவையைத் தொட்டுத் தொட்டு கண்களின் கீழ் தடவி வந்தால், கருவளையம், சுருக்கம் ஆகியவை மெள்ள மெள்ளச் சரியாகும்.

* கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை 30 விநாடிகள் கண்களை மூடி, ஓய்வுக் கொடுங்கள். கண்களை மூடிக் கொண்டிருக்கும்போது, கருவிழிகளை மெல்ல சுழற்றுங்கள். கண்கள் புத்துணர்ச்சியை உணரும். இதைச் செய்ய முடியாதவர்கள், இரண்டு கைகளையும் பரபரவென தேய்த்து, கண்களைப் பொத்துங்கள். சிவந்துபோன கண்களும் புத்துணர்ச்சிப் பெறும்.

 * கண்களின் கீழே பை அசிங்கமாக இருக்கிறது. உடனே ஒரு விழாவுக்குச் செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், ஒரு டீஸ்பூனை ஃபிரிட்ஜில் வைத்து எடுத்து, கண்களின் மேல் சிறிது நேரம் குப்புற வையுங்கள். உடனடியாக கண் பை அமுங்கிவிடும்.

* சில பெண்களுக்குப் பரம்பரையாகக் கண்களில் கருவளையம், சுருக்கம் போன்றவை வரும். இப்படிப்பட்டவர்களும் மேலே சொல்லியிருக்கும் டிப்ஸ்களைப் பின்பற்றினால் படிப்படியாகப் பலன் கிடைக்கும். 



Trending Articles

Sponsored