தெற்காசியாவிலேயே குறைந்த எடையுள்ள குழந்தை! #SmallestBabyBornதெற்காசியாவிலேயே மிகக் குறைந்த எடையுள்ள குழந்தை ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்திருக்கிறது. வெற்றிகரமாக, பிரசவம் பார்த்த மருத்துவர்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது. இதனால்,  ட்விட்டரில் இந்திய அளவில்
 " #SmallestBabyBorn " என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.  

ஒடிசாவைச் சேர்ந்த நித்திகா மற்றும் சவுரப் என்ற இளம் தம்பதிக்குதான் 'செர்ரி' என்ற 375 கிராம் எடையுடன் குழந்தை பிறந்திருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள 'ரெயின்போ' என்ற ஒரு தனியார் மருத்துவமனையில் மிகுந்த கண்காணிப்புடன் மருத்துவர்கள் பிரசவம் பார்த்திருக்கிறார்கள். கருவுற்று 25 வாரங்களில் பிறந்திருக்கிறது அந்தக் குழந்தை. ``இதுபோன்ற மிகக் குறைந்த எடையுள்ள குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் செயலிழக்க வாய்ப்புள்ளதால் 0.5 சதவிகிதமே உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது" என்கிறார்கள் மருத்துவர்கள்.

Sponsored


Sponsored


இதேபோல, ஏற்கெனவே, கடந்த 2017-ம் ஜூன் மாதம் சீதா என்ற குழந்தை 400 கிராம் உடல் எடையில் உதயப்பூரில் பிறந்திருக்கிறது. அது 210 நாள்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் ஆகும்போது 2.4 கிலோகிராம் உடல் எடையாக இருந்தது. ஆனால், 1989-ல்  260 கிராம் எடையுடன் பிறந்து வாழ்ந்துவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ரூமாசியா ரஹ்மான் என்ற பெண்மணி, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sponsored
Trending Articles

Sponsored