உணவுக்கட்டுப்பாடு மூலம் 6 மாதத்தில் 12 கிலோ உடல் எடை குறைக்கலாம்!Sponsoredதிகம் சாப்பிடுவது, அடிக்கடி சாப்பிடுவது, நொறுக்குத்தீனிகளை உண்பது, உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பு இல்லாமை எனப் பல காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. இன்றைக்கு வயது வித்தியாசமின்றி அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு  உபாதையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது. காலப்போக்கில் இது உடலின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் முடக்கிப்போடும் அளவுக்கு மோசமான ஒரு நிலையை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. 

வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் சீர்கேடுதான் உடல் பருமன் ஏற்படக்காரணம்.  நாம் உண்ணும் உணவு ஆற்றலாக மாற உடலில் நடக்கும் வேதியியல் மாற்றமே வளர்சிதை மாற்றம். சாதத்தை உண்ணும்போது, அது எப்படி குளூக்கோசாக மாற்றமடைகிறதோ அதேபோல் நாம் உண்ணும் பழங்கள் வைட்டமின்களாக மாற்றமடைகின்றன. இப்படி நாம் சாப்பிடும் உணவு அதன் தன்மைக்கேற்றவாறு மாற்றப்படும். அவை முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் உடலில் தேங்கி கொழுப்பாக மாறி விடும். அதனால்தான் உடல் எடை அதிகரிக்கிறது.

Sponsored


சமீப காலங்களில் நடத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளில், உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு மறதி நோய் அதிகமாக வருவதாகவும் புற்றுநோய் வருவதற்கான காரணிகள் அதிகமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக, உடல் பருமனானவர்களுக்கு புற்று நோய்களை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சி அதிகமாக இருக்குமாம். உலக அளவில் ஆண்டுக்கு 85 ஆயிரம் பேர் உடல் பருமனால் புற்றுநோய்க்கு உள்ளாவதாக  அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. 

Sponsored


உடல் எடை அதிகரித்தால் முழங்கால் வலி, எலும்புத் தேய்மானம் போன்ற எலும்பு சார்ந்த உடல் வலிகள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, குழந்தைப் பருவத்தில் இருந்தே உடல் எடையைக் கவனித்துக் கொள்வது அவசியமாகிறது.  உடல் எடையைக் குறைக்க முக்கியமானது மனம். `மனமிருந்தால் மார்க்கமுண்டு' என்பார்கள். மனதை ஒருநிலைப்படுத்தி உணவிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தினால் கட்டாயம் உடல் எடை குறையும்.

இயற்கை மருத்துவ முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். அதற்கு முறையான உணவுப் பழக்கம், யோகா மற்றும் சிகிச்சை அவசியம். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவருவதன் மூலம் உடல் எடை குறையும். அதிகாலை முதல் இரவு உறங்கச் செல்வது வரை தொடர்ந்து எதையாவது சாப்பிடுகிறோம். பசி எடுக்கிறதோ இல்லையோ,  ஒரு நாளைக்கு ஆறு முதல் ஏழு தடவை எதையேனும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். அது கொழுப்பாகவும் இருக்கலாம், புரதமாகவும் இருக்கலாம்.  திட  மற்றும் திரவ உணவுகள் என எல்லாவற்றையும் சாப்பிடுகிறோம். எனவே இந்த உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டியது அவசியம். குறிப்பாக, இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 

எந்த நேரத்துக்கு எப்படிச் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதற்கான அட்டவணையைப் பார்ப்போம்.  

காலை 6 மணி - எலுமிச்சைச் சாற்றுடன் தேன் சேர்த்து சூடான நீரில் கலந்து குடிக்கவும்.

காலை 8.30 மணி - பழங்கள்/காய்கறிகள் சாலட்

முற்பகல் 11 மணி - மோர்/ இளநீர்/காய்கறி சூப் 

பகல் 1 மணி - இரண்டு சப்பாத்தி + காய்கறிகள்/ ஒரு கப் சாதம் + காய்கறிகள்

மாலை 4 மணி - ஹெர்பல் டீ/எலுமிச்சைச் சாற்றுடன் தேன்

இரவு 7 மணி - பழங்கள் 

இது ஒரு மாதிரி அட்டவணையே. இது ஒவ்வொருவரின் உடல் எடையைப் பொறுத்து மாறுபடும். 

நமக்குப் பிடித்த உணவை உண்ண முடியவில்லையே என்று நினைத்தால் உணவை மாற்றிக்கொள்ளலாம். ஏனென்றால் `டயட்' என்று நீங்கள் உண்பது அனைத்தும் ஆரோக்கியமான உணவுகளே. பசிக்கும்போது மட்டும் சாப்பிட்டு, தேவையான ஆற்றலைப் பயன்படுத்தினால் உடல் எடை தானாக குறையும். 

நடைப்பயிற்சி, எட்டு வடிவ நடை, யோகா என எதை வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்யலாம். இதை தொடர்ச்சியாகச் செய்ய வேண்டியது அவசியம். இதன்மூலம் ஒரு மாதத்துக்கு இரண்டு கிலோ வரை எடை குறைக்கலாம். தினமும் உணவு மற்றும் பயிற்சிகளை சரியாகப் பின்பற்றினால் 6 மாதத்தில் 12 முதல் 16 கிலோ வரை எடை குறைக்கலாம். உடல் எடையைக் குறைக்க 6 மாத காலம் போதுமானதாக இருக்கும்.

மேலும் சில இயற்கை மருத்துவச் சிகிச்சைகள் உடல் எடையைக் குறைப்பதுடன் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். அத்துடன் கழிவுகளை வெளியேற்றவும் உடல் புத்துணர்ச்சி பெறவும் உதவும். குறிப்பாக ஆயில் மசாஜ், மூலிகைப் பவுடர் மசாஜ், நீராவிக் குளியல், வாழையிலைக் குளியல், வயிற்றுக்குப் பற்று போடுதல் (கொள்ளு பேக், விளக்கெண்ணெய் பேக்) ஆகியவை சிறந்தது.

மசாஜ் செய்வதால் தசைகளின் வளர்ச்சி சீராகும். தோலின் வழியே கழிவுகள் வெளியேறும். உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராகப் பாயும். வாரம் ஒருமுறை நீராவிக் குளியல் எடுத்துக் கொள்வதன்மூலம் கழிவுகள் நீங்கி உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். வாழையிலைக் குளியல் செய்வதால், உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடு சீராக நடக்கும்; வளர்சிதை மாற்றம் சீராகும். எளிமையான சிறந்ததொரு சிகிச்சை.

உடல் எடை அதிகரிக்கும்போது வயிற்றைச் சுற்றி கொழுப்பு தேங்க ஆரம்பிக்கும். `கொள்ளு பேக்', `விளக்கெண்ணெய் பேக்' ஆகியவை வயிற்றைச் சுற்றி  காணப்படும் அதிகப்படியான சதையைக் குறைக்க உதவும். அத்துடன், உணவு கட்டுப்பாடு மற்றும் யோகா, இயற்கை மருத்துவச் சிகிச்சை செய்து கொண்டால் உடல் எடை குறைவது உறுதி.Trending Articles

Sponsored