தட்டு நிறைய பப்பாளி... மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு... அன்புமணியின் ஆரோக்கிய ரகசியம்!Sponsoredகணீர் குரலும் உற்சாகமும் பா.ம.க இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின் அடையாளம். மருத்துவர் என்பதால் உடல்நலனில் எப்போதும் அக்கறையோடு இருப்பவர். உடற்பயிற்சிலும், உணவுப் பழக்க வழக்கத்திலும் தனக்கென்று ஒரு பாணியைக் கடைப்பிடிக்கிறார். 

வாக்கிங், ஸ்விம்மிங், ஷட்டில்கார்க்... இவை மூன்றும்தான் அன்புமணியின் ஆரோக்கிய ரகசியம்.  ஒருநாள் வாக்கிங் சென்றால் அடுத்த நாள் ஷட்டில், அதற்கடுத்த நாள் ஸ்விம்மிங். மூன்று நாள்களுக்கு ஒருமுறை குறைந்தது 2 மணி நேரத்துக்கும் மேலாக ஸ்விம்மிங் செய்வது இவரின் வழக்கம். காலையில் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கருவைப் பிரட்டுடன் சாப்பிடுவார். சில நேரங்களில் பிரட் இல்லாமல் வெறும் முட்டை மட்டும் சாப்பிடுவதும் உண்டு.  

Sponsored


பப்பாளிப் பழத்தை விரும்பிச் சாப்பிடுவார். தினமும் காலையில் பதினொரு மணிக்கு பிளேட் நிறைய பப்பாளி சாப்பிடுகிறார். மதியம் சப்பாத்தியுடன், சிறிதளவு சாதம், காய்கறிகள், மீன் சாப்பிடுவார். மாலை நேரத்தில் மொச்சை, சுண்டல், காராமணி போன்ற பயறு வகைகள் இருக்க வேண்டும். இரவில் சப்பாத்தி அல்லது கோதுமை தோசைதான் அவரின் சாய்ஸ். 

Sponsored


``இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வரகு, சாமை போன்ற சிறுதானியங்களில் செய்யப்பட்ட பொங்கல் அல்லது உப்புமா சாப்பிடுவது எனக்குப் பிடிக்கும். இரவு, உறங்குவதற்கு முன்பு தவறாமல் பழங்கள் சாப்பிடுவேன். மனதை உற்சாகமாக வைத்துக்கொண்டால் எப்போதும் உடலை நோய்கள் நெருங்காது" என்று சிரிக்கிறார் அன்புமணி. Trending Articles

Sponsored