கெமிக்கல் பாதிப்பு, பக்கவிளைவுகள் இல்லை... நாமே தயாரிக்கலாம் ஆயுர்வேத டூத்பேஸ்ட்!Sponsoredபல் துலக்குதல், வாய் சுகாதாரத்தைப் பாதுகாக்கும். அதோடு, பற்சிதைவு, ஈறுகளின் பாதிப்புகளிலிருந்து பற்களைக் காத்து, வாய் துர்நாற்றத்தையும் விரட்டும். முறையாக, பல் துலக்கும் பழக்கம் இல்லை என்றால், அதுவே, நோய்களின் நுழைவுவாயிலாகிவிடும்.

 

முன்பெல்லாம், ஒரு வேப்பங்குச்சியை உடைத்து அதையே டூத் பிரஷ், பேஸ்ட், டங்க் கிளீனர் என மூன்று விதமாகப் (3 இன் ஒன் ) பயன்படுத்தினோம். ஆனால், இந்தத் தலைமுறையில் கிராமங்களில்கூட இந்தப் பழக்கம் கெளரவ குறைச்சலாகப் பார்க்கப்பட்டு, குறைந்தேபோய்விட்டது. இதனால், சாதாரணப் பெட்டிக்கடைகளில்கூட விதவிதமான கலர்களில் பேஸ்ட், பிரஷ்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.

Sponsored


இது ஒருபுறம் இருக்கட்டும்... ஒரு பேஸ்ட் நிறுவனம் ஒரு விளம்பரத்தில், `உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா?’ என்று கேட்கிறது. மற்றொரு நிறுவனமோ, உங்கள் பேஸ்ட்டில் வேம்பு, அதிமதுரம் இருக்கா?’ என்று கேட்கிறது. இந்த விளம்பரக் குழப்பங்களுக்கு இடையில், ஒரு பற்பசையைத் தேர்ந்தெடுப்பதே சாதாரண ஜனங்களுக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை. ஆனால், அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு, இங்கிருந்து வேப்பமரக் குச்சிகளையும், அதிமதுரத்தையும் ஏற்றுமதி செய்துவருவதையும் அறிவோம்.

Sponsored


 

நம் முன்னோர்களின் மகிமையும், நம் பாரம்பர்ய மூலிகைகளின் அருமையும் வெளிநாடுகளுக்குத் தெரிந்திருக்கிறது. நாமோ பாரம்பர்யமாகக் கடைபிடித்துவந்த அந்த நல்ல பழக்கங்களை விட்டுவிட்டு, கடைகளில் கிடைக்கும் கண்ட பேஸ்டுகளை வாங்கிப் பல் துலக்குகிறோம். இதனால், நாளடைவில் பற்கூச்சம், சென்சிட்டிவிட்டியில் பாதிப்பு, ஈறுகளில் தேய்மானம்... எனப் பற்களின் ஆரோக்கியத்தை இழந்த அனுபவம் ஏராளமானோருக்கு உண்டு.

எந்தப் பக்கவிளைவுகளும், வேதிப் பொருள்களின் பாதிப்பும் இல்லாத பேஸ்ட்டை எளிதாக வீட்டிலேயே தயாரிக்க முடியும். அதை எப்படித் தயாரிப்பது என்பது குறித்தும், அதன் மருத்துவ மகிமை குறித்தும் விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்...

ஆயுர்வேதம் என்பது ஒரு வாழ்வியல் தத்துவம். அதில், அன்றாடம் காலையில் விழித்தெழுவது தொடங்கி, இரவில் தூங்குவது வரை என்னவெல்லாம் செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது, பல் துலக்குதல்.

ஆயுர்வேதம், பல் துலக்குவதை 'தந்த தாவனம்' என்கிறது. `தந்தம்’ என்றால் பல் என்றும், `தாவனம்’ என்றால் அழுக்குகளை சுத்தப்படுத்துவது என்றும் பொருள். அதேபோல, காலை மற்றும் இரவு என இரு வேளைகளில் பல் துலக்க வேண்டும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. இதனை 'தின ஆரம்ப போஜனந்தம்' என்று கூறுகிறது.

 

பேஸ்ட் என்பது பற்களுக்கு அல்ல; ஈறுகளுக்குத்தான்!

அரச மரம், வேங்கை மரம், கருவேல மரம், புங்கை மரம், வேப்ப மரம், மஞ்சனத்தி, நாயுருவி போன்றவற்றை பல் துலக்கும் குச்சிகளாகப் பயன்படுத்தலாம் என ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, பல்துலக்கும்போது பற்களை தேய்ப்பது மட்டுமே பலரின் வழக்கம். ஈறுகளை கண்டுகொள்வதில்லை. ஆனால், ஆயுர்வேதம் பேஸ்ட் என்பதை பற்களுக்கு அல்ல, ஈறுகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிறது. எனவே, ஈறுகளைத்தான் பேஸ்ட் மூலம் விலக்க வேண்டும். மேலும், பற்களை இருமுறை துலக்குதலும், உணவு உண்ட பின்னர் ஒவ்வொரு முறையும் மிக நன்றாக வாய் கொப்பளித்தலும் மிக மிக இன்றியமையாத ஒன்று.

 

ஆயுர்வேத டூத் பேஸ்ட்

ஈறுகள், பற்களின் பாதுகாப்புக்கு நமக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள்களைக்கொண்டே ஆரோக்கிய பேஸ்ட் தயாரிக்கலாம். இனி, பேஸ்ட் எப்படி தயாரிப்பது என்பதைப் பார்ப்போம். திரிபலா, திரிகடுகம், திரி ஜாதகம் ஆகிய மூன்றின் கலவையே சிறந்த மருத்துவக் குணம் நிறைந்த இயற்கையான பேஸ்ட்டுக்கு உகந்தது. இதில், திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலவையையும் திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவையையும், திரி ஜாதகம் என்பது லவங்கப் பட்டை, லவங்க பத்திரி, ஏலக்காய் ஆகிவற்றின் கலவையையும் குறிக்கும். இந்த ஒன்பது பொருள்களையும் சம அளவு எடுத்துக்கொண்டு, பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடியைத் தேனுடன் சேர்த்துக் குழைத்து, பேஸ்ட்டாகப் பயன்படுத்தலாம்.

திரிபலா, ஈறுகளில் ரத்தப்போக்கைக் குறைக்கும். பற்களை, ஈறுகளுடன் வலுவாக பிணைத்திருக்க உதவும். ஸ்கர்வி (Scurvy) நோய்க்கு சிறந்த நிவாரணி.

திரிகடுகம், உமிழ்நீர்ச் சுரப்பை நன்றாகச் சுரக்கவைக்கும். கன்னங்களின் நொதிகளைத் தூண்டும்.

திரிஜாதகம், வாய் துர்நாற்றத்தைப் போக்கி நறுமணம் கொடுக்கும்.

தேன், வாய் மற்றும் ஈறுகளில் உள்ள புண்களை ஆற்றும்.

இந்தக் கலவை எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு வகை ஆயுர்வேத பேஸ்ட். இது, நாட்டு மருந்துக் கடைகளில், `கடுக்காய் தோல்’ அல்லது `தான்றிக்காய் தோல்’ என்ற பெயர்களிலும் கிடைக்கும்.Trending Articles

Sponsored