மூட்டுவலி, இருமல், தூக்கமின்மை... நிவாரணம் தரும் புடலங்காய் கட்லெட்! #NoOilNoBoilSponsoredதமிழர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் சிறப்பானது. சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை என்று வகைவகையாக உண்பார்கள். கூட்டு என்றதும் உடனே நம் நினைவுக்கு வருவது 'புடலங்காய்'. இது பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. தற்போது பீட்சா, பர்கர், கட்லெட் போன்ற உணவுகளே அதிகமாக விரும்பி உண்ணப்படுகிறது. அதேபோன்று இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு சிற்றுண்டியாக 'கட்லெட்' இருக்கிறது.

எனவே புடலங்காயை வைத்து அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் எப்படி 'கட்லெட்' செய்வது என்பதைப் பற்றியும், அதை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், இயற்கை உணவியல் நிபுணர் படையல் சிவக்குமார் அளித்த தகவல்களின் தொகுப்பு.

Sponsored


தேவையானப் பொருள்கள் :

Sponsored


நீள புடலங்காய் - 1

வேர்க்கடலைப் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

பொட்டுக்கடலை பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்

சீரகத்தூள் - தேவையான அளவு

மிளகுத்தூள் - தேவையான அளவு

இந்துப்பு - தேவையான அளவு

தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி

பீட்ரூட் துருவல் - ஒரு கைப்பிடி

கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் நீளமானப் புடலங்காயை குறுக்குவாக்கில் ஒரு இஞ்ச் அளவுக்கு வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

* நறுக்கிய புடலங்காயின் வளையத்தில் இருக்கும் விதையை நீக்கி, அதை இந்துப்பு கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* ஒரு கைப்பிடி அளவுக்கு தேங்காய் மற்றும் பீட்ரூட்டை தனித்தனியாகத் துருவி தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

* வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை தனித்தனியாக அரைத்துப் பொடியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், வேர்க்கடலைப் பொடி, பொட்டுக்கடலைப் பொடி, சீரகத்தூள், மிளகுத்தூள், பீட்ரூட்            துருவல், கொத்தமல்லித் தழை, இந்துப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்து பூரணம்போலத் தயார் செய்து கொள்ளவேண்டும்.

* இப்போது வளையமாக உள்ள புடலங்காயின் மத்தியில் இந்தப் பூரணத்தை வைத்து நிரப்ப வேண்டும்.

* ஆற்றல்மிகுந்த, வண்ணமயமான, பார்த்தவுடன் சாப்பிடத்தூண்டும் சுவைமிகு 'இயற்கை புடலங்காய் கட்லெட்' தயார்.

புடலங்காயை இயற்கையாக அடுப்பில்லாமல் சமைத்து உண்பதால் குணமாகும் நோய்கள்...

* தூக்கமின்மையால் வரும் தலைவலி, தலைச்சுற்றல்

* கண் புரை

* காதுகளில் சத்தம்

* உதடு ஓரங்களில் வெடிப்பு

* நாக்கில் வெடிப்பு

* படுத்தால் ஏற்படும் இருமல்

* மெதுவான நாடித் துடிப்பு

* செரிமானச் செயல் இழப்பு

* மூட்டுகளில் வலி

* வைட்டமின் 'சி' குறைபாடு

* தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம்

* ஆடும் பற்கள்

* ஆசனவாய் வெடிப்பு

உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துகளும் நம் உணவிலேயே இருக்கின்றன. அதனால்தான் நம் முன்னோர் உணவையே மருந்தாகப் பயன்படுத்தி வந்தனர். நவீனமயமான உணவு வகைகளை உண்ண வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது இயற்கையானதே. ஆனால் மருத்துவக் குணங்கள் நிறைந்த உணவுப்பொருள்களைக் கொண்டு அவற்றைச் செய்யவேண்டும். மேலும், அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் இவற்றைச் செய்து உண்ணும்போது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும். நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.Trending Articles

Sponsored