வளைந்த பற்களா? இனி கவலை வேண்டாம்!  (sponsored content)Sponsoredகுழந்தைகளின் பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், அவர்களுக்கு நிலையான பற்கள் வளரத் தொடங்கும்போதுதான் வெளிப்படையாகத் தெரிகிறது. அதாவது, `அவர்களுக்கு ஏழு வயதாகும்போது...’ என்று கூறலாம்.  குழந்தைகளைப் பற்கள் சீரமைப்பு மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவர்களுக்கு இருக்கும் பற்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு மேலும் இடம் கொடுக்காமல், சரி செய்யவேண்டிய சரியான வயது இதுதான். 
 
பற்கள் சீரமைப்பு மருத்துவர், பின்வரும் பற்களைச் சீரமைக்கும் சாதனங்களைக் கொண்டு அவர்கள் புன்னகையை மீட்டுக் கொடுப்பார்.
 
பட்டைகள் (Bands)
 
அடைப்புகள் (Brackets)
 
கம்பிகள் (Wires)
 
தலையணிகள் (Head Gears)
 
ரீடெய்னர்கள் (Retainers)
 
 பெரும்பாலான பல் மருத்துவர்கள், பற்களைச் சீரமைப்பதில் பயிற்சி எடுத்துள்ளனர். ஆயினும், நுணுக்கமான பல் சீரமைப்புப் பணிகளுக்கு, தேர்ந்த பற்கள் சீரமைப்பு மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

Sponsored 
பற்கள் வளைந்திருப்பது, ஒன்றன் மீது ஒன்று வளர்ந்திருப்பது, அல்லது ‘Bad Bite’ என்று அழைக்கப்படும் உண்பதற்கு ஏற்றவாறு இல்லாத வகையில் மேற்புறப் பற்களும் கீழ்புறப் பற்களும் சீரற்று அமைந்திருப்பது ஆகிய பிரச்னைகள் பற்கள் சீரமைப்பு வகையில் சேரும். இவ்வாறு பற்கள் சீரற்று, வளைந்து, ஒன்றன் மீது ஒன்று வளர்வது மற்றும் சுற்றிக்கொள்வது ஆகியவற்றுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலருடைய வாய், அவர்களின் பற்களின் அளவைவிடச் சிறியதாக இருக்கும். இதனால் பற்கள் நெருக்கமாக நகர்ந்து முன் பின்னாகத் தள்ளப்படுகின்றன. சிலருக்கு மேல் தாடையும் கீழ் தாடையும் ஒரே அளவாக இருப்பதில்லை அல்லது ஒழுங்கற்ற முறையில் பற்கள் வளர்ந்திருக்கும். இதனால் ‘Overbite’ பிரச்னை (மேல் வரிசைப் பற்கள் கீழ் வரிசைப் பற்களிலிருந்து தள்ளி, சற்று முன்புறமாக அமைந்திருக்கும். மேல் தாடை புடைத்துக் காணப்படும்.) அல்லது ‘Underbite’ பிரச்னை (கீழ் வரிசைப் பற்கள் மேல் வரிசைப் பற்களிலிருந்து தள்ளி, சற்று முன்புறமாக அமைந்திருப்பது) ஏற்படும்.
 
பெரும்பாலும், வளைந்த பற்கள், Overbite மற்றும் Underbite பிரச்னைகள் மரபுவழியாக வந்த பண்புகளாகவே இருக்கும். உங்கள் கண்களின் நிறம், கைகளின் நீளம் போன்றவற்றைப்போல. சரியான பருவத்துக்கு முன்னரே பற்களை இழப்பதும் (குழந்தைகள் / பெரியவர்கள்) பற்கள் சீரற்று இருப்பதற்குக் காரணங்கள் ஆகும். பல் மீட்புச் சிகிச்சையின்போது (Filling, கிரவுன்கள் வைப்பது) பற்கள் சரியாகப் பொருத்தப்படாதது; பற்குழிகள் (பல் ஈறு தொடர்பான பிரச்னை); பற்கள் மற்றும் ஈறுகள் மீது தேவையற்ற அழுத்தம் கொடுப்பது; வாய் அல்லது ஈறு புற்று உண்டாவது அல்லது குழந்தைகள் விரல் சூப்புவது, நாக்கை வெளியே தொங்கவிடுவது, மூன்று வயதுக்குப் பிறகும் ‘Pacifier’ பயன்படுத்துவது / நீண்ட நாள்களுக்கு குழந்தைகள் பாட்டிலைப் பயன்படுத்துவது போன்றவற்றால் இது ஏற்படலாம். 
 
நவீன முன்னேற்றங்களால், பற்களை நேராக்குவதும் அவற்றை அழகுபடுத்துவதும் மிகவும் எளிதாகிவிட்டது. பிரகாசமான நிறங்களில் ‘எலாஸ்டிக்குகள்’ மற்றும் வண்ண வண்ணக் கம்பிகள் கட்டுவதும் பற்கள் சீரமைப்பை குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டைப்போலவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும்படியும் செய்துவிட்டது. மேலும், இப்போது ஒழுங்குபடுத்திகள் (Aligners) பயன்படுத்தப்படுகின்றன. இவை எளிதாக கையாளக்கூடியவை. பராமரிப்பதற்கு எளிமையானவை. கண்களுக்குப் புலப்படாத வகையிலும், பற்களைச் சீரமைப்பதில் திறம்படவும் செயல்படுகின்றன. கண்களுக்குப் புலப்படாத வண்ணம் இருப்பதால், இந்த ஒழுங்குபடுத்திகள் சிறுவர்களின் தன்னம்பிக்கையை அதிகப்படுத்தி அவர்கள் புன்னகையை அதிகரிக்கின்றன.
 
உங்கள் குழந்தைகளின் பற்கள் வளைந்திருந்தாலும் அல்லது வேறு ஏதாவது பற்கள் தொடர்பான பிரச்னைகள் இருந்தாலும் பின்வரும் எண்ணுக்குத் தொடர்புகொள்ளுங்கள். 044 49583232 அல்லது என்ற www.pearlsdentistry.com முகவரியில் இணையத்திலும் அணுகலாம்.

Sponsored
Trending Articles

Sponsored