உடல், மனம் ஒன்றிணைக்கும் யோகா! -சர்வதேச யோகா தினப் பகிர்வு #InternationalYogaDaySponsoredஇந்தியாவைப் பொறுத்தவரை, ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமையானது யோகக்கலை. உடல், மனம், அறிவு, ஆன்மிகம் ஆகியவை ஒன்றுபட உதவும் அற்புதக்கலை. இந்து, புத்த மற்றும் சமண சமயங்களில் பெரிதும் மதிக்கப்படும் கலை யோகா. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹரம், தாராணை, தியானம் மற்றும் பதஞ்சலி என்னும் எட்டு அங்கங்களைக் கொண்டது. யோகக் கலைக்கும் புராணக் கதைகளுக்கும் அதிகத் தொடர்பு உண்டு.

இந்தப் பழைமை வாய்ந்த யோகக்கலையைக் கொண்டாடும்விதமாக ஜூன் 21-ம் தேதியை 'சர்வதேச யோகா தினம்' என்று அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. இந்த ஆண்டு, 'ஆரோக்கியத்துக்கான யோகா (Yoga for Health)' என்ற தலைப்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

Sponsored


ஏன் அவசியம்?

Sponsored


உடலை, மனதோடு ஒன்றச்செய்ய யோகா உதவுகிறது. மனம் பற்றிய விரிவான கண்ணோட்டம், மனதில் உண்டாகும் பல எண்ணங்கள், உடல் மற்றும் மனக்கட்டுப்பாடு ஆகியவற்றைக்கொண்டு இயற்கையோடு மனிதனை ஒன்றிணைய உதவுகிறது யோகா. இதை, `மன விஞ்ஞானம்’ என்கிறார்கள்.

மனமே அனைத்து செயல்களுக்கும் அச்சாணி. மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க யோகா உதவும். எந்த நேரத்திலும் பொறுமையைக் கையாளும் மனநிலையைத் தரும். உடல் உபாதைகள் வராமல் தடுக்கவும், ஏற்கெனவே உடலில் உள்ள உபாதைகளைச் சரிசெய்யவும் வழிவகுக்கும். நோய்நொடியற்ற அமைதியான வாழ்வை வாழச்செய்யும்.

பலன்கள்...

யோகா, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் ஏராளமானப் பலன்களை அள்ளித்தருகிறது. மன அமைதி, ஆழ்ந்த தூக்கம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்புச் சக்தி, மனதை ஒருநிலைப்படுத்துதல் என இது தரும் பட்டியல் மிக நீளமானது.

* பரபரப்பான நாளை அழகாக்கும்; மனஅமைதியைத் தரும்.

* நம்மைச் சுற்றியுள்ள எண்ணற்றப் பிரச்னைகளுக்கு முடிவுகட்ட தேவையான மனநிலை மாற்றத்தைத் தரும்

* உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் உற்சாகத்தையும் புத்துணர்வையும் கொடுக்கும்.

* தடைகளற்ற நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.

* முழு உடலும் ஒரு சிறிய இடைவெளியில் செல்லும் அளவுக்கு உடலில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.

* நம்முள் இருக்கும் அச்சத்தைப் போக்கி, தைரியத்தைக் கொடுக்கும்.

* மருந்து, மாத்திரைகள் இன்றி உடல்வலியைச் சரிசெய்ய உதவும்.

* நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். வாழ்நாளை நீட்டிக்கும்.

* முதுமையைத் தடுத்து மனமும் உடலும் இளமையோடு இருக்க உதவும்.

* பொறுமையைக் கற்றுத்தரும்.


 

எந்தப் பிரச்னைகளுக்கு எந்த யோகா செய்யலாம்?

* தலைசுற்றலுக்குத் தடாசனா (Tadasana).

* கண்பார்வை மேம்பாட்டுக்கு சூரிய ஒளிப் பயிற்சி மற்றும் உள்ளங்கைப் பயிற்சிகள்.

* கூந்தல் வளர்ச்சிக்கு உத்தாசனம் (Uttanasana).

* முக அழகைப் பராமரிக்க, ஃபேசியல் யோகா பயிற்சிகள் (Facial yoga).

* விரல்களின் வலிமைக்கு முத்திரைகள் (Mudras).

* நுரையீரல் வலுப்பெறவும் சீரான சுவாசத்துக்கும் பிராணாயாமம் (Pranayama).

* இளமையான சருமத்துக்கு புஜங்காசனம் (Bhujangasana).

* உறுதியான தசைகளுக்குச் சதுரங்க தந்தாசனம் (Chaturanga Dandasana).

* இதயத்தை இதமாக்க, சேது பந்த சர்வாங்காசனம் (Setu Bandha Sarvangasana).

* உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, கபாலபதி (Kapalbhati).

* எலும்புகள் உறுதியாக, திரிகோண ஆசனம் (Trikonasana).

* முதுகுவலியை சரிசெய்ய, கபோடாசனம் (Kapotasana or pigeon pose).

* இடுப்பு மற்றும் முதுகுவலியைப் போக்க, ஸ்வஸ்திகாசனா (Swastikasana).

* தைராய்டுக்கு சர்வாங்காசனம் (Sarvangasana).

* கர்ப்பிணிகளுக்குப் போஸ்ட் நெட்டல் பயிற்சிகள் அல்லது பாத கோணாசனம் (Baddha Konasana).

* மாதவிலக்குப் பெண்களுக்குத் தித்லி ஆசனம் (Titli Asana or butterfly Pose).

* முழங்கால் மூட்டுவலிக்குச் சுகாசனம்.

* உடல் அமைதிக்குச் சர்வாசனம்.

* சீரான செரிமானத்துக்குப் பாலாசனம் (Balasana).

* நோய் எதிர்ப்புச் சக்திக்கு உட்கட்டாசனம் (Utkatasana).


யார் செய்யலாம், யார் செய்யக் கூடாது?

* ஐந்து வயதுக் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் யோகா செய்யலாம்.

* எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டவர்கள் யோகா செய்வதைத் தவிர்க்கலாம். செய்ய அப்படியும் செய்ய விரும்பினால், மருத்துவரின் ஆலோசனை பெற்றுச் செய்யலாம்.Trending Articles

Sponsored