Sponsored
மருத்துவ குணம் அதிகம் நிரம்பிய அக்ரூட் வகை மரங்கள் சிக்கிம், நேபாளம் போன்ற ஹிமாலய பகுதிகளில் மட்டுமே விளைகின்றன. இந்த மரத்தில் கிடைக்கும் கொட்டைகளே வால்நட் எனப்படுகிறது. ருசியான இந்த வால்நட் கொட்டைகள் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. உண்மையில் வயாக்ரா மாத்திரைகளை மிஞ்சச்செய்யும் திறன் கொண்டவை இவை என கிரேக்க நாகரிக காலம் தொட்டே கூறப்படுகிறது. வால்நட்டில் உள்ள ஆல்பா லியோலெனிக் அமிலம் ஆண்களின் உயிரணுக்களை பெருக்கி விருத்தியடையச் செய்கிறது. மேலும், ஆழ்ந்த உறக்கத்தைக் கொடுக்கும் தன்மை கொண்டவை இந்த கொட்டைகள். மூளையை அமைதிப்படுத்துவதோடு, 'டிமென்ஷியா' என்ற ஞாபக சக்தி குறைவு நோயையும் இது வரவிடாமல் தடுக்கிறது.
இதயத்துக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒமேகா 3 அமிலம் அதிகம் கொண்டது வால்நட். இதனால் கெட்ட கொழுப்பை உடலில் குறைத்து, நல்ல கொழுப்பை அளிக்கிறது. மேலும், இதனை பாலில் கொதிக்க வைத்து அருந்தினால் கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது என்றும் பாரம்பர்ய வைத்திய முறைகள் கூறுகிறது. மூளையின் அமைப்பைக் கொண்டுள்ள இந்த பருப்பு உண்மையில் மூளைச்சோர்வை நீக்கி நினைவாற்றலை அதிகரிக்கிறது.
Sponsored
ஊளைச் சதையை போடவிடாத இந்த அதிசய பருப்பு இளைஞர்களுக்கு, குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அழகான கட்டுடலைத் தரும் ஆற்றல் கொண்டது. தோலுக்கு மினுமினுப்பை தந்து சொறி, சிரங்கு, படை போன்றவற்றை குணமாக்கிடவும் செய்வது வால்நட். விலை சற்று அதிகமானாலும் தினம் 10 பருப்புகளை சாப்பிடுவது நல்லது என்கிறது மருத்துவ உலகம்.
Sponsored
Trending Articles
`இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை!' - ஜம்மு தற்கொலைப்படை தாக்குதல் அதிர்ச்சி ரிப்போர்ட்
`மனைவி மாசமா இருக்கா; சிவசந்திரன் இறந்ததை எப்படிச் சொல்வோம்!'- குடும்பத்தினர் கண்ணீர்
இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்
யார் இந்த ஆதில் அகமது தார்?- ஜம்மு தற்கொலைப்படைத் தாக்குதலில் அதிர்ச்சித் தகவல்
Sponsored