பார்வைத்திறன் மேம்படுத்தும், புற்றுநோய் தடுக்கும்... பிரமாத பலன்கள் தரும் பிளம்ஸ்!Sponsoredஆப்பிள், செவ்வாழை, மாதுளை, இலந்தை, செர்ரி போன்ற சிவப்பு நிறப் பழங்கள் வரிசையில் பிளம்ஸ் ஒரு முக்கியமான பழம். இனிப்பு மற்றும் புளிப்புச்சுவையுடன் காணப்படும் இது மலைப்பகுதிகளில் அதிகமாக விளையக்கூடிய பழங்களில் ஒன்று. உலகத்தில் சுமார் 2,000 வகை பிளம்ஸ் பழங்கள் இருந்தாலும், இந்தியாவில் இவற்றின் பயன்பாடு குறைவே. இந்தியாவில் மே மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்தப் பழத்தின் சீசன் காலம். பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் இந்தப் பழம் விளைவிக்கப்படுகிறது. சிவப்பு மற்றும் கருஞ்சிவப்பாகவும் பார்க்க அழகாகவும் காணப்படும் இந்தப் பழத்தில் பெரும்பாலும் சிவப்பு நிறப் பழங்கள் உடலுக்கு ஊக்கமும் உற்சாகமும் தரக்கூடியவை.

Sponsored


Sponsored


பொட்டாசியம், ஃபுளோரைடு, இரும்பு போன்ற தாது உப்புகள் அதிகமாக உள்ள பிளம்ஸ் பழத்தில் வைட்டமின் கே குறைவாக இருந்தாலும், இது ரத்தம் உறைதலுக்கு உதவக்கூடியது. ரத்தத்தை விருத்தி செய்யும்; ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். ரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருள்களைக் கரைக்கும். சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து, மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். மனஅழுத்தத்தைப் போக்கி டென்ஷனைக் குறைக்கும்.

கண்பார்வையைத் தெளிவுறச் செய்யும் சக்தி பிளம்ஸுக்கு உண்டு. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துகள் இருப்பதால், மலச்சிக்கல் குறைபாட்டைச் சரிசெய்யும். மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும் பிளம்ஸ் நோய்த்தொற்றுகளில் இருந்து காக்கும். இதில் வைட்டமின் சி-யின் பங்கு மகத்தானது. வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துகள் பிளம்ஸ் பழத்தில் உள்ளன. ஆகவே, பார்வைத்திறனுக்கு உதவும். சளித்தொல்லையை தவிர்க்கச் செய்யும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோய்களில் இருந்து காக்கும் ஆற்றலும் வைட்டமின் ஏ-வுக்கு உள்ளது. அது பிளம்ஸில் அதிகம்.

பிளம்ஸ் பழங்களைத் தோலுடன் சுவைத்துச் சாப்பிடலாம். சிவப்பு நிறத்துடன் இருப்பதால், இது இதயத்துக்கு சிறந்த டானிக்காகச் செயல்படும். மேலும் முதுமைத் தோற்றத்துடன் காட்சியளிப்பவர்கள் பிளம்ஸ் பழங்களைச் சாப்பிட்டுவந்தால், நல்ல புத்துணர்ச்சியைப் பெற முடியும்; இளமைத் தோற்றத்தையும் தக்கவைத்துக்கொள்ளலாம்.

பிளம்ஸ் பழத்தின் சதைகளை மட்டும் தனியாக எடுத்து, நிழலில் உலர்த்தி, தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

இதில் உள்ள எபிக்கேட்சின் (Epicatachin) என்ற மூலக்கூறு வீரியமிக்க புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது, கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும். இதில், குளோரோஜெனிக், நியோகுளோரோஜெனிக் போன்ற பீனால்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், ஃபிளேவனாய்டுகள் இருப்பதால், மார்பகப்புற்று நோய் செல்களை அழிக்கும் வல்லமை பெற்றது.

பிளம்ஸில் ஃபிளேவனாய்டுகள் இருப்பதால், எலும்புத் திசுக்கள் சிதைவுறாமல் தடுக்கும்; அதனால், இது ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்படாமல் தடுக்கும். இந்த நோய் பெரும்பாலும் வயதான பெண்களைப் பெரிதும் பாதிப்பதால், இந்தப் பழத்தை சாப்பிடுவதன் மூலம் நோயை வராமல் தடுகவும், குணப்படுத்தவும் முடியும்.

இந்தப் பழத்தில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி, கே ஆகியவை குழந்தைகளின் செல் உருவாக்கத்துக்கும் கண் பார்வைக்கோளாறுகளைச் சரிசெய்யவும் உதவுகின்றன. இது, எலும்புகளுக்குப் பலத்தைத் தருவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியை அள்ளித்தருகிறது.

கொடைக்கானல், நீலகிரி, ஊட்டி, குன்னூர் பகுதிகளில் விளையக்கூடிய இந்தப் பழங்கள் இப்போது விற்பனையில் இருப்பதால் அவற்றை வாங்கிப் பயனடைவோம்.Trending Articles

Sponsored