தாமரைப்பூ, செம்பரத்தம்பூ, மருதம்பட்டை... இதயம் காக்கும் தமிழ் மருத்துவ வழிமுறைகள்! #SaveHeartSponsoredஇதயம் காக்க என்ன செய்யலாம்? - இன்று முக்கியமாக எழுந்திருக்கும் கேள்வி. `உலகில் இறப்பவர்கள் இருவரில் ஒருவர், இதய நோயால் இறக்கிறார்‘ என்கிறது ஒரு புள்ளிவிவரம். சரியான நேரத்துக்கு உணவு உண்ணாதது, உடற்பயிற்சி இல்லாதது, ஜங்க், ஃபாஸ்ட் என மாறிவரும் உணவுப்பழக்கம், புகை, மதுப்பழக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படுவது இதய நோய். அதோடு, பிறவிக் கோளாறு காரணமாகவும் இதய நோய் ஒருவரை பாதிக்கலாம். நாம் ஒவ்வொருவருமே இதய நோய் விஷயத்தில் முன்னெச்சரிக்கையோடு இருக்கவேண்டியது அவசியம். இன்றைக்கு இதயநோய்க்கான சிகிச்சைகள் ஆங்கில மருத்துவத்தில் வெகுவாக முன்னேற்றம்பெற்றுவிட்டன. அதே நேரத்தில், இதய நோய்க்கு ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவத்திலும் தீர்வுகள் உள்ளன. அது குறித்து இங்கே விரிவாகப் பார்ப்போம்...

அதிகப்படியாக இதயம் துடிப்பது, வலியோடு மயக்கம் உண்டாவது, நெஞ்சு படபடப்பு, வலி, இதயம் நின்றுவிடுவது... போன்ற அச்சமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது ஆபத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழலில் மருத்துவமனைக்குச் சென்று சேர சிறிது காலதாமதம் ஏற்படத்தான் செய்யும். இந்த இடைவெளியில் நோயாளியின் உயிரைக் காக்க சிறந்த வழிகளில் ஒன்று உண்டு. ஹோமியோபதி கடைகளில் கிடைக்கும் `பயோசால்ட்ஸ்’ எனும் மருந்துகளான காலி பாஸ், கல்காரி பாஸ், நெட்ரும் மூர்  (Kali Phos 6x, Calcar Phos 6x, Natrum Mur 6x) ஆகிய மூன்று உப்புகளையும் ஒவ்வொன்றிலும் பத்து அல்லது இருபது கிராம் வாங்கி, கலந்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு சிட்டிகை மருந்தை நாக்கில்வைத்துச் சப்பிச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதனால் இதய வலி, படபடப்பு குறையும். இதயம் சீராக இயங்க ஆரம்பிக்கும். அப்படி மருந்தைச் சாப்பிட முடியாமல் மயக்கநிலையில் ஒருவர் இருந்தால், அவரின் உதட்டை இழுத்து உள்புறமுள்ள ஈறுகளில் இந்த மருந்தைவைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். ஈறுகள் மருந்தை உள் இழுத்துக்கொள்ளும். இதையடுத்து குணம் தெரிய ஆரம்பிக்கும். மயக்கத்தில் உள்ளவர்களுக்கு மருந்தைக் கரைத்து உள்ளுக்குக் கொடுக்கக் கூடாது. இப்படியான சில இக்கட்டான தருணங்களில், சில வழிமுறைகளின் மூலம் ஆபத்திலிருந்து காத்துக்கொள்ளலாம். இந்தப் பொடியை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது. இதய நோய்களுக்கு என்று மட்டுமல்ல... சிலர் திடீரெனெ மயக்கம் வந்து கீழே விழுந்துவிடுவார்கள். அந்த நேரத்தில், உடல் ஜில்லிட்டு நாடித்துடிப்பு குறைய ஆரம்பிக்கும். அப்போது இந்தப் பொடியை முதலுதவியாக ஈறுகளில் வைத்துத் தேய்த்தால், சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்துவிடும்.

Sponsored


Sponsored


இதயக் கோளாறு உள்ளவர்கள் தொடர்ந்து செய்யவேண்டிய சில வழிமுறைகள்...
 
தினமும் காலை, மதியம், இரவு உணவு சாப்பிடுவதற்கு அரை மணி அல்லது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சூடான அரை டம்ளர் நீரில், ஒரு சிட்டிகை பயோ உப்புக்கலவை மருந்தைப் போட்டு கலக்கி, சப்பிச் சாப்பிட வேண்டும். இதயத் தொந்தரவுகள் குறையும் வரை இதைத் தொடர்ந்து சாப்பிடலாம்.   
           .
இதயம் காக்க சில சித்த வைத்திய முறைகள்...

* நான்கு அல்லது ஐந்து செம்பரத்தம் பூக்களைத் தினமும் காலை வெறும் வயிற்றில் மென்று தின்று அரை மணி நேரத்துக்குப் பின்னர் உணவு சாப்பிடலாம்.

* தாமரைப்பூக்களை புதிதாகப் பறித்து, இதழ்களைத் தனியாக எடுத்து, நிழலில் உலரவைத்து, பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். கிடைக்காதவர்கள் நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் பூவை வாங்கி, சுமார் இரண்டு கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, அரை டம்ளராக வற்றும் அளவுக்கு கொதிக்கவைத்து காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

* மருதம்பட்டையை (நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும்) 200 அல்லது 300 கிராம் வாங்கி வந்து சிறுதுண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். இதில் ஐந்து கிராம் அளவை மண்சட்டி அல்லது சில்வர் பாத்திரத்தில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைக்க வேண்டும். அது கால் டம்ளரானதும் வடிகட்டிக் குடிக்க வேண்டும். பிறகு, மாலையில் அதே வடிகட்டிய சட்டியில் உள்ள பட்டைகளில் மீண்டும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது பாதியாகச் சுண்டியதும் வடிகட்டிக் குடிக்கலாம். இப்படி அந்த ஐந்து கிராம் பட்டைகளை மூன்று அல்லது நான்கு நாள்களுக்குப் பயன்படுத்தலாம். பிறகு அவற்றிலிருந்து அதிக சிவந்த சாரம் இறங்காது. பிறகு அவற்றை நீக்கிவிட்டு, புதிதாக ஐந்து கிராம் பட்டைகளைப் போட்டு மேலே சொன்னபடி பயன்படுத்தலாம்.

மற்றொருமுறையும் உள்ளது. இந்தப் பட்டைகளை மிக்ஸியில் போட்டுப் பவுடராக்கி கால் டீஸ்பூன் அளவுக்கு எடுத்து அரை டம்ளர் தண்ணீரில் போட்டு கால் பாகமாகக் காய்ச்சி வடிகட்டியும் காலை, மாலை குடித்துவரலாம். (ஆரம்பத்தில் இந்தப் பட்டை கஷாயத்தை இருபது மி.லி-யிலிருந்து உயர்த்திப் படிப்படியாக ஐம்பது மி.லி ஆக உயர்த்தலாம். ஏனென்றால் சிலருக்கு வயிற்றைப் புரட்டுவது போலத் தோன்றும், அதன்பிறகு சரியாகிவிடும்).

இந்த முறைகள் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து படபடப்பு, வலி போன்றவற்றுக்கு நல்லது. பேஸ்மேக்கர் (Pacemaker) கருவி வைக்கவேண்டிய அவசியம் வராது. இது ஓர் அனுபவ வைத்திய முறை. எல்லோரும் செய்து பார்த்துப் பயனடையலாம்.

மேற்கூறிய மூன்று முறைகளையும் வாரத்துக்கு ஒன்றாக மாற்றி மாற்றிச் செய்துவந்தால், இதய நோயை வெல்லலாம். இத்துடன் மற்றொரு பழக்கத்தையும் பின்பற்றுவது நல்லது. அது, தினமும் சாப்பிட்டதும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்வது. இது, இதயத்தின் ரத்த அழுத்தம் மற்றும் ஓட்டத்தைச் சரிசெய்யும். ஆனாலும், அடிப்படையான உணவுக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். மீறினால் எந்த மருந்து உட்கொண்டாலும் பலனடைவது கடினம். தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறைகள் வியாதிகளை விலைக்கு வாங்குவதற்குச் சமம் என்பதை நினைவில்கொள்வோம். Trending Articles

Sponsored