பிக்பாஸில் ஓவியாவின் செயல்பாடுகளுக்குக் காரணம் பெர்சனாலிட்டி டிஸ்ஸார்டரா? #BiggBossTamilSponsoredஒரு பொதுவிடத்தில் நின்று அவதானித்தால் பெரும்பாலானோர் 'பிக் பாஸை'ப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக ஓவியா பற்றி. கடந்த சில நாட்களாக ஓவியாவைச் சுற்றியே 'பிக்பாஸ்; நிகழ்ச்சி சுழன்று கொண்டிருக்கிறது.  

ஆரவ் மீது ஈர்ப்புகொண்ட ஓவியா அதை அவரிடம் வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆனால், ஆரவ் அதை ஏற்கவில்லை. மேலும் பிற பங்கேற்பாளர்களும் ஓவியாவைத் தனிமைப்படுத்த, கடந்த சில தினங்களாக தான் என்ன செய்கிறோம் என்பதை மறந்து வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார் ஓவியா. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.   சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பரணி `பிக்பாஸ்' வீட்டின் சுவரைத்தாண்டி குதிக்க முற்பட்டார். அவ்வப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பலரும் `எங்களை வெளியே அனுப்புங்கள்' என்ற குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.  

Sponsored


குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் குடும்பத்தைப் பிரிந்து, வெளியுலகத் தொடர்பு இல்லாமல் ஒரே வீட்டில் அடைந்து கிடப்பதும், மற்றவர்களால் தனிமைப்படுத்தப்படுவதும் பெரும் மனசிக்கலை உருவாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பலரும் அப்படியான மனச்சிக்கலுக்கு உள்ளாகி இருக்க வாய்ப்புள்ளது என்றும், 'எங்களை வெளியே அனுப்புங்கள் என்று குரல் கொடுக்க அதுவே காரணமாக இருக்கலாம்' என்றும்  கூறுகிறார்கள் மருத்துவர்கள்.  

Sponsored


இதுகுறித்து மனநல மருத்துவர் ரங்கராஜனிடம் பேசினோம்.

குடும்பத்தைப் பிரிந்து குறிப்பிட்ட நாட்களுக்கு வெளியுலகத் தொடர்பு இல்லாமல் இருப்பது  இனிமையா?  கொடுமையா ? என்பது தனி நபரின் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் அப்படியான நிலையில் உடன் இருக்கும் பிறரால் புறக்கணிக்கப்படுவது என்பது கண்டிப்பாக மனச்சிக்கலை உருவாக்கும். 

தனிமையில் இரண்டு விதங்கள் உள்ளன. ஒன்று நாமாக விரும்பி தனிமையில் இருப்பது, மற்றொன்று  மற்றவர்களால் தனிமைப்படுத்தப்படுவது. இதில் முதல் வகையால் எந்தப் பிரச்னையும் இல்லை. இரண்டாவது வகை மிகவும் கொடுமையானது; தண்டனைக்குச் சமமானது. முன்பெல்லாம் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது இப்படியான தண்டனை தான். குற்றம்

 செய்பவர்களை சிறையில் அடைப்பதும் அந்த வகையைச் சேர்ந்தது தான்.  இந்த இரண்டாவது வகை உளவியலைத்தான் ஓவியாவுக்கு நேர்ந்த நிகழ்வுகள் பிரதிபலிக்கின்றன. 

கூட்டுக் குடும்பமாக வாழக்கற்றுத் தருவதே  'பிக் பாஸ்'  ஷோவின் நோக்கம் என்றார்கள். ஆனால்,  அப்படியான ஒரு சூழல் அங்கே உருவாக்கிக் கொடுக்கப்படவில்லை என்று தான் தோன்றுகிறது. உடன் இருப்பவர்கள் எல்லாம் போட்டியாளர்களாக இருக்கும்போது, ஒற்றுமை எப்படி சாத்தியமாகும்?  நாம் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையில் சுயநலம் மட்டுமே மேலோங்கி இருக்கும். ஏனென்றால் அது ஒரு சவால்.  ஒற்றுமைக்கு அங்கு இடமில்லை. 

பொதுவாக, வாழும் சூழலே மனிதர்களின் உணர்வுகளையும், மனப்பான்மையையும் தீர்மானிக்கின்றன. சமூகத் தொடர்புகளிலிருந்து ஒதுங்கியே இருப்பவர்கள் டீம் பிளேயராக (Team Player) இருக்க வாய்ப்பில்லை. இந்த மனப்பான்மைக்கு ஆங்கிலத்தில்  'சிஸாய்டு பெர்சானாலிட்டி' (Schizoid Personality) என்று பெயர்.  இவர்களால் சமூகத்துடன் கூடி வாழ முடியாது. தங்களுடைய இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் உணர்வுகளை தயங்காமல் வெளிக்காட்டுபவர்களாகவும் இருப்பார்கள். ஓவியா அப்படியான கேரக்டராக தெரிகிறார்.  

நம்மைச் சுற்றியுள்ள உலகம் நம்மை மட்டுமே கவனிக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடிய குணம் தான். ஆனால், அதுவே அதிகமாகும்போது, அதற்காகவே வாழ வேண்டும் என்ற நிலை ஏற்படும். அப்போது தன்னுடைய இயல்பை மறந்து, மற்றவர்கள் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும் (Centre of Attention) என்ற நிலையை அடைவதற்கு ஆளுமைச் சிதைவு (Personality disorder) என்று பெயர்.  

மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஓவியா இப்படி நடந்து கொள்ளலாம். தன்னுடைய கஷ்டத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைச் சொல்வதாக இருக்கலாம் அல்லது மற்றவர்களை ஏமாற்றுவதாகக்கூட இருக்கலாம்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, சக பங்கேற்பாளர்கள் ஒட்டுமொத்தமாக  தன்னை எதிர்க்கிறார்கள் என்பதைக் காட்டிலும், தான் விரும்பிய மற்றும் தன்னை விரும்பிய நபரும் தன்னை ஒதுக்குகிறார் என்பதால் ஓவியாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருக்கலாம்... என்கிறார் மனநல மருத்துவர் ரங்கராஜன்.  Trending Articles

Sponsored