ஓவியா செய்து கொண்டதாகச் சொல்லப்படும் 'கப்பிங் தெரபி' பற்றி தெரியுமா? #Videoபிக்பாஸ்... பிக்பாஸ்  பிக்பாஸ்... திரும்பிய இடங்கள் எல்லாம் பிக்பாஸ் பற்றிய பேச்சுதான். பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி சில நாட்களாக கொஞ்சம் டல்லடிக்கிறது என்கிறார்கள் இதன் ரசிகர்கள்.  காரணம் 'குயீன் ஆப் பிக்பாஸ்' ஆக இருந்த ஓவியா வெளியேறியதுதான். ஆனாலும் ஓவியா மீதான ஈர்ப்பு குறையவில்லை. அவர் எதைச் செய்தாலும், எங்கே சென்றாலும் அது குறித்த செய்திகள் வைரலாகின்றன.

Sponsored


ஓவியாவுடன் எடுத்த புகைப்படங்களை  சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சிலர் 'பெருமை' தேடிக்கொள்கிறார்கள். அப்படி வெளியான ஒரு படம் இப்போது புதிய செய்திக்கு அடித்தளம் போட்டிருக்கிறது. ஒரு பக்கம் முழுவதும் முடி இல்லாமல், இன்னொரு பக்கம் வாகு எடுத்து சீவி புதிய ஹேர்ஸ்டைலுடன்  இருக்கிறார் ஓவியா.  தலைப்பகுதியில் ஒரு சிகப்பு முத்திரை போல ஒரு தழும்பு இருக்கிறது. " 'கப்பிங் தெரபி' செய்யப்பட்டதற்கான அடையாளமே அந்த  தழும்பு"  என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. 

Sponsored


அதென்ன  கப்பிங் தெரபி(Cupping therapy)? 

Sponsored


'கப்பிங் தெரபி' என்பது கப்பை (Cup) வைத்து செய்யப்படும் பண்டைய கால சிகிச்சை முறை.  இதை மட்டுமே சிறப்பு சிகிச்சையாக அளிக்கும் மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த ஹலினா ரஜிமா அப்படியான கப்பிங் சிகிச்சை நிபுணர் தான். அவரிடம் 'கப்பிங் தெரபி' பற்றிக் கேட்டோம்.

"தமிழகத்தில் இந்த சிகிச்சை முறை பழங்காலம் தொட்டே இருக்கிறது.  'ரத்தம் குத்தி எடுத்தல்' என்று என்று சொல்வார்கள். எகிப்தில்தான் இந்த கப்பிங் சிகிச்சை முறை பிறந்தது. அதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் இன்றளவும் அங்கே  இருக்கின்றன. அதுபோல, கிரேக்கத்தின் தாய் மருத்துவமாக 'கப்பிங் சிகிச்சை'யே இருக்கிறது. கிரேக்க நாட்டின் மருத்துவத்தின் தந்தை(Father of medicine)  என்று அழைக்கப்படும் 'ஹிப்போகிராட்ஸ்' (Hippocrates) கூட அடிப்படையில்  கப்பிங் சிகிச்சை நிபுணர் தான். தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அரபி மொழியில் இந்தச் சிகிச்சை முறைக்கு 'ஹிஜாமா' என்று பெயர். 'ஹிஜாம்'  என்ற சொல்லுக்கு  'உறிஞ்சுதல்' என்று பொருள். 

உலகம் முழுவதும் நிறைய  பிரபலங்கள் இந்தச் சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.  ஹாலிவுட் நடிகை கிவ்யினெத் பால்த்ரோ (Gwyneth Paltrow), அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், 'துப்பாக்கி' திரைப்பட வில்லன் நடிகர் வித்யூத் ஜம்வால் போன்றவர்கள் ள் இந்தச் சிகிச்சை எடுத்துள்ளனர்.   

கப்பிங் சிகிச்சை முறையின் வகைகள் :

பேம்பூ கப்பிங் (Bamboo cupping)

ஐஸ் கப்பிங் (Ice cupping)

பயர் கப்பிங் (Fire cupping)

ஆயில் கப்பிங் (Oil cupping)

சிலிக்கான் கப்பிங் (Silicon cupping)

மேக்னட் கப்பிங் (Magnet cupping)

டிரை கப்பிங் (Dry cupping)

வெட் கப்பிங்(Wet cupping)

இந்த சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்படும்?

நம் உடலில் நான்கு வகையான திரவங்கள் உள்ளன. அவை ரத்தம் ((Blood), சளி (Phlegm), மஞ்சள் பித்தம் (yellow bile) மற்றும் கரும் பித்தம் (black bile). இதில் கரும் பித்தம் தான் நச்சுத்தன்மை உடையது. இது உடலுக்கு பல்வேறு தீமைகளை உண்டாக்குகிறது. இதை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். கை மற்றும் கால் பகுதி, முதுகுப்பகுதி, தோள்பட்டைப்பகுதி, தலைப் பகுதி ஆகிய இடங்களில் இந்த 'கப்பிங் தெரபி' செய்யப்படும். தெரபி செய்யப்படும் இடத்தில் ஒரு கப்பை வைக்க வேண்டும்.  ஏர் பிரசர் மூலமாக கப்பில் உள்ள காற்று வெளியேற்றப்படும். காற்று வெளியேறும் போது கப் தோலை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும். கப்பின் உள்ளே காற்று இல்லாத காரணத்தால் சருமத்தில் சிகப்பு மார்க் விழும். சிறிதுநேரம் கழித்து, கப் அகற்றப்படும்.  இப்போது, மார்க் விழுந்த இடத்தில் ஊசியைகொண்டு துளையிட வேண்டும் (Air line cracking) . மீண்டும் ஏர்பிரசர் மூலமாக அதே இடத்தில் கப்பை பொறுத்தி கீறிய துளைகளின் வழியாக நச்சுக்கள் ரத்தத்தின் மூலமாக வெளியேற்றப்படும். முழுவதுமாக வெளியேறிய பின்பு கப் அகற்றப்படும்.

இந்தச் சிகிச்சையை ஏன் தலையில் செய்கிறார்கள்?

மன அழுத்தம், தூக்கமின்மை, ஏதாவது ஒரே விஷயத்தை நினைத்துப் புலம்பிக் கொண்டிருத்தல் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை தலையில் மேற்கொள்ளப்படும்.

இந்தச் சிகிச்சையின் பலன்? 

கை, கால் வலி, உடல் வலி, தூக்கமின்மை, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, முடக்கு வாதம், மூட்டு வீக்கம், வயிற்றுப் புண், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை, முதுகு வலி மற்றும் மூட்டு வலி, கீழ்வாதம், மாதவிடாய் பிரச்னைகள், கால் நரம்பு வலி, தன்னிச்சையாக சிறுநீர் கழிதல் போன்ற பிரச்னைகளுக்கு இந்தச் சிகிச்சை முறையால் தீர்வு கிடைக்கும்.

நோய் வந்த பின்புதான் இந்தச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கிடையாது. நோய்கள் வருமுன்னே கூட இந்தச் சிகிச்சை மேற்கொண்டு தற்காத்துக் கொள்ளலாம். நம் வீட்டை எப்படி அடிக்கடி சுத்தம் செய்து கொள்வோமோ அது போன்று குறைந்தது ஒரு மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது அனைவரும் இந்தச் சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது " என்கிறார் ஹலினா ரஜிமா.Trending Articles

Sponsored