எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கிடைக்கலேன்னா என்ன..? பிரகாசமான துணை மருத்துவப் படிப்புகள்!Sponsoredநீட் தேர்வு குழப்பம் காரணமாக மருத்துவப் படிப்பு வாய்க்குமா? வாய்க்காதா என்ற குழப்பத்தோடு இருக்கும் மாணவர்களுக்கு குறிப்பிடத்தகுந்த வாய்ப்பு, துணை மருத்துவப் படிப்புகள். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பல்வேறு துணை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. +2 பொதுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்களைத் தெரிவு செய்ய, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்கம் விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

என்னென்ன துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன?

Sponsored


1) B .Pharm - 4 ஆண்டுகள் 

Sponsored


2) B .Sc (Nursing ) - 3 ஆண்டுகள் 

3) B.P.T (Bachelor of Physiotheraphy) - 4 ஆண்டுகள் ( 8 செமஸ்டர்) மற்றும் 6 மாத உறைவிட இன்டர்ன்ஷிப் 

4) B.A.S.L.P  (Bachelor of Audiology and  Speech Pathology) - 4 ஆண்டுகள்  மற்றும் 6 மாத உறைவிட இன்டர்ன்ஷிப்

5) B.Sc (Radiology & Imaging Technology)- 3 ஆண்டுகள் மற்றும் 6 மாத உறைவிட இன்டர்ன்ஷிப்

6) B.Sc (Radio Therapy Technology) -  3 ஆண்டுகள் மற்றும் 6 மாத உறைவிட இன்டர்ன்ஷிப்

7) B.Sc (Cardio Pulmonary Perfusion Technology) 3 ஆண்டுகள்  மற்றும் 1 ஆண்டு உறைவிட இன்டர்ன்ஷிப் 

8) B.O.T (Bachalor of Occupational Theraphy)- 4 ஆண்டுகள் ( 8 செமஸ்டர்) மற்றும் 6 மாத உறைவிட இன்டெர்ன்ஷிப் 

9) B.Optom (Bachalor of Ophthalmology) - 3 ஆண்டுகள்  மற்றும் 1 ஆண்டு உறைவிட இன்டெர்ன்ஷிப்

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய குடியுரிமையுள்ள, தமிழ்நாட்டை சொந்த மாநிலமாகக் கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

B .Sc (Nursing ) படிக்க, 31.12.2017 நிலவரப்படி 17 வயது நிறைவடைந்தவர்களும் 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். , எஸ்.சி, எஸ்.சி.ஏ,  எஸ்.டி பிரிவினர் வயது 35 வரை இருக்கலாம். மற்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க,  31.12.2017 நிலவரப்படி 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

+2-வில்  இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ( அல்லது) இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது ஏதேனும் ஒரு பாடத்துடன் கணிதம் உள்ள பிரிவை எடுத்துப் படித்து 40 விழுக்காடு மதிப்பெண் பெற்று ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

B .Pharm / B.A.S.L.P  படிப்புகளுக்கு +2-வில் குறிப்பிட்ட பாடங்களின் கூட்டு சராசரியாகக் குறைந்தது 40 விழுக்காடும், எஸ்.சி, எஸ்.சி.ஏ,  எஸ்.டி  மாணவர்கள் +2-வில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். பிற படிப்புகளுக்கு  +2-வில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளை எடுத்துப் படித்துத் தேர்ச்சி பெற்றிருப்பதே தகுதியாகும். 

எவ்வாறு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்?

விண்ணப்பித்த மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் +2 வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலப் பாடத்திட்டம் அல்லாத பாடத் திட்டமெனில், மதிப்பெண்கள் நார்மலிசேஷன் செய்யப்படும்.

இடஒதுக்கீடு :

ஒற்றைச் சாளர முறை கவுன்சிலிங் படி, பொதுப்பிரிவினருக்கு 31 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 விழுக்காடும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 விழுக்காடும், ஆதி திராவிடர்களுக்கு 18 விழுக்காடும், பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 30 விழுக்காட்டில், 3.5 விழுக்காடு, முஸ்லிம்களுக்கும், ஆதி திராவிடர்களுக்கான 18 விழுக்காட்டில் 16 விழுக்காடு அருந்ததியர்களுக்கும் ஒதுக்கப்படும்.

எங்கெல்லாம் மேற்கண்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன?

B .Sc (Nursing) 

சென்னை மெடிக்கல் காலேஜ்,

மதுரை மெடிக்கல் காலேஜ் 

செங்கல்பட்டு மெடிக்கல் காலேஜ் 

சேலம் மெடிக்கல் காலேஜ் 

தேனி மெடிக்கல் காலேஜ் 

B .Pharm 

சென்னை, மதுரை, அரசு மருத்துவக் கல்லூரிகள் 

B PT

கே.கே.நகர் காலேஜ் ஆப் பிசியோதெரபி 

திருச்சி பிசியோதெரபி அரசுக் கல்லூரி 

B.A.S.L.P   

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி

B.Sc (Radiology & Imaging Technology)

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, 

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி

B.Sc (Radio Therapy Technology) 

சென்னை மருத்துவக் கல்லூரி

 B.Sc (Cardio Pulmonary Perfusion Technology)

 சென்னை மருத்துவக்கல்லூரி, 

 B.Optom (Bachalor of Ophthalmology) 

சென்னை மருத்துவக் கல்லூரியில் உள்ள ரெஜினால் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்தோமாலஜி அண்ட் ஹாஸ்பிடல் 

இவைதவிர, சுயநிதி, நான்-மைனாரிட்டி கல்வி  நிறுவனங்களின் 65 விழுக்காடு இடங்களும், மைனாரிட்டி நிறுவனங்களின் 50 விழுக்காடு இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படும்.

எத்தனை ஆண்டுகள் படிப்பு? எவ்வளவு கட்டணம்?

B .Sc (Nursing ),  B PT, B.A.S.L.P, B.O.T-  இவை 4 ஆண்டுகால படிப்புகள். மற்றவை 3 ஆண்டுகால படிப்புகள். 

அரசு கல்லூரிகளில், B.Pharm, B.A.S.L.P., B.Sc (Radiology & Imaging Tech), B.Sc (Radio Theraphy), B.Sc (Cardio Pulmonary perfusion Tech) படிப்புகளுக்கு ஆண்டுக்கு ரூ.1200 முதல் ரூ.1750 ஆகும்.  

B.Pharm, B.Sc (Nursing), B.P.T, B.O.T போன்ற படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு முறையே, ரூ.38,000, ரூ.40,000, ரூ.33,000, ரூ.33,000 ஆகும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

விண்ணப்பம் மற்றும் விவரங்களை 23.08.2017 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு “The Secretary, Selection Committee, Kilpauk, Chennai 104 என்ற பெயரில் எடுக்கப்பட்ட 400 ரூபாய்க்கான வரைவோலையையும் இணைத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி, எஸ்,சி,ஏ, எஸ்.டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை. முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள் 100 ரூபாய்க்கான வரைவோலை இணைத்தால் போதும். சிறப்புப் பிரிவினர் அதற்குறிய சான்றிதழை இணைக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை நேரிலோ அல்லது அஞ்சலிலோ 'THE SECRETARY, SELECTION COMMITTEE, 162 – EVR PERIYAR HIGH ROAD, KILPAUK, CHENNAI-10'  என்ற முகவரிக்கு 24.08.2017-க்குள் சேர்க்க வேண்டும்.

முக்கிய நாட்கள்:

விண்ணப்பம் பெற இறுதி நாள் :23.08.2017 (பிற்பகல் 5 மணி வரை) 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் வந்தடைய வேண்டிய இறுதி நாள்: 24.08.2017 (பிற்பகல் 5 மணி வரை) 

தரவரிசை வெளியீடு : 06.09.2017

கலந்தாய்வு : செப்டம்பர் 2017 - இரண்டாம் வாரம் 

மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்.                                      Trending Articles

Sponsored