நயன்தாரா கடிதம், ஆரத்யா குறும்பு, ஜாலி சமந்தா, விருஷ்கா செல்ஃபி...பிரபலங்களின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்! #VikatanPhotoStory #NewYearEve Sponsoredபுத்தாண்டு பிறந்துவிட்டது. குடும்பத்துடன் லூட்டி, நண்பர்களுடன் பார்ட்டி என ஒவ்வொரு வகையில் புத்தாண்டைக் கொண்டாடியிருப்பீர்கள். நாம் திரையில் ரசிக்கும் பிரபலங்களில் சிலர் புத்தாண்டுக் கொண்டாட்டம் எப்படி இருந்தது? அதுபற்றிய தொகுப்பு இதோ... 


 

Sponsored


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு 2017-ம் ஆண்டு சிறப்பாக அமைந்தது. 'டோரா', 'அறம்', 'வேலைக்காரன்' எனக் கெத்து காட்டினார். அந்த மகிழ்ச்சியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, இந்தப் புத்தாண்டில் 'அறம்' திரைப்படம்போல சமூக அக்கறைகொண்ட திரைப்படங்களில் நடிக்க விரும்புவதாக, தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார் நயன். 

Sponsored


 நடிகை ஆண்ட்ரியா புத்தாண்டு கொண்டாட, ஸ்காட்லாண்ட் மற்றும் லண்டன் சென்றிருக்கிறார். லண்டனின் டவர் பிரிட்ஜ் உள்பட பல இடங்களை ரசித்து புத்தாண்டை வரவேற்றுள்ளார். 

PC: instagram.com/amitabhbachchan

'பாலிவுட் லெஜண்ட்' அமிதாப் பச்சன், தன் பேத்தி ஆரத்யாவுடன் புத்தாண்டை அட்டகாசமாகக் கொண்டாடியதை, ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தக் குட்டி ஐஸ்வர்யா ராய், தன் தாத்தா தலையில் குட்டி கிரீடத்தை வைத்து குறும்பு செய்ய, அதனை ரசித்து செல்ஃபி எடுத்திருக்கிறார் அமிதாப்ஜி. 

PC: instagram.com/samantharuthprabhuoffl

தன் காதல் கணவர் நாக சைந்தன்யாவை கரம் பிடித்த நடிகை சமந்தா, அவருடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, 'இதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகச் சரியான விஷயம்' என உருகியிருக்கிறார். 

PC: twitter.com/imVkohli

கடந்த ஆண்டு இந்தியாவே கொண்டாடிய பிரபல ஜோடி, விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா. தென்னப்பிரிக்காவுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்றிருக்கும் விராட் கோலி, அனுஷ்காவுடன் கேப்டவுனில் எடுத்துக்கொண்ட செல்ஃபியை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


PC:instagram.com/aliaabhatt

பாலிவுட் நடிகை அலியா பட், புத்தாண்டு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பே தன் தோழிகளுடன் இந்தோனேஷியாவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டார். அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். 

PC: instagram.com/theshilpashetty

எல்லாரும் பார்ட்டி, பயணம் என்றிருக்க, நடிகை ஷில்பா ஷெட்டி துபாயில் யோகா செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 


 

இதற்கெல்லாம் ஹைலைட்டாக அமைந்தது, சச்சின் டெண்டுல்கரின் புத்தாண்டுக் கொண்டாட்டம். தன் நண்பர்களுக்காக பார்பிக்யூ சிக்கன் சமைக்கும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார். அது, ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல்!Trending Articles

Sponsored