ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? உச்ச நீதிமன்றம்Sponsoredமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்பதை எப்படி ஏற்கமுடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட ஏழு பேரை குற்றவாளிகள் என கடந்த
1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கு நடைபெற்று 10 வருடங்களுக்கு மேலாகியும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தற்போது வரை சிறையில் உள்ளனர். இதில், குறிப்பாக பேரறிவாளனின் விடுதலை தொடர்பாகப் பல வழக்குகள் பதிவாகின. இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

Sponsored


தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, பேரறிவாளனை விடுதலை செய்வது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும்,  இல்லையெனில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை  செய்யும் எனவும் கூறியிருந்தார். பேரறிவாளனின் விடுதலையை மறுத்த மத்திய அரசு,ஜெயலிதாவின் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

Sponsored


இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தைப் படித்துக்காட்டி, மின்னணு டிப்ளோமா படித்த பேரறிவாளனுக்கு, 9 வாட் பேட்டரி கொண்டு வெடிகுண்டு தயாரிக்கப்படும் என்பதுகூட தெரியாதா எனப் பேரறிவாளனின் வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்பதை எதன் அடிப்படையில் ஏற்க முடியும், பல்வேறு தருணங்களில் விடுதலைப்புலிகள் சார்ந்த நபர்களுடன் பேரறிவாளனுக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறது, விடுதலை புலிகளின் அனுதாபியாக பேரறிவாளன் உள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துக்காக இப்போது தீர்ப்பை மாற்ற வேண்டுமா? எனப் பல கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த பேரறிவாளன், நான் வாங்கிக்கொடுத்த பேட்டரியால்தான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதா என்பது இன்னும் முடிவாக வில்லை எனக் கூறியுள்ளார்.Trending Articles

Sponsored