டிரைவிங்கின்போது செல்போன் பேசினால் லைசென்ஸ் ரத்து! நீதிமன்றம் அதிரடிSponsoredசாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் வாகனம் ஓட்டிகள் செல்போனில் பேசியது கண்டறியப்பட்டால், அவர்களது லைசென்ஸை ரத்து செய்யும்படி போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோபால்கிருஷ்ணன் வியாஸ் மற்றும் ராம்சந்திரசிங் சலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ஆஜரான ராஜஸ்தான் மாநில போக்குவரத்துத்துறை கூடுதல் ஆணையர், மாநிலத்தில் பெருவாரியான நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவதாகவும், இதனாலேயே அதிகளவிலான விபத்துகள் நடப்பதாகவும் கூறியிருந்தார். ஆணையரின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள், செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்குபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை, விசாரணைக்குப் பின் ரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைக்குக் கொண்டுவர மாநிலப் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டனர். இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டதாகும். ஆனால், பெரும்பாலான விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் செல்போன் பயன்படுத்துவதே காரணம் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துபவர்கள், மற்றவர்களைவிட 4 மடங்கு விபத்தில் சிக்கும் அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதார இயக்கம் எச்சரிக்கை மணி அடிக்கிறது. 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored