'சீர்கெட்ட காலநிலை மாற்றம்!' - இந்தியாவை எச்சரிக்கும் உலக வங்கிSponsored'இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்குக் காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுக்கும்' என எச்சரித்துள்ளது உலக வங்கி. 

உலகம் முழுவதும் பருவநிலைகளில் அதிர்ச்சிதரத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பருவகாலத்தில் சரியாக மழை பெய்யாமல் இருப்பது; கோடைக்காலங்களில் அதிகரிக்கும் வெப்பநிலை எனச் சீர்கெட்ட காலநிலை மாற்றத்தை அதிர்ச்சியோடு கவனித்துவருகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். இதனால், உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படக்கூடிய விளைவுகள்குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது உலக வங்கி. `செளத் ஆசியா ஹாட் ஸ்பாட்ஸ்'  என்ற தலைப்பில் வெளியான இந்த ஆய்வறிக்கையில், `இந்தியாவில் வாழும் மக்களின் வாழ்வாதாரம், 2050-ம் ஆண்டுக்குள் சரிவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன. மாறிவரும் பருவநிலை மாற்றத்தால், விவசாயம் பாதிக்கப்படும். இதனால், உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். அதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தால் இந்திய மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Sponsored


இந்தியாவில் உள்ள மத்திய, வடக்கு மற்றும் வட மேற்குப் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல, மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரநிலை 9 சதவிகிதம் வரை சரியக்கூடும். மேலும், ராஜஸ்தானில் 6 சதவிகிதமும், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா ஆகிய மாநிலங்களில் 4 சதவிகிதமும் ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 3 சதவிகிதமாகவும் மக்களின் வாழ்க்கைத் தரநிலை குறையும். இதனால், 60 கோடி மக்கள் பாதிப்படைவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், இந்தியாவின் வெப்பநிலை 1 டிகிரி முதல் 2 டிகிரி வரை அதிகரிக்கும்' என கணித்துள்ளனர். 

Sponsored
Trending Articles

Sponsored