”டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்குப் பொருந்தாது..!” வாட்ஸ்அப்பில் கிரண்பேடி தகவல்



Sponsored



'ஆளுநர் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு புதுச்சேரிக்குப் பொருந்தாது' என்று ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி முதல்வருக்குப் பதிலடிகொடுத்துள்ளார். 

ஆளுநர் அதிகாரம் தொடர்பாக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் கடந்த 2017 டிசம்பர் மாதம் இருதரப்பு வாதங்களும் நிறைவுபெற்றிருந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷண் ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், “யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அங்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநர் என்பவர், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் எந்திரமாக இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் எதுவும் கிடையாது. அமைச்சரவையில் சிபாரிசுப்படிதான் செயல்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

Sponsored


Sponsored


அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ”உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கு 100-க்கு 110 சதவிகிதம் பொருந்தும். அமைச்சரவை எடுக்கும் முடிவை அனுப்ப வேண்டுமே தவிர, அதில் கை வைக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. நான் சொன்ன இவை அனைத்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பிரதிபலித்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு புதுச்சேரிக்குப் பொருந்தாது என்று பொருள்படும் விதமாக, சில தகவல்களைத் தனது வாட்ஸ்அப்பில் செய்தியாளர்களுக்கு அனுப்பியிருக்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. அதன்படி, டெல்லி அரசியல் சாசன சட்டம் பிரிவு 239AA-ல் குறிப்பிட்டுள்ள ஷரத்துக்களையும், புதுச்சேரி சட்டப்பிரிவு 239A-ல் இருக்கும் ஷரத்துக்களையும் அருகருகே வைத்து ஒப்பிட்டுக்காட்டியிருக்கிறார். அதனுடன் ’டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்குப் பொருந்தாது’ என்ற தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியையும் இணைத்து அனுப்பியிருக்கிறார். அதன்மூலம் புதுச்சேரியில் மீண்டும் தனது கொடிதான் பறக்கும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார், கிரண்பேடி.



Trending Articles

Sponsored