ப்ரியா வாரியார் - ராகுல் மிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி...! ஹேய் சூப்பரப்புSponsoredமக்களவையில் தற்போது நடைபெற்று வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் அனல் பறக்கும் விவாதமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ராகுல் காந்தியால் இன்றைய மக்களவை சூழலே தலைகீழாகிவிட்டது.


 

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் இது. முதலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தெலுங்கு தேசம் எம்.பி ஜெயதேவ் கல்லா, மோடி அரசுக்கு எதிராக அடுக்கடுக்காக குற்றங்களைச் சுமத்தினார். கண்டிப்பாகப் பா.ஜ.க உறுப்பினர்கள் சற்று ஆட்டம் கண்டிருப்பார்கள்.

இதையடுத்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி `முழுசா சந்திரமுகியா மாறியிருக்க கங்காவ பார்’ என்னும் அளவுக்கு ஆவேசமாகப் பேசினார்.  `என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும். ஆனால், அதை அவர் தவிர்க்கிறார்’, பிரதமரின் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது’, `நீங்கள் என்னை பப்பு என்றழைக்கலாம். ஆனால், உங்கள் மீது எனக்கு எந்தவித வெறுப்பும் இல்லை’.. இவை ராகுலின் இன்றைய வைரல் வசனங்கள். அனைத்தையும் அமைதியாக கவனித்துக்கொண்டிருந்தார் மோடி. ராகுலின் ஒரு சில விமர்சனங்களுக்கு சிரிக்கவும் செய்தார்.

Sponsored 

Sponsored


ராகுலின் ஆவேசப் பேச்சு முடிந்ததும் அனைவரும் எதிர்பார்க்காத வண்ணம் ஒரு காட்சி அரங்கேறியது. வேகமாக மோடியின் இருக்கையை நோக்கி வந்த ராகுல் காந்தி, மோடியைக் கட்டித்தழுவிவிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். முதலில் செய்வதறியாது முழித்த மோடி, சுதாரித்துக்கொண்டு ராகுலை தட்டிக் கொடுத்தார். அவையில் கைதட்டல்கள் ஒலித்தன.


 

ராகுல் அதோடு விடவில்லை. தன் இருக்கைக்குச் சென்றதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பக்கம் பார்த்து குறும்பாகக் கண்ணடித்தார். 


 

இதில் சோகம் என்னவென்றால், ராகுல் ஆவேசம் பொங்க, பக்கம் பக்கமாக எழுதிவைத்த உரையைப் பேசியதைவிட அவரின் செய்கைகள் உலகளவில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. ராகுல் உரை முடிந்த சற்று நேரத்தில் ட்விட்டரில் ராகுலின் மோடியைக் கட்டித்தழுவும் வீடியோ, கண்ணடிக்கும் வீடியோ ஆகியவை வைரலாகிவிட்டது.

ராகுல் காந்தி மோடியைக் கட்டித்தழுவும் புகைப்படத்துக்கு வந்த மீம் வசனங்கள்..  `உங்களால் Convince செய்யமுடியவில்லை என்றால், அவர்களைக் குழப்பி விடுங்கள்’, `கோவா ட்ரிப்புக்கு ஓகே சொன்ன தந்தையைக் கட்டித்தழுவும் மகன்’ இன்னும் நிறைய மீம்ஸ் ட்விட்டரில் பகிரப்பட்டு வருகின்றன.


 

கண்ணடிக்கும் காட்சி ஒன்றால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமான மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் புகைப்படத்துடன் ராகுல் காந்தியின் புகைப்படத்தை வைத்தும் மீம்ஸ்கள் குவிகின்றன. அதில் இந்த வீடியோ ஹைலைட்.. 

எது எப்படியோ பா.ஜ.க-வுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை உலகளவில் ட்ரெண்டாக்கிவிட்ட பெருமை ராகுல் காந்தியையே சேரும்! Trending Articles

Sponsored