தண்டவாளத்தில் புகுந்த வெள்ளநீர்... நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரயில்Sponsoredஒடிசாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கிய ஹிராகந்த எக்ஸ்பிரஸ் ரயில் ராயகாடா மாவட்டத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

Photo Credit: ANI

Sponsored


ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புவனேஸ்வர் - ஜலந்தர்பூர் செல்லும் ஹிராகந்த எக்ஸ்பிரஸ் ராயகாடா மாவட்டத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது. மழை தீவிரமாக இருந்ததால் ரயில் குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்டது. இந்தநிலையில் திடீரென ரயில்வே தண்டவாளத்தில் வெள்ளநீர் புகத் தொடங்கியது. நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியதால் ரயிலை முன்நோக்கி இயக்க இயலவில்லை. சிறிது நேரத்தில் தண்டவாளம் முழுவதும் நீரில் மூழ்கியது. இதையடுத்து, ரயில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டது. புவனேஷ்வர்- ஜலந்தர்பூர் இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அவ்வழியாகச் செல்லும் பல்வேறு ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. கொட்டும் மழையில் அப்பகுதி மக்கள் குடைகளை பிடித்துக்கொண்டு ரயிலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். கல்யாணி நதியின் கரை உடைந்ததால் வெள்ள நீர் தண்டவாளப் பகுதியில் புகுந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

Sponsored


வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஜூலை 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஒடிசாவில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.Trending Articles

Sponsored